Sunday, 3 May 2020

பலநூறு விடுதலை இயக்கங்களை அழித்த வல்லரசுகளுக்கு ஒரேயொரு கொரோனாவை வீழ்த்த முடியவில்லை, ஏன்?

உலகினால் பல விடுதலை போராட்ட அமைப்புகள் அழிக்கப்பட்டமைக்கு அவர்களின்  கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் அரசியல்,பொருாதார முறமையில் அமைக்கப்பட்டு இருந்ததே காரணமாகும்.

இலங்கையில் இருமுறை லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் அழிக்கப்பட்டு இருந்ததை வரலாற்று ரீதியாக அறிந்து கொள்ள முடியும்.

1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது கம்யூனிச நாடுகள் தங்களின் கம்யூனிச கொள்கைகள் உலகின் முன் தோற்கடிக்கப்படும் என்பதனை உணர்ந்த காரணத்தால் ஜே.வி.பியின் கம்யூனிசத்தை கைகழுவி விட்டதன் காரணமாக  நாற்பதுநாயிரத்திற்கு மேற்பட்ட பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும்  கொல்லப்பட்டார்கள். 

தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக் கப்பட்டு இருந்த காரணத்தால்  லெனினியம், மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம் கொள்கைகளை கொண்ட நாடுகள் தங்களின் கொள்கைகள் உலகின் முன் தோற்கடிக்கப்படும் என்பதனை உணர்ந்த காரணத்தால் சோசலீச தமிழ் ஈழத்தை  கைகழுவி விட்டதன் காரணமாக   ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட  சோசலீச வாதிகளை முள்ளிவாய்காலில் உலகம் சூழ்ந்து நின்று அழித்தது.

ஆனால் கொரோனாவுக்கு லெனினியம், மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம்  கோட்பாடுகளை கடந்து நிற்பதன் காரணமாக உலகம் சூழ்ந்து நின்று அழிக்க முடியவில்லையே.

அருளகம்.

No comments:

Post a Comment