Sunday 31 January 2021

தைப்பொங்கல் திருநாள் சிவனின் பஞ்ச பூத வழிபாடாகும் .

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள்  சிவனுடன் தொடர்புடையது. ஆகவே சிவனுடன் தொடர்புடைய பஞ்ச பூத வழிபாடான தைப்பொங்கல் திருநாள் வழிபாடு சிவ வழிபாடு ஆகும்.  அதுவே இயற்கை வழிபாடு.

 நிலம்,நீர்,நெருப்பு,காற்று, ஆகாயம் ஆகியவை பஞ்சபூதங்கள் ஆகும். இதில் நிலம்,நீர்,நெருப்பு,காற்று பூதங்கள் இந்த பூமியை ஆட்சி செய்கிறது. ஆகாய பூதம் நட்சத்திரங்களை ஆட்சி செய்கிறது.

வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவை ஐம்பூதங்களளின் கூட்டுப் பொருட்களின் பகுதிகள் பஞ்சீகரணத்தினால், இப்பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள் தோன்றின. ஜீவராசிகளின் வாழ்விற்கும் அடித்தளமாகவும் உயிா்ரோட்டமாகவும் விளங்குவது பஞ்சபூதங்களாகும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களால் ஆனாது. உடலில் உள்ள ௧௨ உறுப்புகளை இயக்குகின்றன. அதுபோன்று நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள் உடலில் உள்ள    12 உறுப்புகளை இயக்குகின்றன.

ஜீவராசிகளின் உடலையும் உயிரையும் இயக்குவதும் பஞ்சபூதங்களாகும். ஆகவே அகத்திலும் புறத்திலும் தொழில்படுவது பஞ்சபூதங்களாகும். இன்று நவீன உலகில் விஞ்ஞானமும் இதனைத்தான் உறுதிசெய்கின்றது.

மண் சம்பந்தப்பட்ட உணவில் சர்க்கரை, புரோட்டின், விற்றமின் போன்ற பல பொருட்கள் உள்ளன இவைகள் அனைத்தும் உயிா் இனங்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமானதே. வானம், காற்று, நெருப்பு, நீர் போன்றவற்றுடன் தமிழர்களின் தெய்வமான  சூரியன் போன்ற அனைத்தும் உயிா் இனங்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமானதே. 

உயிா் இனங்களின் வாழ்வுக்கு உயர் கொடுக்கும் சிவனின் அம்சமான வானம், காற்று, நெருப்பு, நீர்,   நிலம் சூரிய குடும்பத்தை சேர்ந்த நவகிரகங்களுக்கும் வழிபாடு செய்வது தமிழ்களின் கலாச்சார பண்பாடு ஆகும். 

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் பொங்கி பொங்கல்  பொங்கி மணித வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட பஞ்சபூதங்களுக்கு நன்றி செலுத்துகின்ற வழிபாட்டுடன் சிவனின் அம்சமான சூரியனுக்கும் தமிழர்கள் தெய்வமாக போற்றுகின்ற மாட்டுக்கும்  நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் விழாவாகும். 

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி                                                        பகவன் முதற்றே உலகு".

குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர் ஆதி  எனக் குறிப்பிடுகிறார்.ஆகவே ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது. பண்ணிரு திருமுறைகள் இறைவனை  ஆதிபரன் , ஆதி பராபரம் , ஆதிப்பிரான், ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.

பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்.

“ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே”

 “ஆதி பராபர மாகும் பராபரை
  
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்                                                   ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி                                 நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.”

“ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று-எனார்
பேதிது உலகம் பிணங்குகின் றார்களே.”

“பந்து சேர்விர லாள்பவ ளத்துவர்
வாயி னாள்பனி மாமதி போன்முகத்
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந்
நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.”

தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் கடவுள் வாழ்த்துப் பாடல்:
“ மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு

தமிழையும் தமிழுக்குரிய கொடியான இடப கொடியையும் அருளிய தமிழ் தலைவன் சிவனின் வழிபாடு தைப்பொங்கல் வழிபாடு ஆகும்.





இலங்கையின் பூர்வீக குடிகள் யார் ?

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள். இலங்கையின் “மண்ணின் மைந்தர்கள்”. தமிழ் மன்னர்கள் பலர் இலங்கையை ஆண்டிருக்கிறார்கள். இது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

குமரி முனைக்கு தெற்கே உள்ள இந்து மகா சமுத்திரம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்றும், அது லெமூரியாஎன்று அழைக்கப்பட்டது என்றும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.லெமூரியா கடலில் மூழ்கி விட்டது. அப்போது தமிழ்நாட்டுடன் இலங்கையும் ஒட்டிக் கொண்டிருந்தது. நாளடைவில் தனி தீவாகப் பிரிந்து விட்டது” என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல் ஆழமின்றி இருப்பதற்கு இதுதான் காரணம்.

 ஆதாரங்கள்

திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 15 மைல் தூரத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில், 1876-ல் பூமியைத் தோண்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பலவகையான மண் பாண்டங்கள் கிடைத்தன. அவை சூளையில் நன்றாக வேக வைக்கப்பட்டு, நல்ல மெருகுடன் காணப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்களை வைத்து புதைப்பதற்கான “தாழி”கள் இவை. இதேபோன்ற “தாழி”கள், இலங்கையின் வடபகுதியிலும் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, புராதன தமிழர்கள் உபயோகித்த பல நாணயங்கள், அரச இலட்சினைகள், முதலானவை இலங்கையின் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், பழைய கற்காலத்திலும், புதிய கற்காலத்திலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் எத்தகைய நடை – உடை – பாவனையுடன் வாழ்ந்தார்களோ, அதே மாதிரிதான் இலங்கைத் தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் ‘தொப்புள் கொடி’ உறவு இருந்திருக்கிறது.

வரலாறு கூறுவது என்ன?

இலங்கையில், புத்தமதம் பரவுவதற்கு முன் சிவ வழிபாடுதான் நடந்து வந்திருக்கிறது. பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவன் சிலைகளும், நந்தி சிலைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. சிவனை வழிபட்டவர்கள் தமிழர்கள்தான்; சிங்களர்கள் அல்ல.கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மவுரிய பேரரசன் அசோகன், கலிங்கப் போரின் முடிவில் பவுத்த மதத்தைத் தழுவினார். அவர் புத்த மதத்தை பரப்புவதற்காக, மகிந்த தேரே என்ற புத்த மத குரு தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அக்குழு இலங்கைக்கு வந்தபோது, அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் பெயர் திசையன் என்றும், அசோகன் விருப்பப்படி அவன் புத்தமதத்தை தழுவினான் என்றும், அவனுக்கு “தேவ நம்பி” என்ற பட்டத்தை அசோகர் வழங்கினார் என்றும், பாலி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ்மன்னர்கள் 22 வருடங்கள், அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினார்கள் என்று அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று ராஜ்ஜியங்கள்

ஆதிகாலத்தில், இலங்கை ஒரே நாடாக இருந்தது இல்லை. பல அரசர்களும், சிற்றரசர்களும் குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டு வந்தனர். ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்தபோது, இலங்கையில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன:

(1) தென் கோடியில், கொழும்பு பகுதியை உள்ளடக்கிய கோட்டை ராஜ்ஜியம். இந்த கோட்டையை ஏற்படுத்தியவனே அழகுக்கோன் என்ற தமிழன்.

(2) கண்டி ராஜ்ஜியம்.

(3) யாழ்ப்பாண ராஜ்ஜியம்.

இவற்றில் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை எக்காலத்திலும் சிங்களர்கள் ஆண்டது இல்லை. கோட்டையையும் கண்டியையும் தமிழர்களும், சிங்களர்களும் மாறி மாறி ஆண்டு வந்திருக்கிறார்கள்.

50 ஆயிரம் ஆண்டுக்கால இலக்கிய வரலாறு கொண்ட தமிழே உலகின் முதன் மொழி! குமரிக் கண்டமே தமிழனின் பிறந்தகம். கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழீழம். சிங்களவர்கள் இலங்கைத் தீவின் வந்தேறிகள்.

நாவலன் தீவு.

நாவலன் தீவு. ” என்று அழைக்கப்பட்ட ” குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் ” குமரிக்கண்டம்.

 “. ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !! தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரிய தமிழர்களின் சுமரியன் நாகரீகம் இருந்து உள்ளது.

  முந்தையது தான். நக்கீரர் ” இறையனார் அகப்பொருள் ” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். 

 சிவன், முருகர் இறைவனின் பெயர்களையும், தெய்வங்ளின் பெயர்களையும் சூட்டுவது தமிழர் மரபு .

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள ” தென் மதுரையில் ” கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, ” பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது . இரண்டாம் தமிழ்ச் சங்கம் ” கபாடபுரம் ” நகரத்தில் கி.மு 3700 இல் 3700புலவர்கள்களுடன் ” அகத்தியம்,தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது

இதில் அனைத்துமே அழிந்து விட்டது . இரண்டாம் தமிழ்ச் சங்கம் ” கபாடபுரம் ” நகரத்தில் கி.மு 3700 இல் 3700புலவர்கள்களுடன் ” அகத்தியம்,தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் ” தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய ” மதுரையில் ” கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் ” அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாறு ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக பூமி.குமரிக் கண்டம்