Monday 23 January 2023

photos.

 


கள்ளு பானை பார்த்திருக்கின்றீர்களா?

 அதைச்சுற்றி எப்போதும் ஈக்கள் மொய்த்துக்கொண்டேயிருக்கும், கவனித்ததுண்டா?

சில செத்துபோய் பானைக்குள் கிடக்கும், மேலும் சில ஈக்கள் அந்த கள்ளிருக்கும் பானையையே சுற்றிவந்து கொண்டிருக்கும்.

அதன் இயல்பு என்ன?

* கிணற்றுத் தவளைக்கு கிணற்றிலுள்ளவைதான் உச்சம் என்பதுபோல, அந்த கள்ளும், பானையும்தான் அந்த ஈக்களின் உச்சம்.

* அதைத் தவிர அவற்றுக்கு வேறெதுவும் தெரியாது, தேவையும் இல்லை.

* அங்கேயே சுற்றிவருமே தவிர, அவ்விடத்தை விட்டு அகலாது.

* பானையை மொய்ப்பது, கள் குடிப்பது, ரீங்காரத்தோடு அங்கேயே வலம்வருவது - இவற்றைத் தவிர வேறு வேலையை அவை சிந்திப்பதே இல்லை.

* அந்த ஈக்களின் உலகமே அந்த கள்ளும் பானையும்தான், இந்த வாழ்க்கையில் வேறு எதுவும் அவற்றுக்கு முக்கியமில்லை.

* அவற்றுக்கு தான் யாரென்று தெரியாது, தான் செய்யவேண்டிய வேலைகள் பற்றி யோசனை செய்யாது, போதையால் கண்ணெதிரே நடக்கும் மரணங்களைக் கண்டும் மனம் தெளியாது, உயிர்ப்பயம்கூட உண்டாகாது.

* தன்னோடிருந்து தன்னைப்போல கள்ளுண்டுகொண்டு போதையில் பானையையே சுற்றிவந்த சக ஈ, அதிலேயே செத்து மிதந்தாலும் அதைப்பற்றியெல்லாம் சுற்றும் ஈக்கு கவலையே இருக்காது.

* அந்த ஈக்கள் அடிமைகள், சக ஈயின் சாவை கண்களால் கண்டும்கூட போதை வாழ்வை கைவிட விரும்பாத அடிமைகள்.

இந்த ஈக்களுக்கு ஒப்பானவர்கள்தான் குடி மற்றும் போதை நோயாளிகள்!

குடியால் விளையும் சக நண்பனின் மரணம்கூட அவர்களை பாதிப்பது இல்லை.

உச்சுகள் கொட்டியபடியே போதையேற்றுதலைத் தொடர்வார்கள்.

குடிதான் உலகம், 

அந்த ஈக்களைப் போன்றே குடிநோயாளிகளும் அல்கஹாலே உலகம் என்று வாழ்ந்து வரும் அடிமைகள்.

அவர்கள் மயக்கத்திலிருக்கின்றார்கள்.

நீங்கள் அவர்களை தெளிவிக்காதவரையில் அவர்களாக தெளிந்து தங்கள் உயிரை காத்துகொள்ளப்போவது இல்லை.

உதவ காத்திருக்கிறது...