Saturday, 3 April 2021

தமிழன் என்பவன் யாா்?சைவன் என்பவன் யாா்?

 தம்முள் தன்னை உணர்ந்து அறிந்து கொண்டவனுக்கு   இறைவனாகிய சிவன் உபதேசித்த மொழியே தமிழ். இறைவன் உபதேசித்த தமிழ்மொழியின் அச்சரங்கள் தன்னுள் உள்ள சக்கரங்கள் அச்சரங்களாக உற்பத்தி செய்வதை உணர்ந்து அறிந்து கொண்டவன் மட்டுமே தமிழன். ஏனையோர் பின் தொடர்பவர்கள்.

 தம்முள் கண்ட தமிழ் வியாபார மொழி இல்லை. வாழ்வியல் நெறிகளை கொண்ட மொழி, உணர்வான மொழி, உயிருக்கு உயிரோட்டமான மொழி, தம்முள் உணர்ந்து பிறந்த வளம் கொண்ட மொழி நட்சத்திர மண்டலங்களையே அளந்த மொழி. தம்முள் தமிழை உணர்ந்து அறிந்து கொள்ளாதவர்கள் நான் தமிழன் என்றோ தமிழனடா என்று திறந்த வெளியரங்கில் கூவுகின்றதனால் ஒன்றும் ஏற்படபோவதும் இல்லை.

தம்முள் கண்டறியாதவனைக் உணர்ந்து அறிந்து கண்டுகொண்டவன் தமிழன். தம்முள் கண்டறியாதவனை உணராதவர் சைவர் அல்ல. தம்முள் கண்டறியாதவனைக் கண்ட தமிழன் தம்முள் உணர்ந்து அறிந்து கொண்ட தமிழாள், தம்முள் கண்ட கண்டறியாதவனை போற்றி பாடிய தமிழன் சிவயோக கலையான சிவயோக சித்தாந்தம் கூறுகின்ற அட்டமா சித்திகளுடன் வாழ்ந்தவன், மரணத்தை வென்றான், தரனியாண்டான், உலகம் கண்டிராத வரலாற்று சாதனைகளை நிலைநாட்டியவன்.

ஆகவே தம்முள் தமிழை உணராதவர் தமிழருமல்லர்  தம்முள் இறைவனை உணராதவர் சைவருமல்லர். தம்முள் இறைவனையும் தமிழையும் உணராத இவர்களே இன்று பல மாயா சத்திகளிடம் அகப்பட்டு அல்லல் பட்டுக் கொண்டு தமிழையும் தொலைத்து தன்னையும் தொலைத்து இனனல்களுடன்  சீரழிந்துக் கொண்டு வாழுகின்றவர்கள் குடிகளை கெடுத்த அசுரர்கள் போன்றும் மற்றவர்களை நாசம் செய்து கொண்டும் அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

No comments:

Post a Comment