Thursday, 9 April 2020

ஐக்கிய தேசியக் கட்சி ஓர் கிறிஸ்தவ மிசனறி

ஐக்கிய தேசியக் கட்சி ஓர் கிறிஸ்தவ மிசனறி

போர்த்துக்கீசர், ஒல்லாந்தரைத் தொடர்ந்து பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் மகாதேசாதிபதியாக ஆங்கிலேயர்கள்தான் அதிகாரத்தில் இருந்தார்கள். இதன் விளைவாக கிறிஸ்தவ ஆதிக்கம் அரசியலில் இருந்து வருகிறது. இதை இன்று வரையும் கிறிஸ்தவ மிசனறிகள் மிகவும் கச்சிதமாக கையாண்டு வருகிறது. இலங்கையின் பெரும்பாண்மை வாக்காளர்கள் சிங்கள பௌத்தர்களாக இருப்பதால் அவர்களுக்கு ஒரு முகமும் தங்களின் எசமான்களாகிய மிசனறிகளுக்கு விசுவாசமாக இருக்க இன்னோர் முகமும் காட்ட வேண்டிய தேவை கிறிஸ்தவ தலைவர்களுக்கு இருந்து வந்துள்ளது.

இலங்கையின் முதல் பிரதமர் டான் ஸ்டீபன் சேனாநாயக்கா ஓர் ரோமன் கத்தோலிக்கர். இவர் கிறிஸ்தவ அடையாளங்களை மறைப்பதற்காக டி எஸ். சேனாநாயக்கா என்று தன்னை அழைத்துக் கொண்டார். மிசனறிகளின் அரசியல் நோக்கங்களை நிறைவு செய்வதற்கு தன்னை ஓர் பௌத்தராக அடையாளம் காட்ட வேண்டிய தேவை இவருக்கு எப்போதும் இருந்து வந்தது.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மேல் இலங்கையின் ஆதி மதத்தவர்களான இந்து பௌத்தர்கள் வெறுப்புடன் காணப்பட்டார்கள். இதை திசை திருப்பவே மினசறிகள் தமிழர்கள் மீது யுத்தத்தை ஏவினார்கள். இந்திய பண்பாட்டையும் இந்தியாவில் தோண்றிய மதத்தையும் தங்களோடு கொண்டு வந்து இலங்கையில் குடியேறியவர்களே சிங்களவர் என்று சிங்கள வரலாறே கூறிக் கொள்ளுகிறது.

கிறிஸ்தவ ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில், 1948 பிரஜா உரிமைச் சட்டம், 1949 இந்திய பாகிஸ்தானியர் வதிவிடச் சட்டம், 1949 தேர்தல்கள் திருத்தச் சட்டங்கள் யாவும் கொண்டு வரப்பட்டது.  இந்து மக்களாகிய மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இழக்கச் செய்யும் நோக்கத்துடன் அன்னிய மத நம்பிக்கையாளரான கிறிஸ்தவ பிரதமர் டான் ஸ்டீபன் சேனாநாயக்காவால் இச் சட்டங்கள்  கொண்டு வரப்பட்டது. இலங்கையில் இன்று வரை மூத்தசிவன் தேவநம்பிய தீசனின் உறவுக்காரர்களாக வாழ்ந்து வரும் தமிழக இந்துக்களை வேரறுத்து, இந்திய உறவை அறுப்பதே டான் ஸ்டீபன் சேனாநாயக்காவின் திட்டமாக இருந்தது.

பிரதமர் டான் ஸ்டீபன் சேனாநாயக்கா 1952 இல் குதிரைச் சவாரியின் போது விழுந்து இறந்தார். இதன் பின், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களாக இருந்து இலங்கையில் தமிழ் இந்து விரோத ஆட்சிக்கு வித்திட்டவர்கள் டான் ஸ்டீபன் சேனாநாயக்காவின் மகன் டட்லி செல்ட்டன் சேனாநாயக்கா, சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை, ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா போன்ற கிறிஸ்தவர்கள்.

பௌத்தம் என்பது இலங்கை அரசியல் தலைவர்களுக்கு பெரும்பாண்மை மக்களை மந்தைகளாக மேய்கக்கூடியதொரு உணர்ச்சிபூர்வ ஆயுதமாக பயன்பட்டது என்பதுதான் உண்மை. இதன் காரணமாகவே கிறிஸ்தவர்களாகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தர்களாக அடையாளம் காட்டி வந்தார்கள்.

தமிழரசு கட்சி நிறுவனர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்தவர் பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன். இவர் ஜே. ஆர். ஜயவர்தனாவுடன் இணைந்து தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்கான சட்டத்தை உருவாக்கியவர். இச் சட்டம் தமிழ் மக்களை வகைதொகையின்றி கொன்றொழித்து அவர்களின் சொத்துக்களையும் நாசம் செய்தது. சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும் பௌத்தத்தையும் சைவத்தையும் அழிப்பதற்கு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரே புள்ளியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

கிறிஸ்தவ தலைவர்களால் பல ஆயிரம் சிங்கள காடையர்கள், போலிப் புத்த பிக்குகள், மறைமுக பெளத்தபீடங்கள் தமிழர்களை கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பௌத்தத்திற்கும் இலங்கைக்கும் உலகளவில் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ரணில் விக்கிரமசிங்க, லயனல் காமினி திசாநாயக்கா போன்றோர் இந்தக் குழுவில் முக்கிய பங்காற்றினர்.

இவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே, முப்படைகளின் பாதுகாப்புடன் 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி யாழ் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. இலங்கையை ஆண்ட மேற்கத்தையர்கள் தமிழர்களின் ஏடுகளை அள்ளிச்சென்ற வேளை எஞ்சிய நூல்களுக்கு தீ மூட்டிய பெருமைக்குரியவர்கள்.

இலங்கையில் நிலைகொண்டுள்ள கிறிஸ்தவ மிசனறிகள் சிங்கள கிறிஸ்தவர்களைக் கொண்டு பௌத்த சிங்கள ஏகாதிபத்தியத்தையும் தமிழ் கிறிஸ்தவர்களைக் கொண்டு அதற்கான எதிர் இயக்கங்களையும் உருவாக்கினார்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆன்மீகத் தலைவர்கள். இவர்களால் வழங்கிய அருமைப் பரிசே பௌத்த இந்து முரண்பாடு.

ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழரசு கட்சியும்.--https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_13.html
ஐக்கிய தேசியக் கட்சி ஓர் கிறிஸ்தவ மிசனறி----https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_11.html
அருளகம்

No comments:

Post a Comment