வீரவராயன் செட்டியார் (திபி. 270-330) மதுரையைச் சேர்ந்தவன் வீரவராயன் செட்டியார். இலங்கைக்கு அடிக்கடி வரும் வெண்கலப் பொருள் வணிகன். திபி. 278இல் தன் வீரர்களுடன் மாதோட்டத் துறைமுகத்துள் வந்திறங்கினான். திருக்கேதீச்சரம் சென்றான். பாலாவியில் நீராடினான். கௌரியம்பாள் உடனுறை திருக்கேதீச்சர நாதரை வழிபட்டனர். மருதமடு வந்தனர் அடியார் திருக்கூட்டமாக. மதுரைப் புகழ் கண்ணகிக்கு கோயில் கயவாகு கட்டியிருந்தான். வழிபட்டனர்.
வணிகத்துக்காக அநுராதபுரத்தை நோக்கிப் பயணமாயினர். ஏராளமான வெண்கலச் சட்டிகள், கலைப் பொருள்களை விற்றனர். அவனும் வீரர்களும் தங்கிய ஊரே இன்றைய வெண்கலச் செட்டிகுளம். சிவனின் அடியவனான வீரவராயன் செட்டியார், திபி. 320இல் வௌவாலையில் குளம் தோண்டிக் கேணியாக்கினான். அருகே சிவன் கோயில் கட்டினான்.
தெற்கே உரோகணத்துச் தென்னாவரம் தொண்டீச்சரர் கோயில் அடியவனாதலால் வௌவாலைச் சிவன் கோயிலுக்கும் சந்திரசேக ரீச்சரம் எனப் பெயரிட்டு வழிபட்டு வந்தான்.
அக்காலத்திலும் மன்னார் சிவபூமி.
பிறப்பால் வளர்ப்பால் சைவன். ஆனாலும் புத்த சமயத்தவரின் ஆதரவைப் பெறவேண்டி, சைவர்களோ தமிழர்களோ ஆட்சியுரிமை பெற இடமளிக்கக்கூடாது என்பான் நிசங்க மல்லன் (இந்திரபாலா, கா. இலங்கையில் தமிழர், ப. 292).
தன் தாய், பார்வதி பெயரால் அறங்களை நிறுவினான். திருக்கேதீச்சரத்தில் தன் ஆட்சி நீட்டத்துக்காக நவக்கிரக சாந்தி செய்தான். செட்டிகுளத்தின் வரலாற்றுப் பெருமை பெற்ற வௌவாலை சிவன்கோயிலைத் திருத்தி அமைத்து நிசங்கேச்சரம் எனப் பெயரிட்டான். இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களுக்கு நிவந்தங்கள் வழங்கினான். சைவ அறிஞர்களைப் போற்றினான். பிராமணர்களுக்குக் குடியிருப்புகள் அமைத்து, நிவந்தங்கள் வழங்கினான். இராமேச்சரத்திலும் பிராமணக் குடியிருப்புக் கட்டினான்.
No comments:
Post a Comment