Sunday, 31 January 2021

தைப்பொங்கல் திருநாள் சிவனின் பஞ்ச பூத வழிபாடாகும் .

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள்  சிவனுடன் தொடர்புடையது. ஆகவே சிவனுடன் தொடர்புடைய பஞ்ச பூத வழிபாடான தைப்பொங்கல் திருநாள் வழிபாடு சிவ வழிபாடு ஆகும்.  அதுவே இயற்கை வழிபாடு.

 நிலம்,நீர்,நெருப்பு,காற்று, ஆகாயம் ஆகியவை பஞ்சபூதங்கள் ஆகும். இதில் நிலம்,நீர்,நெருப்பு,காற்று பூதங்கள் இந்த பூமியை ஆட்சி செய்கிறது. ஆகாய பூதம் நட்சத்திரங்களை ஆட்சி செய்கிறது.

வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவை ஐம்பூதங்களளின் கூட்டுப் பொருட்களின் பகுதிகள் பஞ்சீகரணத்தினால், இப்பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள் தோன்றின. ஜீவராசிகளின் வாழ்விற்கும் அடித்தளமாகவும் உயிா்ரோட்டமாகவும் விளங்குவது பஞ்சபூதங்களாகும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களால் ஆனாது. உடலில் உள்ள ௧௨ உறுப்புகளை இயக்குகின்றன. அதுபோன்று நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள் உடலில் உள்ள    12 உறுப்புகளை இயக்குகின்றன.

ஜீவராசிகளின் உடலையும் உயிரையும் இயக்குவதும் பஞ்சபூதங்களாகும். ஆகவே அகத்திலும் புறத்திலும் தொழில்படுவது பஞ்சபூதங்களாகும். இன்று நவீன உலகில் விஞ்ஞானமும் இதனைத்தான் உறுதிசெய்கின்றது.

மண் சம்பந்தப்பட்ட உணவில் சர்க்கரை, புரோட்டின், விற்றமின் போன்ற பல பொருட்கள் உள்ளன இவைகள் அனைத்தும் உயிா் இனங்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமானதே. வானம், காற்று, நெருப்பு, நீர் போன்றவற்றுடன் தமிழர்களின் தெய்வமான  சூரியன் போன்ற அனைத்தும் உயிா் இனங்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமானதே. 

உயிா் இனங்களின் வாழ்வுக்கு உயர் கொடுக்கும் சிவனின் அம்சமான வானம், காற்று, நெருப்பு, நீர்,   நிலம் சூரிய குடும்பத்தை சேர்ந்த நவகிரகங்களுக்கும் வழிபாடு செய்வது தமிழ்களின் கலாச்சார பண்பாடு ஆகும். 

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் பொங்கி பொங்கல்  பொங்கி மணித வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட பஞ்சபூதங்களுக்கு நன்றி செலுத்துகின்ற வழிபாட்டுடன் சிவனின் அம்சமான சூரியனுக்கும் தமிழர்கள் தெய்வமாக போற்றுகின்ற மாட்டுக்கும்  நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் விழாவாகும். 

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி                                                        பகவன் முதற்றே உலகு".

குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர் ஆதி  எனக் குறிப்பிடுகிறார்.ஆகவே ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது. பண்ணிரு திருமுறைகள் இறைவனை  ஆதிபரன் , ஆதி பராபரம் , ஆதிப்பிரான், ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.

பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்.

“ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே”

 “ஆதி பராபர மாகும் பராபரை
  
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்                                                   ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி                                 நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.”

“ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று-எனார்
பேதிது உலகம் பிணங்குகின் றார்களே.”

“பந்து சேர்விர லாள்பவ ளத்துவர்
வாயி னாள்பனி மாமதி போன்முகத்
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந்
நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.”

தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் கடவுள் வாழ்த்துப் பாடல்:
“ மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு

தமிழையும் தமிழுக்குரிய கொடியான இடப கொடியையும் அருளிய தமிழ் தலைவன் சிவனின் வழிபாடு தைப்பொங்கல் வழிபாடு ஆகும்.





No comments:

Post a Comment