Sunday 28 February 2021

Srilankan Politics.

எல்லாளன் (Ellalan ) அரசியல் ஆய்வகம். 

பாகம்--01.

இலங்கை அரசியல் பிரச்சனையின் ஆரம்ப அத்திவாரம் கொட்டகேனா கலவரம்.   (Kottehena Riots )

https://www.youtube.com/watch?v=pE7Q2B_TE5g&ab_channel=Ellalan-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D


பாகம்--02.

திட்டமிடப்பட்ட தமிழர் சிறுபான்மையினர்.

https://www.youtube.com/watch?v=6CmdR2jMBEE&t=193s&ab_channel=Ellalan-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D



 எல்லாளன் (Ellalan ) அரசியல் ஆய்வகம்.

https://www.youtube.com/channel/UCgWTp5NjpdMVEEIST_fozIw

தமிழ் சிங்களம் என்ற இனங்களுக்கு எதிராக இனவெறியும், சிங்களம் தமிழ் மொழிகளுக்கு எதிராக மொழி வெறியும், சைவநெறிகளுக்கும் பெளத்த மதத்திற்கும் எதிராக மதவெறி கொண்டு அலையும் கத்தோலிக்க மதம் தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் முரன்பாடுகளை உருவாக்கினாா்கள்.

Thursday 25 February 2021

திருக்குறள் கூறும் அரசியல்.

 


திருக்குறள் கூறும் அரசியல்.


முன்னுரை.

அரசியல் (Politics) என்பதற்கு ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் என  தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. அரசியல் என்பதனுள், அரசு, அரசாட்சி, அரசை ஆளும் அரசன், நாடு, நாட்டில் வாழும் மக்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உட்கூறுகள் பொதிந்திருக்கின்றன. நீதி இலக்கியங்களுள் திருக்குறள் அரசியல் பற்றி பேசும்பொழுது, மொழி, இனம், மதம், நாடு போன்றவற்றைச் சாராமல் உலகப்பொதுமையாய் எல்லோருக்கும் பொருந்துவனவாய்  பேசுகிறது. அரசு என்பதன் பொருளை அறியமுற்படும்பொழுது பல்வேறு கருத்துக்களும் அகராதிகள் தரும் விளக்கங்களும் அரசியல் குறித்த அடிப்படையை உணருவதற்கு அவசியமாகின்றன.

அரசியல் பொருண்மை.

அரசியல் என்பதற்கு “நாடு ஒன்றினை ஆட்சிபுரிந்திடும் முறை, ஆட்சிபுரிவது பற்றிய பல்வேறு கட்சிகளின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்” எனவும்,  அரசாங்கம் என்பதற்கு “நாடு ஒன்றினை நிர்வகிப்பதற்காக அதற்கென்றே அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பு (Government)” எனவும், அரசியல் சட்டம் என்பதற்கு “அரசாங்கத்தின் அதிகாரம் கடமைகள் ஆகியவற்றோடு குடிமக்களுடைய உரிமைகள் போன்றவற்றையும் வரையறை செய்யும் அடிப்படைச் சட்டம்” எனவும் நர்மதாவின் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.”அரசு  என்ற சொல்லுக்கு  “அரசன்”, “இராச்சியம்”, “அரசாட்சி” என்ற பொருள்கள் (தமிழ்-தமிழ் அகர முதலி) வழங்கப்படுகின்றன. அரசன் என்பது “நாடாள்வான்” (அரசு) எனும் “தலைமையையும்”, இராச்சியம் என்பது ஆளப்படும் பகுதி என்ற “இடத்தை” (நிலைத்தை)யும், அரசாட்சி என்து “அரசு நிருவாகம்” என்ற (தலைமையின்) கருவியையும் குறிப்பன. (பக்.33)” என பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி குறிப்பிடுகிறார்.

“பல சமூகங்கள் அல்லது வர்க்கங்களை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியானது மைய அமைப்புடைய அரசாங்கத்தின் மூலம் வரிவிதித்தல், படைத்திறன் கொண்டிருத்தல், சட்டங்களை இயற்றி அவற்றின்படி அனைவரையும் நடக்கச் செய்தல், குற்றமிழைப்போருக்கு நீதித்துறை மூலம் தண்டனை விதித்தல் முதலான பணிகளைக் கொண்டது ஒரு முற்றுரிமை வாய்ந்தது அரசு என அரசின் பணிகளை பக்தவத்சலபாரதி விளக்குகிறார்.

திருக்குறள் கூறும் அரசியல் நெறிகள்

திருக்குறளில் சொல்லப்பட்ட அரசியல் அறநெறிகள் அக்காலத்தேவை கருதி சொல்லப்பட்டாலும் எக்காலத்துக்கும் எந்நாட்டு அரசியல் அணுகுமுறைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி, அரசு செயல்படவேண்டிய முறைகளின் நுட்பங்களை எடுத்தியம்புகிறது. படை, குடி, கூழ், நட்பு, அமைச்சு, அரண் ஆகிய உறுப்புக்களை உடையதாக திருக்குறள் அரசியலை விவரிக்கிறது.

அரசியல் அதிகாரங்களில் அரசனின் இயல்புகள், மேற்கொள்ளவேண்டிய நெறிமுறைகள், அவன் ஆற்றவேண்டிய கடமைகள், நாட்டின் சிறப்பு, நாட்டில் வாழும் மக்களின் சிறப்பு போன்ற செய்திகளை, இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, குற்றங்கடிதல், பெரியாரைத்துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், சுற்றம் தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம் ஒற்றாடல், ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய இருபத்தைந்து அதிகாரங்களில் திருக்குறள் அரசியல் பற்றியும் ஆட்சிமுறை பற்றியும் உரைக்கிறது.

நாட்டை ஆளும்  அரசு

நாட்டை ஆளும் அரசு எப்படி இயங்க வேண்டும். அரசு எவ்வாறு செலுத்தப்படவேண்டும் என்பதை வள்ளுவர் கீழ்வருமாறு உரைக்கிறார். அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார்.
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”
                                                                        (குறள். 385)

அரசின்கீழ் இயங்கும் நாடு

  அரசின்கீழ் இயங்கும் நாடானது, பசியில்லாமலும், பிணியில்லாமலும், அயல்நாட்டின் பகையில்லாமலும் இருத்தலே நலமாக அமையும். நாட்டினது அரசு நாட்டுப்பொருளால் பாரபட்சமின்றி அனைவருக்கும் பசிதீர்க்கும் அரசாகவும், பற்பலத் திட்டங்களின் வழி நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் அரசாகவும், மற்றைய நாடுகளுடன் பகைகொள்ளாது அமைதியை விரும்பும் நாடாகவும் இருப்பதையே சிறந்த நாடென திருக்குறளானது நாடு இருக்கவேண்டிய இயல்பினை எடுத்துரைக்கிறது.

                   ”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
                   சேரா தியல்வது நாடு”
                                                                                                            (குறள்.734)
ஆட்சி செய்வோருக்கு இனியது

சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறது கீழ்வரும் குறள்.

          “அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
          மானம் உடையது அரசு”
                                                                             (குறள்.384)
அரசியல் நெறி

குடிமக்களுக்கு வேண்டியவற்றைச் செய்துகொடுக்குத்துச் சமுதாயத்தை மேன்மையுறச்  செய்யும் அரசையும் அரசனையும் இவ்வுலக உயிர்கள் அடைக்கலமாகக் கொண்டு வாழும் என திருக்குறள் அரசியல் நெறியினை நயம்பட உரைக்கிறது.
                   “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
                   அடிதழீஇ நிற்கும் உலகு.
                                                                                      (குறள்.544)
அரசின் தொழில்

          குடிமக்களை வருந்தவிடாமலும் தானும் வருந்தாமலும் மக்களைக் காத்து மக்களுக்குத் துன்பம் விளைவிப்பவரை அடையாளங்கண்டு அவர்க்கு தண்டனையளித்துத் தன் பணியைச் செவ்வனே செய்பவரே நல்ல ஆட்சியாளர் எனவும். குற்றத்தை கடிந்துரைத்தல் ஆள்பவருக்கு வடுவாகாது. மாற்றாக அது ஆள்பவரின் தொழிலே ஆகும் என்கிறது இக்குறள்.

                   “குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
                   வடுவன்று வேந்தன் தொழில்”
                                                                                                            (குறள்.549)
அரசுக்குத் துணையாவன

          நாட்டை ஆளும் அரசுக்கு துணைநிற்பவர்கள் அமைச்சர்கள். இம்மரபு அக்காலம் தொட்டே ஆட்சிமரபாக இருக்கின்றமையைக் காணமுடிகிறது. நாட்டை ஆள்பவர் முதல்வராகிறார். முதல்வருக்குத் துணையாக அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவ்வமைச்சர்கள் எங்ஙனம் தேர்ந்தெடுக்கப்படுதல் நலம் என்பதை அமைச்சு அதிகாரத்தின்வழி வள்ளுவர் சுட்டுகிறார்.

                   “அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றுந்
                   திறனறிந்தான் தேர்ச்சித் துணை”
                                                                                                            (குறள்.635)
அறநெறியினை நன்கு உணர்ந்தவராகவும், சொற்திறன் கொண்டவராகவும், செயல்திறன் உடையவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக அரசுக்கு விளங்க முடியும் என்கிறது மேற்காணும் குறள்.

அரசின் செங்கோன்மைப் பாங்கு

          குற்றங்களை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் எனப்பாராது நடுநிலையோடு குற்றத்தினை அறிந்து தண்டனை வழங்கச் சொல்லும் மன்னனின் செங்கோன்மையை வள்ளுவர் பின்வருமாறு உணர்த்துகிறார்.

                   “ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
                   தேர்ந்து செய்வதே முறை”
                                                                                                            (குறள்.541)
இக்கருத்தினை அடியொற்றிய நான்மணிக்கடிகையின் பாடலொன்று, மன்னன் என்பவன் எத்தகையவரிடமும் ஒருசார்பின்றி ஆட்சிபுரிவதே நீதிமுறை எனவும், நடுநிலையோடு இருந்து ஆராய்ந்து நடப்பவனே அரசாளும் இயல்புடையவனாவான் எனவும் அரசாளும் தகைமையினைச் செப்புகிறது.

            “கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்
          உண்ணோட்டம் இன்மையும் இல்” (நான்மணிக்கடிகை.96)

எது நல்ல நாடாகும்

          நாடானது குறைவில்லாத விளைச்சலைப் பெற்றுவிளங்குதலும், அதன்வழி குறைவிலாது அறநெறி அறிந்தவர் வாழ்தலுமாகிய பண்புகளைக் கொண்டநாடு செல்வமிக்கோர் நாடாகச் சேரும் என நாட்டினுடைய இயல்பினை இயம்புகிறது. இங்கு அறநெறிக்கு அடிப்படை விளைச்சலால் நாடு செழிப்படைதலே. நாடு வறுமையுறின் அறநெறிக்குக் கேடு விளைந்து மக்களும் துன்பம் நேரும் என்பது மறைபொருளாக உரைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

                   “தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
                   செல்வரும் சேர்வது நாடு”
                                                                                                            (குறள்.731)
வள்ளுவர் சுருங்கச் சொன்ன இக்கருத்தை சிறுபஞ்சமூலத்தின் பாடலொன்று சற்றே விரித்துச் சொல்லுகிறது. வயலில் நீர் உயரவே நெல் உயரும். நெல் உயர்ந்து வளங்கொழித்தால், அதனை நம்பிவாழும் சீர்பெற்ற குடிகள் உயரும். பல்வேறு குடிகளாகிய மக்கள் உயர்ந்தால் அரசர் உயர்வடைவார் என உலகு உரைக்கும் என்கிறது.

          “நீர்சான்று உயரவே நெல் உயரும் – சீர்சான்ற
          தாவாக் குடிஉயரத் தாங்கு அருஞ்சீர்க் கோ உயர்தல்
          ஓவாது உரைக்கும் உலகு.”
                                                                                                (சிறுபஞ்சமூலம்.44)
அரசுக்குக் கூடாதன

          நாட்டை ஆள்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச் செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாய்ச் செலவிட்டு பொருளனைத்தும் தீர்ந்தபின்பு, அரசை நடத்த மீண்டும் மக்களிடமே பொருள்வேண்டி நிற்கும் நிலையை மிகக் கடுமையாக வள்ளுவர் சாடுகிறார்.  செங்கோல் ஏந்திய மன்னன் மக்களிடத்தில் பொருள்வேண்டுதல் என்பது வழிப்போக்காகச் செல்பரிடம் வழிப்பறி செய்பவன் வேல்எனும் ஆயுதம் கொண்டு பொருள் பறிப்பது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

                   “வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
                   கோலோடு நின்றான் இரவு”
                                                                                                            (குறள்.552)
இங்கு இரவு என்பது மக்களிடம் மன்னன் வேண்டிநிற்பதைக் குறிக்கிறது.

முறைசெய்து காக்கும் அரசுக்குப் புகழ்
            நாட்டையாளும் ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோலாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, தக்கநெறியில் பொருள் சேர்த்து, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும். இத்தகைய நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலே சென்று இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுவர் என்கிறது திருக்குறளின் அரசியல் நெறி.
                   “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
                   இறையென்று வைக்கப் படும்”
                                                                                                            (குறள்.388)

திருக்குறள் கூறும் இத்தகைய அரசியல் நெறிகள் எக்காலத்திற்கும் பொருந்துவனவாக இருப்பதே இதன் தனித்தன்மையாகும். ”திருவள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சி காலம். அந்த காலத்தில் அவர் அரசர்க்குச் சொன்னவையாக அமைந்த அறிவுரைகள் இன்று குடியாட்சிமுறையில் உள்ள தலைவர்களுக்கும் பொருந்தும் மொழிகளாக உள்ளன. (ப.77)” என மு. வரதராசன் அவர்கள் வள்ளுவரின் அரசியல் தொலைநோக்குப் பார்வையை குறிப்பிடுகிறார்.

நிறைவுரை

          அரசியல் உட்கூறுகளான நாடு, நாட்டின் அரசு, அரசின் ஆட்சிமுறை, அமைச்சு, இவற்றின்கீழ் வாழும் குடிமக்கள் என அரசியலுக்குள் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சொல்லப்பட்ட அறநெறிமுறைகளைப் பார்க்கும்பொழுது எந்நாட்டவருக்கும் உகந்தவையாக இருக்கின்றன. திருக்குறள் கூறும் அரசியல் கருத்துக்கள் செவ்வியல் தன்மையால் உயர்ந்து நிற்கின்றன.


                                திருவள்ளுவர் 1935



திருக்குறளில் மனித உரிமைகள்!

 திருக்குறள் உலகப் பொதுமறை எனத் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் வாழ்வியல் சட்டப் புத்தகமாகத் திகழ்கின்றது. திருக்குறளை சட்ட இலக்கியம் என்று கூறலாம். மனிதன் செல்ல வேண்டிய தூய வழிதனையும், கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளையும், முறைகளையும் எடுத்துரைப்பது இலக்கியத்தின் நோக்கம். மனிதனுக்கு வழிகாட்ட எத்தனையோ இலக்கியங்களும், நூல்களும் இருப்பினும் அவற்றுள் முதலிடம் வகிப்பது “திருக்குறளே” ஆகும்.


திருக்குறள் மனித உரிமைகளைக் கூறும் மனித உரிமைப் பிரகடன இலக்கியமாக அமைந்துள்ளது. திருக்குறள் மொழியும் இம்மனித உரிமைக் கருத்துக்கள், அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும். இதனை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டு, செயல் வடிவம் கொடுத்து, காத்து வந்தால் இந்த வையகம் உன்னதமான நிலையை அடையும்.

மனித உரிமை விளக்கம்

‘மனித உரிமை’ என்பது இன்றையச் சூழலில் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. அந்தந்த நாட்டின் நாகரிகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் – இவற்றைப் பொறுத்து ‘மனித உரிமைச் சட்டமும்’, அதைப் பயன்படுத்தும் முறையும், விளக்கங்களும் மாறுபடுகின்றன. ஐ.நா.சபையானது (United Nations Organization) உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ‘மனித உரிமை சாஸனத்தை’ உருவாக்கி உள்ளது. இச்சபையானது மனித உரிமைகள் பிரகடனத்தையும் 1948-ம் ஆண்டு செய்துள்ளது. ஐ.நா.சபையானது மனித உரிமைகளை உருவாக்கினாலும் அவற்றை அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

10-12–1948 அன்று ஐக்கிய நாட்டுச் சபை உலக மனித உரிமைப் பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) உருவாக்கிய, மனித உரிமைப் பிரகடனத்தின்படி மனித உரிமை எனப்படுவது ‘ஒருவன் மனிதனாக இருப்பதனாலேயே அவனுக்குள்ள இயற்கையான உரிமைகள் மனித உரிமைகள்’ ஆகும். (Human rights are the rights one has simply because one is a human being) எல்லா மனிதர்களுக்கும் அவ்வுரிமைகள் பொதுவானவை.
மனித உரிமை என்பது மனிதனுக்கு உள்ள அடிப்படை உரிமையையும், சுதந்திரத்தையும் குறிக்கும்.

பொருளாதார நிலை, நாடு, எல்லைகள், வயது, திறமை, இனம், பால் ஆகியவற்றைக் கடந்து, ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதாக மனித உரிமை அமைந்திலங்குகின்றது. வாழ்வுரிமை(Right to Life), சுதந்திரம்(Freedom), சமத்துவம்(Equality), நீதி(Justice), சிந்தனைச் சுதந்திரம்(Freedom of Thought), எழுத்து / பேச்சு சுதந்திரம்(Freedom of Expression) உள்ளிட்டவை அடிப்படை உரிமைகளில் அடங்கும்.

மனித உரிமைகளின் வகைகள்

மனித உரிமைகள் இரு வகைப்படும். அவையாவன,

1. குடி / அரசியல் உரிமைகள் (civil and political rights),

2 சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் (Economic, social, and cultural rights)
என்பனவாகும்.

1.குடி / அரசியல் உரிமைகள் (civil and political rights)
குடி / அரசியல் உரிமைகளை ஆறுவகைகளாகப் பகுக்கலாம். அவையாவன,

(அ) வாழ்வுரிமை (Right to life)
(ஆ) நாட்டின் உரிமை (Right to nationality)
(இ) சட்டத்தின் முன் சமமான தன்மை (Equality before law)
(ஈ) சிந்தனை உரிமை (Freedom of thought)
(உ) எழுத்து / பேச்சு உரிமை (Freedom of expression)
(ஊ) பாதுகாப்பு உரிமை
என்பனவாகும்.

2 சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் (Economic, social, and cultural rights)
சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை,

(அ) உணவு உரிமை (Right to food)
(ஆ) உறையுள் உரிமை (Right to shelter)
(இ) வாழ்க்கைத் தகுதி (Standard of living right)
(ஈ) வேலைக்கு உரிமை (Right to work)
(உ) கல்வி உரிமை (Right to education)
(ஊ) கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பு (Right of participation in cultural activities)
(எ) தனிச் சொத்து உரிமை (Right to personal property)
என ஏழுவகைகளாகப் பகுக்கலாம்.

அரசோ பிறரோ அடுத்தவருடைய மனித உரிமைகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும்,
உறுதிப்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகும். சுருங்கக் கூறின், பால், இன வேறுபாடின்றி உலகின் அனைத்து ஆண், பெண்களுக்குள்ள உரிமைகள் மனித உரிமைகள் ஆகும். ஒருவரது பிறப்பு, நாடு, சாதி, சமயம், சொத்து, நிறம் ஆகிய எதனாலும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை மனித உரிமைகள் ஆகும்.

திருக்குறளில் மனித உரிமைகள்

திருக்குறளில்,

1. வாழ்வு உரிமை ( Right to life)
2 .பொருளாதார உரிமை ( Economic right)
3. கல்வி உரிமை (Right to education)
4. பேச்சுரிமை ( Right to expression)
5. நீதி பெறும் உரிமை (Right to equality before law)
6 .தன்னுரிமை ( Right against self injury)
ஆகிய மனித உரிமைகள் காணப்படுகின்றன.

1வாழ்வுரிமை

உலகில் பிறந்த அனைவருக்கும் வாழுகின்ற உரிமை உள்ளது. வாழ்வுரிமை என்பது உயிர் வாழும் உரிமை எனப் பொருள் கொள்ளுதல் சரியாகாது; தரமான வாழ்விற்குரிய உரிமை எனக் கொள்ளவேண்டும். வாழ்க்கைத் தரம், சுகாதாரச் சுற்றுச்சூழல், தூய்மையான பணியிடம், தேவையான ஓய்வு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதே வாழ்வுரிமை ஆகும்.

சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் முதல் பிரிவானது, “எல்லா மனிதர்களும் உள்ளார்ந்த சுதந்திரத்தோடும், மாண்போடும், உரிமைகளோடும், சமத்துவத்தோடும் பிறக்கின்றனர். அவர்களுக்கு அறிவும், மனசாட்சியும் உள்ளன. எனவே, ஒருவருக்கு ஒருவர் சகோதர உணர்வோடும், ஒருவரை ஒருவர் மதித்தும் வாழ வேண்டியது அவர்தம் கடமையாகும்” என்று குறிப்பிடுகின்றது. இதனைத் திருவள்ளுவர்,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (குறள் 972)
என்று உணர்ர்த்தியுள்ளார்!

பிறப்பினால் எவரும் வேறுபடுவதில்லை; பிறப்பினால் மனிதர்களை வேறுபடுத்துவது தவறு. “உழைப்பே உயர்வளிக்கும்” என அறிவுறுத்துகிறார். மேலும் ஒவ்வொருவருக்கும் பசி, பிணி, பகையின்றி வாழும் உரிமை உள்ளதென்றும், அவற்றினின்று தம் குடிமக்களைக் காத்தல் அரசின் கடமையென்பதை,
“உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும்
சேறாது இயல்வது நாடு” (குறள் 734)
எனத் திருவள்ளுவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

பொருள் வரும் வழிகளை உண்டாக்குதல், பெற்ற பொருட்களைச் சேர்த்தல், சேர்த்தவற்றைக் காத்தல், அவற்றைக் குடிமக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தல் ஆகியவற்றைச் சிறப்பாகத் திறன்படச் செய்பவனே நல்ல அரசன் என்ற கருத்தை,
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு” (குறள் 385)
என்று வள்ளுவர் மொழிகின்றார். அத்தகு அரசனின் கீழ் வாழும் குடிமக்கள் அச்சமும், கவலையுமின்றி இனிது வாழ்வர்; அவர்தம் வாழ்க்கைத் தரம் நன்கு விளங்கும். இத்தகு வாழ்வுரிமை அவ்வரசின் கீழ் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் உண்டு என வள்ளுவர் அறிவுறுத்துவது நோக்கத்தக்கது.

உணவு உரிமை

வாழ்வுரிமைகளில் மிகவும் இன்றியமையாதது “உணவு உரிமை” ஆகும். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பசியின்றி உணவுண்டு மகிழ்வாக வாழ்வதற்கு உரிமை உடையன. மேலும் உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்கச் செய்வது உலகை ஆளுகின்ற அரசாங்கத்தின், சமுதாயத்தின் கடமையாகும். வள்ளுவர் வாழ்ந்த சமுதாயத்தில் பொதுவுடைமை, ஜனநாயகம் போன்ற கருத்துக்கள் தழைத்தோங்காத காலம். தனியுடைமைத் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சமுதாயம். அத்தகைய சமுதாயத்தில் வளமையும் வறுமையும், ஏற்றமும் தாழ்வும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி, பசியால் இறந்தநிலையும் வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்துள்ளது. இச்சீர்கேட்டினை எண்ணி மனம் வெதும்பிய வள்ளுவர் தமது திருக்குறளில் நல்குரவு, இரவு, இரவச்சம் ஆகிய அதிகாரங்களைப் படைத்துள்ளார். ஒரு சாரார் வளமுடன் வாழும் நிலையில், மற்றொரு சாரார் பிச்சை எடுத்து உண்ணும் நிலை சமுதாயத்தில் நிலவுகிறதல்லவா? அதற்குக் காரணமாக நாம் அனைவரும் விதியை நொந்து கொள்ளுகிறோம்! இறைவனைச் இழித்தும் பழித்தும் தூற்றுகிறோம்!

திருவள்ளுவர் இந்நிலைக்கு இறைவனும், விதியும் காரணமென்றால், அவ்விறைவன் எதற்கு என்று நினைத்து,
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்” (குறள் 1062)
என்று சாபமிடுகிறார்!

பிச்சையெடுத்துதான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் இறைவன் உயிர்களைப் படைத்திருந்தால், அப்படிப் படைத்தவனே இந்த உலகிற்கு வந்து பிச்சையெடுப்பவரைப்போல தானும் அலைந்து திரிந்து கெட்டுப் போகட்டும் எனக் கோபமுற்றுக் கூறுகிறார்!

சமுதாயத்தில் எல்லோரும், எல்லாமும் பெற்றுச் சமமாக வாழும் உரிமை உள்ளது என்பதை இக்குறள் நமக்கு எடுத்தோதுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வு, அதனால் ஏற்படும் வறுமை, அதன் விளைவாய் இரத்தல் ஆகியவை கொடுமை. இக்கெடுமைகளற்ற சமுதாயமே மனிதனையும் மனித வாழ்வையும் உயர்த்த முடியும் என்ற கருத்தை இதன்மூலம் தெளிவுறுத்துகிறார்.

பொருளாதார உரிமை

பொருள் தேடும் உரிமை, அதனைப் பாதுகாக்கும் உரிமை சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு எனத் திருக்குறள் தெளிவுறுத்துகிறது. அப்படிப் பொருள் தேடுவது அறவழியில் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

வினைத்தூய்மை என்ற அதிகாரத்தில்,
“அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற் பா லவை” (குறள் 656)
என்று திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
பிறர் வருந்தும்படி ஒருவன் அடைந்த பொருள் அனைத்தும், பொருளானது தன்னைப் பெற்றவன் வருந்தி அழும்படி அவனை விட்டுப் போய்விடும் தன்மை கொண்டது. நல்ல வழியில் வந்த பொருள் தொலைந்தாலும் பின்னர் நன்மையே தரும்.

பொருளாதார உரிமை அனைவருக்கும் உண்டு. அப்பொருளைத் தேடுவதற்காக அடுத்தவர் உரிமையை மீறுவது தவறு; அற வழி தவறி முறையற்ற வகையில் பிறரை வஞ்சித்துப் பொருள் சேர்ப்பது கீழ்த்தரமான செயலாகும்; அஃது இகழ்தற்குரியது. வள்ளுவர் இதனை,
“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை” (குறள் 656)
என்று எடுத்துரைக்கின்றார்.

தன்னைப் பெற்ற தாய் பசியால் வாடுவதைப் பார்த்து மனம் வருந்தி வேதனைப்படும்பொழுதுகூட, சான்றோர்கள் பழிப்பதற்குக்குக் காரணமான இழிந்த செயல்களை செய்யக் கூடாது.

அறமற்ற வழியில் பொருள் சேர்த்தல் தவறு என்று மக்களுக்கு உணர்த்தி, சரியான முறையில் பொருளீட்டும் முறைதனை உணர்த்துவதால் லஞ்சமற்ற, சுரண்டலற்ற சமுதாயத்திற்கு வள்ளுவப் பெருந்தகை வழி காட்டுகிறார்!

பிறருக்குக் கொடுமை செய்து கீழ்த்தரமாக நடத்துதல்
உலக மனித உரிமைகள் பிரகடத்தின் 5-ம் பிரிவுவானது “எவரையும் சித்திரவதை செய்யக்கூடாது. கொடூரமாக, மனிதத் தன்மையற்றுக் கேவலமாக நடத்தக்கூடாது. கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது” என்று எடுத்துரைக்கின்றது. அரசு குடிமக்களை கண்ணோட்டமின்றி வருத்தக்கூடாது. அவர்கள் ஆற்றாது அழுத கண்ணீரே கொடுங்கோல் அரசைத் தேய்க்கும் படையாக அமையும். எனவே அரசன் நேர்மையான முறையில் தன் குடி மக்களைக் காத்து நேரிய வழியில் அறவழியில் ஆட்சி செய்ய வேண்டுமென்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.

இதனை,
“அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீற் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” (குறள் 555)
என்ற திருக்குறள் எடுத்துரைக்கின்றது. கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டுத் தாங்க முடியாமல் மக்கள் குமுறி அழும் கண்ணீரே முறையற்ற ஆட்சியை அடியோடு அழிக்கும் ஆயுதமாகும்.

உணர்வுகளைப் புண்படுத்துதல்

மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துதல் மனித உரிமை மீறல் ஆகும். மனிதனை அவனுடைய உள்ளார்ந்த உணர்வுகளோடு மதிக்க வேண்டும் என்பது மனித உரிமையாகும். சுடுசொற்களினால் அடுத்தவரது உணர்வுகளைப் புண்படுத்துதல் கூட உரிமை மீறல் ஆகும் என்பதை,
“இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது”. (குறள் 99)
எனத் திருவள்ளுவர் தெளிவுறுத்துகிறார்.

பிறர் சொல்லும் இனிமையான சொற்கள் தனக்கு இன்பத்தைத் தருவதை உணர்ந்த பிறகும், மற்றவர்களிடம் கடுமையான சொற்களைப் பேசுவதனை மனிதர்கள் தவிர்த்தல் வேண்டும்.

பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் தருவதைக் காண்கின்றவன், தன் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன், தான் மட்டும் பிறரிடம் வன்சொல் கூறி அவர்கள் மனத்தைப் புண்படுத்துதல் முறையாகாது. அது மனித உரிமை மீறலாகும் என்று வள்ளுவர் மொழிகின்றார்.
எழுத்துரிமையும் பேச்சுரிமையும்
மனித உரிமைகளுள் முக்கியமான ஒரு உரிமை தன் கருத்துக்களை எழுத்து, பேச்சு மூலம் வெளிப்படுத்துவது. இது இல்லையெனில், மற்ற உரிமைகளும் பயனற்றுப் போகும். மனிதனுக்குச் சொல்லுரிமை இருக்கிறது என்று கூறும் திருவள்ளுவர், அத்திறமையை வளர்த்துக் கொள்வதற்கு ,
“சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இனிமை அறிந்து”. (குறள் 645)
என்று வழி காட்டுகிறார்.

தான் சொல்லுகின்ற சொல்லை வெல்லக் கூடிய வேறு ஒரு சொல் எதுவும் இல்லை என்பதை நன்கு அறிந்த பின்னரே சொல்ல நினைத்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதை,
“சொலல் வல்லன் சோர்வு இலான் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது” (குறள் 647)
என்று தெளிவுறுத்துகின்றார். எதையும் சொல்லுவதில் வல்லவனாகவும், மறதியும், சோர்வும் இல்லாமல் சொல்லுபவனாகவும், எதற்கும் பயப்படாதவனாகவும் உள்ள சொல்வன்மைமிக்கவனை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. வள்ளுவரின் இக்குறட்பாக்கள் மனிதனுக்குள்ள எழுத்துரிமையையும் பேச்சுரிமையையும் விளக்குவனவாக அமைந்துள்ளன.

நீதி பெறும் உரிமை

உலக மனித உரிமைப் பிரகடத்தின் 7, 8 பிரிவுகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எடுத்துரைக்கின்றது. இவ்வுலகில் வாழும் அனைவரும் சட்டப்படி சமமான பாதுகாப்புரிமை படைத்தவர். எவ்வகையான பாகுபாடும் காட்டப்படாமல் சமமாக நடத்தப்பட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அடிப்படை உரிமைகள் சட்டப்படி அளிக்கப்படவும், அவை மீறப்படும் பொழுது தகுதி வாய்ந்த நீதி அமைப்புகளின் மூலம் தீர்வுகள் பெறும் உரிமையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உண்டு.

“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”. (குறள் 388)
நீதி நெறி முறைகள் தவறாமல் குடிமக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளரை மக்கள் ஒப்பற்ற தெய்வமென மதித்துப் போற்றுவர்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், நீதியைப் பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நிலை நாட்டுவது அரசின் கடமை என்பதைத் திருவள்ளுவர் அறத்துப்பால் “நடுவு நிலைமை” அதிகாரத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார்.

வலியுறுத்துகிறார். அரசு மட்டுமல்லாது மக்களும் நடுவு நிலைமை தவறாது வாழ வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்தியிருப்பது போற்றுதற்குரியதாகும்.

கல்வி உரிமை

கல்வியானது உலகை உய்விக்கும் ஒப்பற்ற கருவியாகும். கல்வியே மனிதனை மனிதனாக்குகின்றது, பண்பட்ட மக்களாக மாற்றுகின்றது. சமுதாயம் முன்னேற்றம் காண்பது கல்வியினாலேயே என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய கல்வியை அரசு அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களையும் கல்வி கற்க வேண்டும் என்று அரசானது மக்களைக் கட்டாயப்படுத்தல் வேண்டும். அதை நமது நடுவண் அரசு சட்டமாக இயற்றியுள்ளது. இதனைப் புரிந்து கொண்டு, அதை முழுமையாக ஏற்று வெற்றி அடையச் செய்ய வேண்டியது மக்களின் தலையாய கடமையாகும். கல்வி பெறுவதை ஒரு மனித உரிமையாகக் கருதிக் காத்தல் வேண்டும்.

அதனாலேயே வள்ளுவர் கல்வி கற்றலின் இன்றியமையாமையை ஓர் அதிகாரம் முழுமையும் விளக்கியுள்ளார். கல்லாதலினால் ஏற்படும் கேட்டினையும் வள்ளுவப் பெருந்தகை தெளிவுபடுத்தியுள்ளார்.

கல்வி இன்னாருக்குத்தான் உரியது என்று வறையறுக்காது, அனைவருக்கும் பொது என்பதை,
“யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு”. (குறள் 397)
என வள்ளுவர் விளக்குகிறார்.

கற்றவர்களுக்குத் தன் நாட்டையும் ஊரையும் போலவே பிற நாடுகளும் ஊர்களும் உரிமை உடையவனவாகும். அப்படி இருக்க ஒருவன் சாகும்வரை கற்காமல் காலத்தை வீணாக்குவது ஏன்? என்று வியக்கிறார் வள்ளுவர். மேலும் கல்வியே மனிதர்களுக்கு உற்ற துணை என்பதை,

“கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை”. (குறள் 414)
என எடுத்துரைக்கின்றார் வள்ளுவர். ஒருவன் கற்கவில்லையென்றாலும் கற்றவர்கள் சொல்வதைத் தவறாமல் கேட்டறிய வேண்டும். அது அவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போன்று துணையாய் அமையும். கேடில் விழுச்செல்வம் கல்வி அனைவருக்கும் உரியது; ஒருவன் அனைத்து முயற்சியும் செய்து கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும். அது அவனது உரிமையாகும் என்பது வள்ளுவர் தரும் கல்வியுரிமை குறித்த சிந்தனையாகும்.

தன்னுரிமை

யாரும் தன்னுடல், உயிர், உள்ளம் (ஆன்மா) ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பது “தன்னுரிமை” எனப்படும்.

ஒருவன் ஒன்றை அறிந்து கொண்டே பொய் சொல்லுதல் தன்னுரிமை மீறிய செயல் ஆகும். அவ்வாறு செய்தால் அவருக்கு அவர் மனமே துன்பத்தைக் கொடுக்கும் இதனை,
“தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்”. (குறள் 293)
என்று வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.

உறங்கியவர்கள், இறந்தவர்களைவிட வேறுபட்டவர்கள் ஆக மாட்டார்கள்; அதேபோல் கள் குடிப்பவர்கள் அறிவு மயங்குகின்ற காரணத்தினால் விஷம் குடிப்பவரினின்று வேறுபட்டவர் அல்லர்.

பிறன் மனைவியை விரும்பி, வஞ்சகமாய் வாழ்கின்றவனிடம் பகை, பாவம், பயம், பழி ஆகிய நான்கு குற்றங்களும் எப்பொழுதும் நீங்காமல் நிலைத்து நிற்கும். இத்தகைய தன்னுரிமைகளை,
“துஞ்சினார் செத்தாரில் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்”. (குறள் 926)
“பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல் இறப்பான் கண்”. (குறள் 146)
என வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
கடமையும் உரிமையும்
உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. “கடமையை ஒழுங்காகச் செய்யாதவருக்கு, உரிமையைக் கோருவதற்கு உரிமையில்லை” என்று அறிஞர் மு.வரதராசனார் கூறுவது நோக்கத்தக்கது.

பிறர் நலனைப் பேணுவதற்காக, பிறர் உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென சட்டம், எதை விதிக்கின்றதோ அதைத் தவறாது செய்தலும், செய்யக் கூடாதவற்றை செய்யாதிருப்பதும் நமது கடமை ஆகும்; நாம் கடமையைச் சரிவரச் செய்யும்பொழுது உரிமை இயல்பாகக் கிடைத்து விடும் என்பதை,
“குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்குத் தான் முந்துறும்”. (குறள் 1023)
என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் ஒரு காலத்தில் இந்த உலகில் மனித உரிமை கோரப்படும் என்பதை உணர்ந்து மனித உரிமைக் கோட்பாடுகளை திருக்குறள்களாக வடித்துக் கொடுத்துள்ளமை போற்றுதற்குரியதாகும். திருக்குறள் உணர்த்தும் உரிமைகளைப் பின்பற்றி உலகம் வாழ்ந்தால் வானவர் போற்றும் நிலைக்கு உயரும் என்பது திண்ணம்.

தமிழ் பேசுபவர்கள் எல்லோம் தமிழர்களா?

ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை இறைவனாகிய சிவனை ஆயீரம் பெயர்கள், ஆயீரம் வடிவங்கள் , ஆயீரம் உறவு முறைகள் கொண்டு வழிபட்டான். அவ்வாறு தம்முள் கண்ட  மணிதனுக்கு இறைவனாகிய சிவன் அருளியதே தமிழ். 

சிவன் அருளிய தமிழை தம்முள்  உள்ள சக்கரங்கள் அச்சரங்கள் உற்பத்தி செய்வதை அறிந்து கொண்டான். அவ்வாறு உற்பத்தி செய்த அச்சரங்களை கொண்டு அகத்தியர் முத்தமிழுக்குமான இலக்கணத்தை வகுத்தாா்.

 ஆகவே சிவனை முழுமுதலாக கொண்டது தமிழ். தமிழையும் சிவனையும் பிரித்து பாா்த்தால் நாம் எமது வாழ்வியலை அடைய முடியாது. தமிழின் கலாச்சார பண்பாடுகளும், தமிழும் சிவமும் கலந்ததே தமிழ்தேசியம் ஆகும். ஒன்றில் இருந்து ஒன்றை பிாித்து பாா்பது சிவகுற்றம். அன்னியர்களின் தேசிய கோட்பாடு தமிழுக்குள் என்றும் அடங்காது.

தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளக் கூறுகளுடன் சைவத்துடன் கலந்து வாழ்பனே தமிழன்.

Wednesday 24 February 2021

இந்து

இந்து என்பது தமிழ் சொல். சந்திரனை குறிக்கின்ற சொல். சிவனை குறிக்கின்றது.சந்திரனைத் தலைமணியாக அணிந்த பெருமான் "இந்து" சிகாமணி எங்களை ஆள எழுந்தரு ளப்பெறிலே". திருவாசகம் பேசுகின்றது.  "இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை" விநாயகப் பெருமானை குறிக்கும்.            

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்),  அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் .   இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம்.  ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் .   உண்மை, உய்வு, உயர்வு, உயிர், உரிமை, உறவு, உற்சாகம், உருவம், உருவஅருவம், உலகம், உள்ளொளி. . .;  ஊக்கம், ஊற்றுக்கண், ஊடகம் . எல்லா, எச்சம், எழுத்தருளி . . . ;  ஏற்றம், ஏந்து, ஏகம்,  ஐயன், ஐந்தரம், ஐந்திரம், ஐந்திறம், ஐம்பூதம், ஐந்தெழுத்தான். ஒலி, ஒளி, ஒண்மை, ஒட்பம், ஒழுக்கம், ஒன்றுதல், ஒற்றுமை .  ஓமம், ஓகம், ஓதம், ஓதுதல், ஓங்காரம். . .;  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கடவுள், கல்வி, கன்னி, கரு, கதை, காதை, கவிதை (காவியம், காப்பியம்). கீதை... ;  சத்தி, சத்து, சத்தியம், சமயம், சமுதாயம், சமத்துவம், சகோரத்தத்துவம், சமாதானம், சந்திப்பு, சங்கமம், சங்கம், சித்து, சித்தம், சிவன் சுருதி.. .;  தமிழ், தலைவன், தன்னொளி, தரு, தண்ணீர், தன்னையறிதல், தலைவனையறிதல், தவம், திரு.. .;  பற்று, பந்தம், பண்பு, பதி, பசு, பழக்கம், பராசத்தி, பசுமை, பிறமண், பிண்டம், பேரண்டம், பகலவன், பகவதி, பாசம், பாவை, பூ, பூசை, போதம்,  ஞானம், ஞாலம், ஞாயிறு,  நலம், நல்வாழ்வு, நம்பிக்கை, நட்பு, நமசிவாயம், நங்கை, நாயகி, நாராயணன், நேமம், நியமம், நிடதம், நிட்டை, நீதி, நாதம், நெறி...;  மனம், மதம் மகிழச்சி, மறை, மகாசத்தி, மகேசுவரன், மகேசுவரி, மங்கை, மறை, முறை, மீமாம்சை.. .;  யக்ஞம், யாகம், யோகம், வள்ளல், வள்ளண்மை, வல்லமை, வணக்கம், வாழ்த்து, வெற்றி, வேகம், வேதம், வேள்வி வையகம்.

என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன.

இவை போன்று நூற்றுக் கணக்கில் ஏராளமான சொற்கள் இந்து என்ற சொல்லுக்கு பொருள் கூறுவனவாக மூன்றாவது யுகத்திற்கு முன்பே இருந்ததாக ஒன்பதாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் வைகையாற்றங்கரைக் கருவூறார் அவர்களும்; எட்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் குறிக்கிறார்கள்.

இப்படி, இந்த இந்து என்ற ஒரு சொல் ஒர் ஒப்புயர்வற்ற பொருட்செறிவும், பொருளாழமும் மிக்க அழகிய இனிய அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ்ச் சொல்லாகும்.

இந்த இந்து எனும் சொல்லே அண்ட பேரண்டமாளும் பதினெண்சித்தர்களுடைய தத்துவங்களையும், செயல் சித்தாத்தங்களையும், கொள்கைகளையும், குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், சாதனைகளையும், போதனைகளையும் அருட்கொடைகளையும் முழுமையாகக் குறிக்கின்ற ஒரே ஒரு சொல்லாகும்.


தமிழர்கள் மீதான முஸ்லிம் படுகொலைகள்

 பாகம்--01

தமிழர் தரப்பு பேச மறுத்த தமிழர்கள் மீதான முஸ்லிம் மேற்கொண்டGENOCIDE தமிழின இன படுகொலைகள். 

குறிப்பு-----

கைலாய மலையில் இருந்து இலங்கை வரை வாழ்ந்த தமிழர்களை அழித்தவர்கள் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் என்பதனை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.

பெளத்த பேரினவாதம் தமிழர்களை கொலை செய்கின்றது என்று கூறி போராட்டம் செய்பவர்கள் முகமதியருடைய தேசியத்தை கிழக்கு மாகாணத்தில் நிறுவுவதற்காக தமிழர்கள் மீதான முஸ்லிம்  மேற்கொண்ட படுகொலைகளை  பேச மறுப்பதும், அதேபோன்று மன்னாாில் கத்தோலிக்கம் மேற்கொள்ளுகின்ற தமிழ் இன அழிப்பிற்கும் எதிராக போராட்டங்கள் செய்ய மறுப்பதற்கு காரணம் பெளத்த மதத்திற்கு எதிராக போராட்டங்களை செய்பவர்களை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கத்தோலிக்க நிறுவனங்களும் அரேபிய இஸ்லாமி நிறுவனங்களும் ஆகும்.

.முஸ்லீம்களுக்கு நானே ஆயுதம் வழங்கினேன். இந்துக் கோயில்களை நானே அபகரித்தேன். தமிழர் காணிகளை நானே கைப்பற்றினேன், என்பதை ஒப்புக்கொள்கிறார் ஹிஸ்புல்லா. 

திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

திராய்க்கேணி ( Thiraayk-kea'ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர்.களினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.

1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் மிகப்பெரிய இனப்படுகொலை செய்தவர்கள் இஸ்லாமியர்கள். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் முஸ்லீம் ஊர்காவல் படையினர் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர்.

இச்சம்பவத்தில் ௮வயதுக்கு உட்பட்;ட ௬௮ சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் ௮0க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய முஸ்லீம் ஊர்காவல் படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.

1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.

26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்கள்.

காத்தான்குடி என்று கடையை விரிக்கிற யாரும் இதுபற்றி பேசத் தயாரில்லை.

 6ஆகஸ்டு 1990 - அம்பாறை திராய்க்கேணி படுகொலை – 47 தமிழர்கள்

9செப்டம்பர் 1990 - பிள்ளையாரடி, திராய்மடு படுகொலை- 198 தமிழர்கள்

20யூன் 1990 - வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை – 69 தமிழர்கள்

யூன் ஆகஸ்டு 1990 - வீரமுனை தொடர் படுகொலைகள் – 163 தமிழர்கள்

 ஆகஸ்டு 1990 - நிந்தவூர் முருகன் கோவிலில் படுகொலை- 64 தமிழர்கள்

 16.07.1990 மல்வத்தை  முஸ்லீம் ஊர்காவல்படையினர் சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். 

01.08.1990 சவளக்கடையில் முஸ்லீம் ஊர்காவல்படையினர் 18பேர் கைது  தமிழர்களை கைது செய்து கொலை செய்தனர்.

கிழக்குப்பல்கலைக்கழகப் படுகொலைகள்:1990.செப்.5 (கப்டன் முனாஸ் +மஜித் +ஏறாவூர் முஸ்லிம் ஊர்காவல் படை தலமை வகித்தது)

கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன.
பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.
தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம்.
இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.
1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் டுகொலைசெய்தனர்.
மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக மைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன.
சம்மாந்துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில், ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன./" இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்றுவரை விசாரணையும் இல்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை.
இந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போது பேசுவதை மறந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.





Tuesday 23 February 2021

புலிகளை அழித்தது பாக்கிஸ்தான்.

 விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் - அவர்களை அழிக்க நாம் உதவினோம் - பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.


https://www.youtube.com/watch?v=CTK0WIxJCvU&feature=youtu.be&ab_channel=NPTAMILNEWS

கொம்பு சீவி விடும் கிறிஸ்தவ மரபு அல்லது பாரம்பரியம்.

 மரபு அல்லது பாரம்பரியம் (Heredity) எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து, சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும். சந்ததியின் உயிரணு அல்லது உயிரினம் உருவாகும்போதே, பெற்றோர் உயிரணு அல்லது உயிரினத்தில் இருந்து இயல்புகளைப் பெற்றுக் கொள்வது இந்த செயல் முறையினாலேயே ஆகும்.[1] இந்த பாரம்பரிய செயல்முறையின்போது, இயற்கையாகவும், சூழல் தாக்கத்தினாலும் உயிரினங்களில் வேறுபாடுகளும் தோன்றுவதனால், அவற்றில் புதிய இயல்புகள் உருவாகி புதிய இனங்களும் தோன்றும். உயிரியலில் பாரம்பரியம் பற்றிய கல்வி மரபியல் எனப்படும்.

தமிழர் மரபில் இருந்து மாற்றமடைந்த போர்த்துக்கேய ஒல்லாந்த ஆங்கிலேய உயிரியல் சமூக தாக்கத்தினால் உருவான கிறிஸ்தவ மரபு தமிழர் மரபாக முடியாது. இது சமூக விஞ்ஞான ரீதியான முடிபு.

ஆனால் தமிழர் மரபுரிமை பேரவை என்ற போர்வையில் தமிழ் மரபினை பாராம்பரியத்தை அழிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் செயல் வனமையாக கண்டிக்கத்தக்கது. இது விலைமாது ஒருத்தி பத்தினிகள் சங்க தலைவியாக இருப்பதைப் போன்றது. 

வாள் கத்தி துப்பாக்கி என ஆயுதமுனையில் தமிழர் பாரம்பரியமும், அவர்களின் கலாச்சார பொக்கிஷங்களான ஆலயங்களும் அழிக்கப்பட்ட வரலாறுகள் கண்முன் இருக்கையில், அதற்காக சிறிதேனும் வருந்தாது இன்று வரையில் எஞ்சியுள்ள தமிழர்களையும் அவர்களின் மரபுகளையும் அழிக்கும் கிறிஸ்தவ மதமாற்ற கூட்டங்கள் தமிழர் உரிமைக்காக போராடுவதாக நாடகமிடுவது மிகவும் அருவருப்பான செயல்.

பாதிரிகளின் தலைமையில் செயற்பட்டு தமிழர் சிங்களவர் ஒற்றுமையின்மையை  ஏற்படுத்த துடிக்கும் தமிழர் மரபுரிமை பேரவை என்ற அமைப்பிற்கும் உண்மையான தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனை சக சிங்கள மக்களுக்கும் உணரச்செய்தல் வேண்டும்.

இவர்களது நோக்கம் தமிழர் மரபினை காப்பதல்ல, தமிழ் சிங்கள மோதலுக்காக கொம்பு சீவி விடும் வேலைகளைச் செய்வதே.

 இலங்கையில் தமிழ் சிங்கள மோதலுக்காக கொம்பு சீவி விடும் வேலைகளைச் செய்வதே கத்தோலிக்க கிறிஸ்தவ போராட்டங்கள்.  மோதல் தொடங்கி விட்டால் மீண்டும்  பிணங்களின் மீது ஏறி நின்று தமிழன் என்று அடையாளப்படுத்தும்  அனைத்து அடையாளங்களையும் அழித்து கிறிஸ்தவ தேசிய அடையாளங்களாக மாற்றி தம் மதமாற்றத்தின் ஊடான தமிழின அழிப்பு வியாபாரத்தை தொடங்கி விடுவார்கள்கத்தோலிக்கர்கள்.




பெளத்தம்

 தமிழ் பெளத்தமும் சிங்கள பெளத்தமும் தமிழ் மரபை சார்ந்தவை.



Monday 22 February 2021

தமிழ்தேசியத்தின் வாழ்வும் கொரோனாவும்.

 தமிழ்தேசியத்தின் சுகாதாரத்தை   மூடநம்பிக்கை என்ற உங்களுக்கு முகம் கழுவச்சொல்கிறது மருத்துவம். ஆதித்தமிழரின் தமிழ்தேசிய பாரம்பரியம், பண்பாடுகளை திரும்பிப்பார்க்கும் உலகத்தினை, நாம் பார்க்கும் வசதிகளுடையதே  இன்றைய நவீன கைபேசிகள். இது தான் உண்மைகள் உணரும் யுகம்.  அறிவாற்றலினால் நம் முன்னோர்கள் சொன்னவற்றை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் ஐநா சொன்னால் தான் உண்மை, தமிழர் வாழ்வியல் வழிமுறைகள் மூடநம்பிக்கை என்று சொல்பவர் இன்னும் இருக்கவே செய்கின்றனர்.

ஆதித்தமிழ் மக்களின் சில வாழ்வியல் வழிமுறைகள்
(1) வந்தாரை வரவேற்கும் பண்பாடு எங்கள் தமிழர் பண்பாடு. இருகரம் கூப்பி வந்தனம் செய்தே வரவேற்றனர்.
(2) வாசலில் பசுவின் சாணத்தினால் மெழுகப்பட்ட முற்றத்தில் கோலங்கள் மற்றும் மஞ்சளினால் ஆன பிள்ளையாருடன் அறுகம்புல்.
(3) வாசலில் மஞ்சள் , நிலையில் மாவிலை வேப்பிலை தொங்கிக்கொண்டிருக்கும்.
(4) சாணத்தினால் மெழுகப்பட்ட அடுப்பங்கரை
(5) எலுமிச்சம் பழப்புளி , சாம்பல் தேய்த்த கோப்பையில் தேநீர் மற்றும் சாப்பாடு
(6) கை , கால் , முகம் கழுவிய பின்னர் , விபூதி தரித்து உணவு உண்டனர் எங்கள் முன்னோர்கள்.
(7) ஒரே கோப்பையில் சாப்பிடாமல் வாழையிலை , தாமரையிலை போன்று இலைகளில் விருந்தளித்தார்.
(6) உண்ணும் உணவில் கண்டிப்பாக பருப்பு வைத்தனர். பருப்பில் மஞ்சள் வைத்தனர்.
(7) கடைசியில் ரசத்தினை வைத்தனர் ரசத்தினுள் உள்ளி , மிளகு , மிளகாய் என அள்ளிப்போட்டனர்
(8) பெண்கள் தினசரி மஞ்சள் பூசினர்
(9) அனைவரும் மூன்று குறியுடன் திருநீறு பூசினர்
(10) கோவில் வாசலில் கைகால் கழுவினர்
(11) கோவிலினுள்ளே தீபங்கள் ஏற்றினர்
(12) பூசைகள் தோறும் சங்கொலி , சேமக்கலம் , மேளம் , பறை , மணியென மாறிமாறி முழங்கினார்.
(13) தீபவரிசையில் கடைசியில் வீடுசெல்ல முன்னர் பஞ்சரார்த்தி என்று ஐந்து இடங்களில் கற்பூரம் வைத்து விளாசியெரித்து இருகைகளாலும் தொட்டு வணங்கினர்.
(14) பின்னர் விபூதி தரித்து தீர்த்தம் கொடுத்தனர். தீர்த்தனினுள்ளே திரவியங்களை போட்டனர்.
(15) கோவிலுக்கு சென்று வந்தால் மீண்டும் கைகழுவாமல், முகம் கழுவாமல் அப்படியே இருக்க சொன்னார்கள்.
(16) சாவு விழுந்தால் பறை அடித்தனர்
(17) சுடலை சென்றால் உலக்கையை கடந்து வேப்பிலை உண்டனர்
(18) சாவுவீடு சென்றால் வெளியிலே குளித்தனர் , கிணற்றினைத் தொடாது மற்றவரை அள்ளி ஊத்தச் சொன்னனர். குளித்தபின் திருநீறு பருப்புடன் சாப்பாடும் இட்டனர்.
(19) குழந்தையை எண்ணெய் வைத்து வெய்யிலில் கிடத்தினர்
(20) மல்லித்தண்ணி , தூதுவளை குடிநீர் , இஞ்சி தேநீர் , மிளகுடன் பால் என்றும் துளசி , கர்ப்பூரவள்ளி என்றும் குடித்தனர்.
(21) ஆண்கள் மீசை வளர்த்தனர் , சுவாசத்திற்கு பாதுகாப்பானது.
(22) புற்பாயில் படுத்தெழும்பினர் ,
23) வேப்பங்குச்சியில் பல்துலக்கினர்
(23) காலைக்கடனை குந்தியிருந்தனர்
(24) சுவாச பயிற்சியென திருமந்திரம் வழி நின்றனர்
(25) மூச்சுவிடாமல் திருமுறை ஓதினர்
(26) ஓம் நமசிவாயவென ஐந்தெழுத்தை ஓதினர்
(27) விபூதி தரித்தே உறக்கத்திற்கு போயினர்
(28) குழல்கொண்டு அடுப்பு ஊதினர்
(29) முற்றத்தில் துளசி , பக்கத்தில் கர்ப்பூரவள்ளி , முன்னாலை வேம்பு , கதவுநிலைகள் வேம்பு , கட்டில் வேம்பு சட்டங்கள் வேம்பு என்று தெரிந்தே வைத்தனர்.
(30) மக்கள் கூடுமிடங்களில் வாழை தோரணம் கட்டினர்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சைவத்தமிழன், ஆதித்தமிழன் பண்பாடுகளை அறிய முன்வாருங்கள்.
மூடநம்பிக்கை என்று சொல்லவதற்கு உங்களுக்கு அறிவு உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் தேடுங்கள்.
மேற்குலகத்திற்கு தெரியும்.
வெளியில் காட்டிட வெட்கம் மற்றும் அதனை மருந்தாக்கி விற்க வழிதேடுவார்கள்.
ஆகவே நாங்கள் தான் விழித்தெழவேண்டும்.உலகின் பண்பாடு கொண்ட முதல்குடி ஆதி தமிழர் என்பதை உலகறிய செய்வோம்.

தமிழிச்சியின் தமிழ்தேசிய வரவேற்பு.

 மங்களம் நிறைந்த தமிழிச்சி என்று அடையாளப்படுத்தும் சுத்தமான தமிழ் பெயருடன் தமிழ்தேசிய புடவை கட்டி, நெற்றியில் திருநீறும், குங்குமமும், தலை நிறைய பூவோடும் வந்து இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கும் கலாச்சார பண்பாடு தமிழர்களின் தமிழ்தேசிய பண்பாடு ஆகும். நெற்றியில் திருநீறு அற்ற பண்பாடு தமிழின அழிப்பு பண்பாடு. 

சைவ ஆலயங்கள் உடைக்கப்படுவது ஏன்?

 


பன்னெடுங்கால  இலங்கை வரலாற்றை புரட்டி பார்த்தால் சைவ ஆலயங்களே இலங்கை சிவபூமி என்பதனையும் தமிழர்களின்  பூா்வீகம் என்பதனையும்  பறைசாற்றும்.

இலங்கை சிவபூமி என்ற  வரலாற்றை அழித்து தமிழர்களின் பூர்வீக பூமி என்ற வரலாற்று ஆதாரங்களை அழித்து இலங்கையை கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ தேசமாகவும் , முகமதியர் முகமது தேசமாக மாற்றுவதற்குமாகே இன்று இலங்கையில் சைவ ஆலயங்களை  உடைக்கின்றனர்.

இலங்கையை சிங்கள பெளத்த தேசமாக மாற்றுவதற்காக சிங்கள மக்கள் தமிழ் பெளத்த அடையாளங்களை சிங்கள பெளத்த அடையாளங்களாக மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.