Saturday, 23 May 2020

வடமொழியும் தென்தமிழும் -பகுதி--2

ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் போற்றி பாடி உள்ளனரா்.

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்
இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

"வடமொழியும் ,ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் "

"மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
    முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
    அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே"

"ஓதிய ஞானமும் ஞானப் பொருளு மொலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணும்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ
டாதியு மந்தமு மானவை யாற னடித்தலமே."

"மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழுமுட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே "

‘’அவிழ்க்கின்றவாரும், அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டு உயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.’’

“வானவன் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் ஆனைந்தும் ஆடினான் காண் ஐயன்”

‘’வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்
தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

"ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே."

‘’கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ’’

‘’இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வாய்ப்ப
இரு மொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசை பரப்பு
மிருமொழியுமான்றவரே தழீஇயனாரென்றாலிவ்
விருமொழியு நிகரென்னு மிதற்கையமுளதேயோ’’

"தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்".
தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவது சிவனையே என்பது அவருக்குப் பின்னோர் வந்த பாடலில் மேலும் உறுதிப்படுத்தப்படும்.

வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் (அப்பர்—ஆறாம் திருமுறை)

முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (அப்பர்)
தமிழ் சொல்லும் வடசொலுந் தாணிழற்சேர (தேவாரம்)

மந்திபோல திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் தெரிகிலா
அந்த்தகர்க்கு எளியேன் இலேன் – சம்பந்தர் தேவாரம்
(இந்தப்பாடலில் தமிழ் சம்ஸ்கிதரும் ஆகிய இரண்டின் பெருமையையும் அறியாதோரை குரங்கு, குருடர் — என்பார் சம்பந்தர்)


கம்பர் தரும் சான்று
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)

தமிழ் மொழியை நெற்றிக் கண் கொண்ட சுடர்க் கடவுள் சிவ பெருமான் தான் தந்தான் என்பதை கம்பன் பட்டவர்த்தனமாகப் பாடிவிட்டான்.

அகத்தியன் பற்றிக் கம்பர் கூறியவை:
‘’தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தான்’’ (சலதி = கடல்)
‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

பரஞ்சோதி முனிவர் தரும் சான்று


வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

சிவஞான முனிவர் கருத்து
இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலி
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம்? என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.

‘’வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்
தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்              தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்            குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்                                                      கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்.                         –பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. 

“ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை
மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளுனுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”
என்று பாடியுள்ளார். பாரதிக்கும் மேலான தமிழன் எவரேனும் உண்டோ?
அவரே உயர் சம்ஸ்கிருத மொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்னை சிவ பெருமான் படைத்தார்  என்று சொல்லுகிறார்.

சுமேரியாவில் ‘’ஊர்’’ என்ற ஒரு இடம் உள்ளது. இது தமிழில் வரும் ‘’ஊர்’’ என்பதைப் போலவே இருப்பதாக எண்ணி தமிழர்கள் மகிழ்வர். இது புரம், புரி என்பதன் திரிபு என்றும் வட இந்தியா முழுதும் ஜெய்ப்பூர், உதய்பூர், நாக்பூர் என்று பல ‘’ஊர்’’கள் காஷ்மீர் வரை பரவிக் கிடப்பதால் இது சம்ஸ்கிருதமே என்றும் சொல்லி வேறு சிலர் மகிழ்வர். உண்மையில் ஒரு மொழி எப்படி இரு வகையாகப் பிரியும் என்பதற்கு இது சரியான எடுத்துக் காட்டு. அதாவது இச் சொல்லுக்கான மூலம் ஒன்றே. அது தமிழில் ஊர் என்றும் சம்ஸ்கிருதத்தில் புரம் என்றும் கவடு விட்டுப் பிரிந்தது.

இன்னொரு எடுத்துக் காட்டு மூலம் இதை விளக்குகிறேன். ஆங்கிலத்தில் எண் 1 என்பதற்கு ‘’ஒன்’’ என்பர். இது தமிழ் ‘’ஒன்று’’க்கு நெருக்கமானது. ஆனால் சம்ஸ்கிருதத்திலோ ‘’ஏகம்’’ என்பர். ஆங்கிலத்தில் எண் 8 என்பதற்கு ‘’எயிட்’’ என்பர். இது தமிழ் ‘’எட்டு’’ என்பதற்கு நெருக்கமானது. சிறிது ஆழமாகப் போய்ப் பார்த்தால் ‘ஒன்’ என்பது ‘யுன்’, ‘ஐன்’ என்று மாறி ‘ஒன்’ என்றாயிற்று என்பர். இதே போல ‘எட்டு’ என்பது ‘ஆக்டோ’, ‘அஷ்ட’ என்பதாக மாறி ‘’எயிட்/அயி’’ட் ஆயிற்று என்பர். ஆக ஒரு மூலச் சொல் இப்படி இருவகையாகப் பிரியமுடியும் என்று தெரிகிறது.

ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்
மீன், நீர், மயில் (மயூர) போன்ற தமிழ் சொற்கள் ரிக் வேதத்தில் இருப்பதாகவும், தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காலம், உலகம், மனம், காமம் முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் சொல்லுவர். இதை எதிர்ப்போர் இவை எங்கள் மொழியில் இருந்து அங்கே சென்றவை என்று வாதிடுவர். உண்மையில் சில சொற்கள் காலத்தையும் மீறி உரு மாறாமல் இருந்ததால் இவைகளை இப்போது எந்த மொழியில் புழங்குகிறதோ அந்த மொழிச் சொல் என்று நாம் வாதாடுகிறோம். ஆனால் இவை இரு மொழிக்கும் பொதுவான சொற்கள் என்பதை அறிந்தால் இரு மொழிக்கு இடையில் உள்ள பிரிவினைக் கோடு மறைந்து போகும்.தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் பாவித்து இரு மொழி கற்போம் !!


“சைவசமயம் நமக்கு எல்லாம் தந்துள்ளது சைவ சமயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று பாருங்கள்”
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_10.html

No comments:

Post a Comment