திராவிட சூழ்ச்சிகள் என்ற இந்த தொடரில் திராவிடர்கள் என்ற போர்வையில் பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு செய்த நன்மை தீமைகளை பற்றி விரிவாக பார்க்க போகிறோம்.
இந்த தமிழ் இன அழிப்பாளர்களுடன் தமிழீழ போராட்ட இயக்கங்கள் கூட்டு வைத்துக் கொண்டு மாண்டு கொண்டதை தவிர கண்டது வேறு ஒன்றும் இல்லை.
தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் தொல்காப்பியர் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்" (தொல்.1336)
" வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே. "
வடக்கில் வேங்கட மலையும் தெற்கில்குமரியாறும் கிழக்கில் வங்கக் கடலும்தெளிவாய்த் தெரிந்த எல்லைகளாம். மேற்கில் எதுஎல்லையெனின், அது குடமலைத் தொடரே.அக்காலத்தில் சேரநாடு திருச்சிராப்பள்ளிமாவட்டக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு,பெரும்பாலும் குடமலைக்குக் கிழக்கேயே இருந்தது.அம் மலைத்தொடருக்கு மேற்கில் இருந்த நிலம், மிகவொடுங்கித் துறைநகர்களுக்கன்றி ஒரு நாட்டுமக்கள் அனைவரும் வதியத்தக்கபரப்புள்ளதாயிருந்ததில்லை. பிற்காலத்திலேயேமேல்கரை நிலப்பகுதி விரிவடைந்ததாகத்தெரிகின்றது. இதையே, பரசுராமர் தாம்தவஞ்செய்தற்கு இடம் வேண்டிக் கடல்மீதுஅம்பெய்ய, அது சற்றுப் பின்வாங்கி இடந்தந்ததுஎன்னுங் கதை குறிக்கும். பரசுராமர் அங்குச்சென்றபின், இயற்கையாகக் கடல் ஒதுங்கி நிலம்விரிவடைந்தது என்பதே உண்மைச் செய்தி.
பாட்டுக்கொரு புலவன் பாரதி தமிழ்நாட்டுக்கு உரிய எல்லையைத் தம் கவிதையில் சுட்டியுள்ளார்.
‘நீலத் திரைக் கடலோரத்திலே - நின்று
நித்தம் தவம்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு’
தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு எல்லைகளைக் குறித்துள்ளார். தெற்கெல்லை ‘குமரி’ என்றும், வடக்கெல்லை ‘மாலவன் குன்றம்’ என்றும் பாரதியாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பண்டைய தமிழ் மன்னர்கள் பண்டைய தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்டதாகப் புறநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு அவர்கள் ஆளும்போது அவர்களுடைய ஆளுகைக்குட்பட்ட எல்லைகளையும் பழந்தமிழக எல்லைகளாகச் சுட்டப்படுகின்றன.
‘வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்’ - (புறம்.6)
என்று காரிகிழார் என்ற புலவர் தமிழ் மன்னர்கள் ஆண்ட பகுதிக்குட்பட்ட எல்லைகளை வரையறுத்துள்ளார். வடக்கு எல்லை பனிபடர்ந்த வேங்கடம் எனவும், தெற்கு எல்லை குமரி எனவும், கிழக்கும் மேற்கும் கடல் எனவும் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.
"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்" சிலப்பதிகாரம்
(நெடியோன் குன்றம் - திருமாலவன் குன்றம், வேங்கட மலை, திருப்பதி; தொடியோள் - குமரி; பௌவம் - கடல்; வரம்பு - எல்லை.)
தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை (புறநானூறு,17:1-2)
(வடபெருங்கல் - வேங்கடமலை; குண - கிழக்கு; குட - மேற்கு.)
புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை (மதுரைக்காஞ்சி:70-71) என்று தமிழகத்தின் எல்லையைச் சுட்டியுள்ளார்.
தமிழகத்தின் எல்லை - அன்று
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று பனம்பாரனார் பழந்தமிழகத்தின் நிலப்பரப்பின் எல்லையை மிகத் தெளிவாகவும் மிகச் சரியாகவும் வரையறுத்துக் கூறுவார். பனம்பாரனார் குறித்துள்ள எல்லை பழந்தமிழக எல்லையாகும்.
தமிழகத்தின் எல்லை - இன்று
இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள நிலப்பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது. இதன் வடக்கே ஆந்திர மாநிலமும், மேற்கே கேரள மாநிலமும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும், கிழக்கில் வங்காள விரிகுடாவும் தற்போதைய எல்லைகளாக அமைந்துள்ளன. இவ்வெல்லைகளுக்கு உட்பட்ட தமிழகத்தின் மொத்தப் பரப்பளவு 1,30,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். வடக்கேயுள்ள வேங்கடமே (திருப்பதி) பழந்தமிழக எல்லையென்பதைத் தொல்காப்பியப் பாயிரமும், சங்க இலக்கியமும் சுட்டுகின்றன. அன்று வேங்கடம் உள்ளிட்ட தமிழகத்தின் எல்லை இன்று வேங்கடம் நீங்கிய தமிழகத்தின் எல்லையாயிற்று என்பதே வேறுபாடு.
கம்பன் என்ன சொல்லுகிறான் என்று பார்ப்போம்; தொல்காப்பிய காலத்துக்கு மிகவும் பின்னால் வந்தவன் கம்பன். அவனும் வட வேங்கட மலையே (திருப்பதி-திருமலை) தமிழ் நாட்டின் எல்லை என்பான்:-
"வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி
நான் மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்
நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு
புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த
மெய்யேபோல் பூத்துநின்ற
அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய
வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ"
பொருள்:-
வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும், ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்.
.
இன்றைய தமிழகம் தெற்கில் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டாரம், கேரளத்திடம் பறி கொடுத்தது.
நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு பகுதியில் சில கிராமங்கள், கர்நாடகத்திடம் பறி கொடுத்தது.
கொள்ளேகால், கோலார் பகுதிகள், சித்தூர் ,நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, பழவேற்காடு ஏரியில் சில பகுதிகள் போன்றவற்றை இன்றைய தமிழகம் ஆந்திரத்திடம் பறி கொடுத்தது.
இதனால் ஆந்திரத்திடம் பாலாறு, பழவேற்காடு ஏரி பிரச்சனையிலும், கர்நாடகத்திடம் காவிரி, ஒகேனக்கல், தென்பென்ணையாறு பிரச்சனையிலும்,கேரளத்திடம் பரம்பிக்குளம் - ஆழியாறு, சிறுவாணி, அமராவதி, புன்னம்புழா, பம்பாறு, முல்லை பெரியாறு, அழகர் அணை, செண்பகவல்லி, அடவிநயினார், நெய்யாறு போன்ற நீராதாரப் பிரச்சனைகள். தமிழக மண்ணை இழந்துதிருப்தினால் இப்பிரச்சனைகள் எழுகின்றது.தமிழ்நாட்டு நீர்நிலைகள் வங்காளவிரிகுடாவுடன் ஆரேபியதேசத்திற்காக சங்கமிக்கின்றது•
ஆறுகள்--
அடையாறு •
ஆறு மாகாணியம் மலையப்பட்டு ஏரியில் துவங்கி சென்னை பட்டினப்பாக்கம் அருகிலும், முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது.
ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதி 1,142 சதுர கிலோமீட்டர். ஆற்றின் நீளம் 42.5 கி.மீட்டர், புறநகரில் 24 கிலோமாட்டரும், நகருக்குள் 15 கிலோமீட்டரும் ஓடுகிறது. ஆற்றுப் படுக்கையின் அகலம் 10.50 முதல் 200 மீட்டர் வரை. ஆற்றின் அதிபட்ச கொள்ளளவு வினாடிக்கு 60,000 கன அடி, சராசரி கொள்ளளவு 30,000 கன அடி,• 55,000 கன அடி முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது •
அமராவதி •
அமராவதி ஆறு கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம் இரண்டையும் வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகியவை இணைந்து கொள்கின்றன. இது அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்தேக்கம் தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக செல்லுகையில் கொழுமம், அருகில் குதிரை ஆறு இணைந்த பின் கொமரலிங்கம்,தாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது. உபநதிகள் சண்முகா நதி, குடகனாறு, உப்பாறு ஆகியன.
அரசலாறு •
அரசலாறு காவிரி ஆற்றின் ஐந்து கிளையாறுகளுள் ஒன்று.
ஆரணியாறு •
ஆரணி ஆறு (Arani River) கிருஷ்ணா ஆற்றின் கிளையாறாக திருவள்ளூர் மாவட்டம் போன்ற வடதமிழகத்தில் பாயும் ஆறாகும். கிருஷ்ணா ஆறு ஊத்துக்கோட்டையின் வழியாக தமிழ்நாட்டினுள் நுழைந்து கொடுதலை ஆறு மற்றும் ஆரணி ஆறு என்று இரண்டாகப் பிரிகிறது. கொடுதலை ஆற்றுநீர் சோழவரம் ஏரியில் சேமிக்கப்பட்டு கோடைகாலத்தில் சென்னையின் குடிநீராக பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ள தண்ணீர் காரனோடை பாலம், நாபாளத்து பாலம் வழியாக பெரியபாளையம், பொன்னேரி, பெரும்பேடு வழியாகச் சென்று பழவேற்காடு அருகே வங்கக்கடலில் சென்று கலக்கிறது.
பவானி •
பவானி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்படுகிறது.
செய்யாறு •
தமிழ் நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் ஒரு பருவ கால ஆறு ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையில் உருவாகும் இந்த ஆறு பாலாற்றின் துணை ஆறு ஆகும்.
ஜவ்வாது மலைத்தொடரின் நசமலையில் தோன்றி மேற்குத் தெற்காகப் பாய்ந்து பின்பு செங்கம் அருகில் வடகிழக்காகத் திரும்பி திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள் போளூருக்கு அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இணைகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து உருவாகும் நாக நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் ஆறும் ஆரணி அருகே இணைந்து கமண்டல நாக நதியாகி வாழைப்பந்தல் அருகில் இணைகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலத்தில் செய்யாறு ஆறாக வடக்குக் கிழக்காக ஓடி காஞ்சிபுரத்தை அடுத்த பழையசீவராம் எனும் ஊரில் பாலாறுடன் இணைந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
சிற்றாறு ,கூவம் ,கல்லாறு ,காவிரி •
காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.
குடமுருட்டி ஆறு •
கெடிலம் •
கெடிலம் ஆறு (Gadilam River) தமிழகத்தின் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் ஊடாகப் பாயும் ஓர் ஆறு. இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறு ஆகும். திருக்கோவிலூரில் உற்பத்தியாகி, மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே, தென்பெண்ணை ஆற்றுடன் சேர்ந்து வங்கக்கடலில் ஐக்கியமாகிறது, மழைக்காலங்களில் பெருக்கெடுத்தோடும் இந்த ஆறு இதன் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர உதவுகிறது. இது தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலட்டாறு •
வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பால் இந்த ஆறு, நீர் வரத்தின்றி, பாலைவனமாக மாறிவருகிறது .
கோடகநாறு ,சரபங்கா நதி .
சரபங்கா இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் ஒரு நதி ஓடுகிறது. ஏற்காடு சேர்வராயன் மலையில் உருவாகும் இந்த ஆறு சேலத்தில் டேனிஷ்பேட்டை கிராமத்தில் விவசாய நீர்ப்பாசனத்திற்கான கோரிக்கை நிறைவேற்றுகிறது. பின் இந்நதி ஓமலூர், தோப்பூர், எடப்பாடி , செட்டிப்பட்டி ,பெருமாச்சிப்பாளையம் ,தேவூர் வழியாக பாய்கிறது. மற்றும் வங்காள விரிகுடாவில் கலக்கிறது பாயும் முன் அண்ணாமார் கோவில் அருகே காவேரி நதியில் இணைகிறது. ஆற்றின் மீது பல தடுப்பு அணைகள் உள்ளது.
கோடவநார் ஆறு ,கொக்கிலியாறு ,கொள்ளிடம் •
கொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.
திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
செஞ்சி ஆறு ,மணிமுத்தாறு ,நடாரி ஆறு •
நடாரி ஆறு இந்தியாவிலுள்ள ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் வழியே பாயும் நதியாகும். நடாரி ஆறு ஆந்திராவிலுள்ள புத்தூர் அருகிலுள்ள வெள்ளிகொண்டா மலையில் உற்பத்தியாகி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் வழியே 100கி.மீட்டர் தொலைவிற்கு பாய்கிற்து, பின்பு பக்கிங்காம் கால்வாயுடன் இணைந்து எண்ணூர் அருகே வங்காளவிரிகுடாவுடன் கலக்கிறது.
நம்பியாறு ,நொய்யல் ,பச்சையாறு ,பறளியாறு ,பாலாறு ,பரம்பிக்குளம் ஆறு தென்பெண்ணை ஆறு.
தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ2 ஆகும். மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.
பைக்காரா ஆறு, சுவேதா ஆறு ,தாமிரபரணி ,திருமணிமுத்தாறு ,வைகை ,
கிருதுமால் ஆறு ,வைப்பாறு ,
வைப்பாறு இந்தியாவில், தமிழ் நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் பாயும் ஒரு ஆறு. கேரள மாநிலத்தில் உருவாகி தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து தூத்துக்குடிக்கு 40 கிமீ வடக்கில் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றது. இதன் நீளம் 130 கிமீ; வடிநிலப் பரப்பளவு - 5,288 ச.கிமீ.
வசிட்ட நதி தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கல்ராயன் மலைப்பகுதில் உள்ள புழுதிக்குட்டை அணையிலிருந்து ஒரு சிற்றாறும்,பாப்பநாய்க்கன்பட்டி அணையிலிருந்து ஒரு சிற்றாறும் உற்பத்தியாகிப் பின்னர் இரண்டும் ஒன்றாக கலந்து வசிட்ட நதியாக உருவெடுத்து கடலூர் மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து வங்கக் கடலில் கலக்குமுன்னர் சுவேதா ஆற்றுடன் இணைந்து வெள்ளாறு என பெயர் பெற்று வங்க கடலில் சேர்கிறது. வசிட்ட முனிவரின் பெயரை வைத்தே இவ்வாற்றுக்கு வசிட்ட நதி என பெயரிடப்பட்டது. இது சேலம் மாவட்டத்தில் ஊற்றெடுத்து ஆத்தூர், பட்டுத்துறை, தலைவாசல், ஆறகழூர், கடலூர் என்பவற்றின் வழியாகப் பாய்கின்றது. இவ்வற்றிற்கான அணைகள் ஆத்தூரிலும் பெரியேரியிலும் (Periyeri) காணப்படுகின்றன.
வெள்ளாறு தமிழ்நாடு, சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் உருவாகி சேலம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு ஊடாக ஒடி பரங்கிப்பேட்டை அருகில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. வருடத்தில் பாதி வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் சோழர் மற்றும் பாண்டியதேசத்துக்கு இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது. வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ2 ஆகும். சுவேதா ஆறு, சின்னாறு, ஆணைவாரி ஓடை, மணிமுக்தா ஆறு போன்றவைகள் இதன் துணையாறுகளாகும்.
வெண்ணாறு ,ராக நதி ,வாணியாறு ,நங்காஞ்சி ஆறு ,குதிரை ஆறு ,மணிமுக்தா ஆறு மணிமுக்தா ஆறு தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாறு சேத்தியோதோப்புக்கு அருகில் வெள்ளாற்றுடன் இணைந்து பரங்கிப்பேட்டையில் வங்கக் கடலில் கலக்கிறது.தடுத்து நிறுத்துங்கள்
திராவிட சூழ்ச்சிகள்
https://www.youtube.com/watch?v=ie-HOvH7j6I&feature=youtu.be
https://youtu.be/UQV125lUsMI
https://youtu.be/S5mYRMI0q10
https://youtu.be/VHHtiTrM7zY
https://youtu.be/u4O1KsNJn9k
https://youtu.be/f-GFwRzDPvQ
https://youtu.be/3v-nhyMAPV0
https://youtu.be/2etnKeYmzrk
https://youtu.be/qOMx4NL2v2Q
https://youtu.be/QXiCaNC0jUQ
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_18.html
அருளகம்.
No comments:
Post a Comment