பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும் அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே.தமிழருக்கு அறிவியல் அறிவு இல்லை என்று எந்த முட்டாளாவது சொன்னால் அவனிடம் மறக்காமல் இதைச் சொல்லிவிடுங்கள்.
திருமூலர்--.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அறிவியலால் இறைவனை நிரூபிக்க நிரூபித்துக்காட்டிய தமிழ் மகான் திருமூலர்.பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை என்பது அறிவியல் உண்மை. இப்படியாக அணு முக்கியமானதான பார்க்கப்படுகிறது. அதைக்கொண்டே ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது. சைவத்தின் நாயகரான சிவனை அணுவிற்குள் அணுவாய் இறைவர் இருக்கின்றார் என்கிறார் திருமூலர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே. பத்தாவது தமிழ்வேதமாக விளங்கும் திருமந்திரத்தில் சித்தர் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே – திருமந்திரம். [ திருமூலர் ]
இப்பாடலில் அணுவைப் பிளக்க முடியும் என்றும், அணுவிற்குள் இறைமை உள்ளது என்றும், அணுவிற்கு அணுவாயும், அணுவிற்கு அப்பாலாயும் இறைமை உள்ளது அவர் கூறியுள்ளது வியக்க வைக்கிறது.
தற்கால அறிவியலை அக்காலத்திலே ஆய்வு செய்து மெய்ப்பித்திருக்கிறார் சைவ சமயத்தின் விஞ்ஞானி திருமூலர்.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர்.
" அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன "
உலகம் உருண்டை வடிவமானது.என்று கலிலீயோ சொன்னது 16 ஆம் நூற்றாண்டில் அதற்கு 600 ஆண்டுகள் முன்பே தமிழன் சொல்லி விட்டான்.
பிரபஞ்சத்தில் நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.
அணுவை பற்றிய தகவல்கள் :--
உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் நிரம்பியுள்ளது. நேர்மின் தன்மை கொண்ட புரோட்டான் அணுவின் மையத்தில் உள்ளது (1.0073 amu நிறை) எதிர்மின் தன்மை கொண்ட எலக்ட்ரான் மையத்தை சுற்றி சுழன்று வரும்.புரோட்டானுக்கு சமாமான மின்சக்தி கொண்டிருக்கும். புரோட்டானைவிட 2000 மடங்கு நிறை குறைந்தது (0.000549 amu). நியுட்ரான் ஒரு அணுவில் இல்லாமலும் இருக்கும் (நிறை 1.0087amu)
புரோட்டான்களின் எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண்.2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரே நேர்கோட்டில் வைத்தால் 1 மில்லி மீட்டர் நீளம் இருக்கும்.கிரேக்க தத்துவஞானி டெமோகிரிடஸ் (DEMOCRITUS) கி.பி 470 ல் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய மூலக்கூறை அணு (atom) என்று கூறி ஆரம்பித்து வைத்தார். பிறகு 1800 வரை நிறுபிக்க படாத ஒன்றாக இருந்தது. டால்டன் (DOLTON) தான் அணுவின் பொருண்மை குறித்த அணுவியல் கோட்பாடுகளை 1808 ல் வெளியிட்டார்.
பின்வந்த ஸ்வீடிஷ் வேதியலார் ஜான் பெர்ஜிலியஸ் (Jons Berzelius) அணுவின் நிறையை நுண்ணியமாக கணக்கிட்டார். உதாரணமாக இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறும் சேர்ந்த கலவைதான் நீர் என நிறுபித்தார் H2O என்ற குறியீடையும் அளித்தார்.
140 ஆண்டுகள் கழித்து அணுவின் சக்தியை கண்டுபிடித்தார் அவோகாட்ரோ (AVOGADRO) ஆங்கிலத்தில் மாலிக்யூல் என்பது லத்தீன் வார்த்தை மாஸ் லிருந்து எடுத்தெழுதினார். மூலக்கூறின் எடை எவ்வளவு இருக்கும் என்பதை அறுதியிட்டு கணக்கிட்டார்.
22 லிட்டர் வாயுவில் 602 பில்லியன் டிரில்லியன் மாலிக்யூல்ஸ் உள்ளது. சுருக்கமாக இதை 6.02 x 1023 Mole-1 என்று எழுதினார். இதுவரை இந்த மாறிலி தான் அடிப்படை. அணு சக்தி : நியூட்ரான்கள் மூலம் அணுவின் உட்கருவை துளைக்கும் போது மேலும் நியூட்ரான்களை சிதறடித்து அவை அண்மை அணுக்களை துளைத்து தகர்க்க இந்த சங்கிலி ரியாக்சனில் அபரிமிதமான சக்தி வெளிப்படுவது.
ஐன்ஸ்டின் அணுவை யுரேனியத்தில் இருந்து பிரித்தெடுத்து அதிலிருந்து பெரும் சக்தி கிடைக்கும் என்ற கருத்தை அறிவித்தார். இவர் ஜெர்மன் நாட்டிலிருந்து உயிர் பிழைக்க அமெரிக்காவிற்கு தப்பினார். இவரை வைத்து அமெரிக்கா தயாரித்த அணு குண்டு ஹிரோஷிமாவின் அழிவுக்கு வித்திட்டது. இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதை அவர் கற்பனை செய்யவில்லை.
அவர் இறப்பதற்கு(நவம்பர் 1954) ஐந்து மாதங்களுக்கு முன் அணு ஆயுதம் குறித்து “என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு” எழுதினார். இப்படி பின் விழைவைப் ஏற்படுத்திய அணுகுண்டை இனி எப்போதும் யாரும் பயன் படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment