தயாரிப்பு வெற்றி செல்வன் (Vetri Chelvan)
அழகிய சுழிபுரம் கிராமத்தில் தம்பிபிள்ளை ஒர் விவசாயி அதேவேளை நாசகம் தம்பிப்பிள்ளையால் உற்பத்தி செய்த பொருட்களை பண்டத்தரிப்பு சங்தையில் விற்பைன செய்வது வழக்கம். மேலும் இல்லறத்தின் பயனாக 3 ஆண் குழந்தைகளையும் 5 பெண்குழந்தைகளையும் பெற்றுக் கொள்கின்றார்கள் தம்பிப்பிள்ளை நாகசம் தம்பதியினர் இத் தம்பதிகளின் எழாவது ஆண் குழந்தையாக 30 /08/ 1951 ம் திகதி சுழிபுரத்தில் பிறந்தா ர் தப்பிப்பிள்ளை சந்ததியார்.
சந்ததியார் தனது உயர்தரம் வரை சுழிபுரம் மெய்கண்டான் வித்தியசாலையில் பயின்றார்.பின்னாளில் ௧௯௭௧ ல் கொண்டுவரப்பட்ட கல்வி தரப்படுத்தலுக்கு எதிரான மாணவர் பேரவையின் இணைந்து எதற்கு எதிரான பல போரட்டங்களையும் முன்னெடுத்தார் பின்னாளில் இளைஞர் பேரவையிலும் செயற்பட தொடங்கினாா்.
வலதுசாரியான அமிர்தலிங்கத்தின் சுயநல அரசியலுக்காக தனது அரசியலுக்கு எதிரான அல்பிரட் துரையப்பாவை துரோகி என அறிவித்து கொலை செய்யுமாறு இளைஞர்களை தூண்டிவிடுகின்றார் அமிர்தலிங்கம். அல்பிரட் துரையப்பா கொலைக்கான தயார்படுதலுக்காக தனது தாயாரின் சங்கிலியை வழங்குகிறார் சந்ததியார். 27/07/1975ம் திகதி அல்பிரட் துரையப்பா பொன்னாலையில் வைத்து பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.
மேலும் துரையப்பா கொலையை விசாரிக்க பஸ்ரியம்பிள்ளை என்ற பொலிஸ் அதிகாரியை நியமித்து கூடுதல் அதிகாரமும் வழங்கியது அன்றைய சிறிமா அரசு.
பஸ்ரியம்பிள்ளை துரையப்பா கொலையில் சந்ததியாருக்கு தொடர்பிருப்பதை அறிந்து சந்ததியாரை கைது செய்ய முயற்சி செய்ய சந்ததியார் தலைமறைவாகிறார். இதைவேளை சந்ததியாரை தேடிவரும் பொலிஸ் பலமுறை சந்ததியாரின் அக்கா புனிதவதியின் மகளான அன்னம்மாவை கைது செய்து கூட்டிக்கொண்டு போய் விசாரிப்பார்கள் இருப்பினும் சந்ததியார் சரணடையவில்லை வேறொரு இடத்தில் கைது செய்யப்பட்டார் மேலும் சந்ததியார் மற்றும் நவாலி இன்பம் உட்பட ஆறு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய சிறிமா அரசு.
சிறையில் அரசியல் பேசுபவர்களில் முக்கியமானவராக சந்ததியார் இருந்தார். இடதுசாரி அரசியல் வழியில் சிந்திக்க இங்குதான் இவர் பயிற்றப்பட்டார். சிறையில் உள்ள இளைஞர்கட்கு வெளியில் இருந்து உறவுகள், தாய், தந்தையர்கள், நண்பர்கள் உணவு அனுப்பும்போது அதை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை அவர் ஏற்பார். சோற்றுப்பார்சல்கள் வரும்போது அதனை ஒன்றாய் கலந்து குழைத்துக் கொடுப்பார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குழைத்துக் கொடுத்தால் " இப்ப எனக்கு பசியில்லை" என்று சாப்பிடாமல் தவிர்க்கும் தமிழீழ இளைஞர்களும் சிறையில் இருந்தனர். ஒருமுறை சந்ததியாரின் சுழிபுரத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுக்குரிய மதுரநாயகம் என்பவர் சோறு குழைத்துக் கொடுத்த போது " பசியில்லை என்று" சாப்பிடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. இதையடுத்து சந்ததியார் எப்போதும் சாப்பாடு வெளியே இருந்து வந்தாலும் அதைக் குழைத்துக் கொடுக்கும் பொறுப்பை மதுரநாயகத்திடமே கொடுத்தார். சிறைக்குள் தமக்கு அனுப்பப்படும் முட்டைமா, அரசிமா, பலகாரங்கள் என்பவற்றை பல இளைஞர்கள ஒழித்து வைப்பார்கள் அல்லது கொஞ்சத்தை மற்றவர்கட்கு காட்டிவிட்டு மிகுதியை பதுக்கி விடுவார்கள். இரவுசாமங்களில் அல்லது ஒழித்து தனியே சாப்பிடுவார்கள். இப்படியான சூழ்நிலையில் தான் சந்ததியாரின் அரசியல் வளர்ந்தது. கூட்டு வாழ்விற்கும், தோழமைக்கும் அவர் பயிற்றப்பட்டார்.
சிறையில் இருந்த போது JVP யினருடன் தொடர்பு கொண்டிருந்த சொற்பமான தமிழ் இளைஞர்களில் சந்தியாரும் ஒருவராவர். தமிழ் தேசியவாதியாக, அமிர்தலிங்கம் அனுதாபியாக சிறைக்கு சென்ற அவர் இடதுசாரிப்போக்கில் சிந்திப்பவராக சிறையை விட்டு வெளியே வந்தார். சிறையில் JVP யின் சுனந்ததேசப்பிரிய உட்பட பலருடன் அவருக்கு அரசியல் தொடர்பு இருந்தது. PLOTE இன் பெரும்பாலான சிங்கள இடதுசாரிகளுடனான தொடர்புகளுக்கு சந்ததியார் காரணமாக இருந்தவர் என்பதில் சந்தேகமில்லை.பின்னாளில் JVP யில் இருந்து பலர் PLOTE அமைப்பில் இணைய காரணமாக இருந்தவர் சந்ததியாரே.
சிறையில் இருந்து வெளிவந்த சந்ததியார் டேவிட் ஐயா என அழைக்கப்படும் சொலமன் அருளானந்தம் டேவிட் என்ற ஒரு கட்டடக் கலைஞருடனும் இலங்கையில்மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து 1977 ஆம் ஆண்டில் காந்தியம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர். சந்தததியார் வவுனியாவில் 12 நவீன பண்ணைகள், நடமாடும் வைத்தியசாலைகள், பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள், சிறுவர்களிற்கான பால், திரிபோசா மா விநியோகம், சிறுவர்களுக்கு பாடஞ்சொல்ல ஆசிரியர்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.அதேவேளை போரட்டம் தொடர்பான இரகசிய வகுப்புகளின் ஊடாக மாணவர்களுக்கு போதிக்கிறார்.
மலையகத்திலிருந்த சில தொண்டர் நிறுவனங்களுடாக மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றுவதற்கு இவரது காந்தியம் அமைப்பு முன்னின்று உழைத்தது. ஏறத்தாழ 5000 மலையக மக்கள் வவுனியா, திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர்.இன்று வன்னியில் தமிழர் சனத்தொகை பரம்பலை அதிகரித்த பெருமையும் தமிழரின் பூர்விகமான வாழ்விடங்களையும் பாதுகாக்த பெருமையும் சந்ததியார், Doctor இராஜசுந்தரம் ஆகியோரை சேரும்.
இதேவேளை காந்தீயத்துடன் இயங்கிய வேளை புதிய விடுதலை புலிகள் அமைப்புடன் இயங்கி கொண்டிருந்தார் சந்ததியார் இக்காலத்தில் ஊர்மிளா உமா விவகாரம் உச்சமடைந்த காலம்
இதே வேளை பிரபாகரனுடன் இந்தியாவிற்கு படகில் வந்தார் சந்ததியார்.மத்திய குழுவில் உமாவை கொலை செய்வது என்று முடிவு எடுக்கப்படுகின்றது.இதைவேளை உமா இந்தியா செல்லவில்லை.இதானல் உமா தப்பித்துக் கொள்கின்றார்.
இதே வேளை உமாவின் விசுவாசி சந்ததியார் என்பதனால் புலிகளால் ஏறக்குறைய வீட்டுக்காவலிலேயே சந்ததியார் வைக்கப்பட்டிருந்தார். அவர் போகின்ற இடங்களுக்கெல்லாம் ஒரு உளவாளி அனுப்பபப்ட்டார்.ஐயர் சென்னைக்கு வந்ததும் சந்ததியார் ஐயரைஅழைத்து மொட்டைமாடியில் பேசினார். உங்களது இயக்கம் தவறான பாதையில் செல்கிறது. எந்த ஜனநாயகமுமில்லை. எதையும் பேசமுடியாது. யாரும் கருத்துக்கூற முடியாது என்று கூறுகிறார்.
இப்போது உமாமகேஸ்வரனைத் தொடர்புகொள்ள முடியாத வகையில் சந்ததியார் தடுக்கப்பட்டிருந்தார். அவர் பின்னால் சந்ததியாருக்கு தெரிந்தவாறே ஒரு உளவாளி அனுப்பப்பட்டார். சந்ததியார் வீட்டிலிருந்து எங்கு சென்றாலும் பின் தொடர ஒரு நாளைக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்பட்டனர்.
உமாகமகேஸ்வரன் தப்பித்துகொண்ட பின்னர் சந்ததியாரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை மத்திய குழுவைக் கூடி பிரபாகரன் முன்வைக்கிறார். சந்ததியார் உமாமகேஸ்வரனின் கையாள் எதிர்காலத்தில் ஆபத்தாக அமையக் கூடியவர் அவரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். நாகராஜா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். முதல் தடவையாக ஐயரும் பிரபாகரனைப் பலமாக எதிர்க்கிறேன். சந்ததியார் கொலைசெய்யப்படக் கூடாது என்பதில் ஐயர் உறுதியாக இருக்கிறேன். பிரபாகரன் இதை எதிர்பார்க்கவில்லை. ஐயரை நோக்கிக் கூறுகிறார் ‘இனிமேல் நீங்களும் சந்ததியாரும் பட்டபாடு’ என்று விரக்தி தொனிக்கக் கூறுகிறார். மத்திய குழுக் கூட்டத்தின் போது பேபி சுப்பிரமணியம், பிரபாகரன், நாகராஜா, ஐயர் ஆகியோரே விவாதிக்கின்றனர். பேபி சுப்பிரமணியம் பிரபாகரனுக்கு எதிராகப் பேசவில்லை.
இறுதியாக சந்ததியாரை இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து இலங்கையில் கொண்டு சென்று விடுவோம் என்ற கருத்தைப் பிரபாகரன் முன்வைக்க மத்தியகுழு ஒரு மனதாக ஏற்றுக்கொள்கிறது. ஐயர் சந்ததியாருக்கு ஆதரவாகப் பேசியமையால் சந்ததியாரை எச்சரிக்கும் பொறுப்பு ஐயரிடம் வழங்பப்படுகிறது. ஐயர் சந்ததியாரிடம் போய் தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழுவின் முடிவுகளை முன்வைக்கிறார். தான் போகும் வழியில் தன்னைக் கடலுக்குள் தள்ளிக் கொலைசெய்து விடுவோமோ என்ற பயம் கூட சந்ததியாரிடம் இருந்தது.
மக்களின் விடுதலைக்காக என்று மட்டுமே சுய நலமின்றி புதிய புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட முன்வந்த சந்ததியார் என்ற போராளி கொலைக்கரங்களிலிருந்து விடுதலை பெற்று இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பியோடும் படகில் மாதகலை வந்தடைகின்றார்.
இதே வேளை 1979 ம் ஆண்டு November மாதம் புளொட் அமைப்பானது புதிய பாதை சுந்தரம் மற்றும் உமாமகேஸ்வரன் காக்கா, காத்தான் ,கண்ணன் போன்ற புதிய புலிகளில் செயர்ப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்படுகின்றது.
புளொட் அமைப்பில் சந்ததியாரும் இணைந்து கொள்கின்றார் அதேவேளை மத்திய குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்படுகின்றார்.இதேவேளை வவுனியாவில் உள்ள கலைவாணி மற்றும் கலைலட்சமி ஸ்ரோஸ் ஆகியவை சுழிபுரத்தை சேர்ந்த இரத்தினம் மற்றும் துரை என்னும் இரண்டு சகோதரர்களுக்கு சொந்தமானது .குறித்த சகோதரர்களின் கடையில் வேலை சேருகின்றார் சங்கிலி என்றழைக்கப்படும் கந்தசாமி அன்று 17 வயது நிரம்பிய குறித்த இளைஞரை புளொட் அமைப்பில் இணைக்கிறார் சந்ததியார்.
மேலும் வவுனியாவில் காந்தீயத்தின் தலமை செயலகத்திற்கு முன்னால் இருந்த இறைச்சி கடையில் இறைச்சி வாங்க வந்த விமானப்படையினார் மீது மட்டக்களப்பை சேர்ந்த சின்னமுரளி யக்கடையா என்றழைக்கப்படும் இராமசாமி நெடுந்தீவு அற்புதம் ஆகியோர் தாக்குதல் நடத்துகிறார்கள்.
மேலும் அமிர்தலிங்கத்தை தனது புதிய பாதை பத்திரிகைகளில் விமர்சித்த புளொட் போராளி சுந்தரமும் யாழ்ப்பாணத்தில் சித்ரா அச்சகத்தில் வைத்து 02.01.1982 அன்று புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.சுந்தரம் சந்ததியாரின் ஊரைச் சேர்ந்தவர் என்பதோடு சந்ததியாரும் சுந்தரமும் 80 களின் ஆரம்பத்தில் சிங்களத்தில் இருந்த மாக்கிய நூல்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்காக தம்பையா என்னும் ஆசியரிடம் ஒன்றாக சிங்களம் கற்றவர்கள் என்பதோடு காந்தியத்தில் ஒன்றாக செயற்பட்டவர்கள்.
சுந்தரம் கொலையில் தொடர்படையவர்களாக கருதப்பட்ட 1982ம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த முக்கியஸ்தர்களான அளவெட்டியை சேர்ந்த இறைகுமாரன், உமைகுமாரன் ஆகியோரை விசாரிக்க வேண்டி இருந்ததால் புளொட் முன்னைநாள் கம்யூனிஸ் கட்சியில் இருந்தவரும் பின்னர் செந்தமிழர் இயக்கம் என்ற கட்சியை ஆரம்பித்தவரும் காலப்போக்கில் புளொட் அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டு வந்த வி.பொன்னம்பலத்தின் மகனான மகாவலி ராஜன் இவர் புளொட் இயக்கத்தின் தள நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்தார். மகாவலி ராஐன் இறைகுமாரன் உமைகுமாரனை ஒரு வீட்டில் கள்வன் இருப்பதாகவும் அவனை பிடிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறி பினாக்காய் வயல் வெளிக்கு அழைத்து வருகிறார்.அங்கு புளொட் இயக்கத்தை சேர்ந்த பாலமோட்டை சிவம் என்னும் பெரிய மென்டிஸ்,கந்தசாமி என்றழைக்கப்படும்சங்கிலி ,நெடுந்தீவு அற்புதம் ஆகியோர் காத்திருந்தனர்.மேலும் இந்த இடத்தில் வவுனியாவை சேர்ந்த பெரிய செந்திலும் இருத்தாக கூறப்படுகின்றது. அங்கு உமை குமாரன் இறைகுமாரன் வந்ததும் விசாரணைக்கு முன்னதாக இருவரையும் சுட்டுவிடுகின்றார் சங்கிலி என்ற கந்தசாமி.
புளொட் தலைவர் உமாமகேஸ்வரன்,கண்ணன் மற்றும் சிவனேஸ்வரன் ஆகியோர் சிறையில் இருந்த பொழுது சந்ததியார் மாறன் மற்றும் வெற்றி செல்வன் ஆகியோர் பார்ப்பதற்கு செல்லும் பொழுதுஅங்கு சந்ததியாருக்கும் உமாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நீங்கள் இறைகுமாரன் உமைகுமாரன் சுட கட்டளை இட்டதனால் எமக்கு அரசியல் ரீதியாகவும், வவுனியாவில் விமானப்படை வீரர்களை வவுனியாவில் காந்தியத்திற்கு முன்னால் வைத்து சுட்டதால் ராணுவ ரீதியாகவும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டீர்கள் என்று சந்ததியாரை பார்த்து கூறுகிறார் உமா. இங்கு தான் உமா சந்ததியார் விரிசல் ஆரம்பிக்கின்றது.
இதே காலப்பகுதியில் சந்ததியார் புளொட்டின் ரகசிய அலுவலகத்துக்கு செல்கிறார் அங்கு.மாதவன்,மற்றும் வெற்றி செல்வனிடம் அவர்கள் செய்யும் வேலைகள் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்து சில ஆலோசனைகள் கூறினார்.
இதேவேளை மாறன் கந்தசாமி பெரிய செந்தில் போன்றவர்கள் வேறு ரகசிய வேலைகளை செய்வதால் அவர்களை வழி நடத்த முடியவில்லை என வெற்றி செல்வன் மற்றும் , மாதவனிடம் இவர்கள் செய்யும் வேலைகளைப் பற்றி தெரியுமா என்று கேட்கிறார் அவர்கள் தெரிந்தாலும் சொல்லுவதில்லை தெரியாது என்று கூறி விடுவார்கள் இந்த விடயம் கூட உமா சந்ததியார் முரண்பாட்டிற்கு காரணமாக இருந்தது.இதனால் வெற்றி செல்வனும் மாதவனுக்கும் புது அனுபவம் ஒன்றை கொடுத்தார் சந்தாதியார்.
சாப்பாட்டுக்கு காசு மாதம் 300 ரூபாய் தான். ஒரு நாளைக்கு பத்து ரூபாய் அதற்கு மேற்குறித்த இருவரும் கணக்கு கொடுக்க வேண்டும் எபகாலை மாலை இரவு என முன்று வேளைக்கும் உணவு விலை விபரங்களுடன் முப்பது நாள் கணக்கு கொடுக்க வேண்டும் இருவரும் அந்த 300 ரூபாயில் மிச்சம் பிடித்து இருந்தால் அவர்களை பாராட்டுவதோடு அடுத்த மாத கடைசியில் மிச்சம் பிடித்த காசை குறைத்துவிடுவர். சில நேரங்களில் வெற்றி செல்வன் மற்றும் மாதவன் ஆகிய இருவரும் சமையல் செய்து சாப்பிடுவார்கள். பருப்பும் சோறும் தான் அவர்களின் சமையல் சிலவேளைகளில் சந்ததியார் வந்து சாப்பிட்டுவிட்டு இவர்களை பாராட்டி விட்டு செல்வார் .சந்ததியாருக்கு பருப்பு பிடிக்கும் என நினைக்கிறேன்.
சந்ததியார் உமாவும் முரண்பட்ட காரணங்களில் இதுவும் ஒன்று Charley கந்தப்பா என்ற தமிழ் தெரியாத தமிழனை இயக்கத்தில் இணைத்து அவருக்கு சில முக்கிய பொறுப்புகளை கொடுத்தார் இது சந்ததியாருக்கு பிடிக்கவில்லை. உமா அத்துலக் முதலியுடன் இரகசிய தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்த கந்தப்பா தான் காரணம் இவர் அத்துலத் முதலியுடன் நெருங்கிய உறவில் இருந்தவர் .இந்த விடயம் என்னால் வெற்றி செல்வன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் திவாகரன் இவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் 1983 ஜுலைக் கலவரத்தின் பொழுது இலங்கை வானொலியில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது சென்னை வந்தார் இவ்வேளையில் எம்எல்ஏ ஹாஸ்டலில் சுற்றித் திரிந்தார் பொழுது வெற்றி செல்வனும் மாதவனும் திவாகரன் பற்றி விசாரித்து புளொட் அமைம்பில் உள்வாங்க முற்பட்டவேளை சந்ததியார் புதியவர்களை உள்வாங்க வேண்டாம் கடுமையாகக் கூறினார்.பின்னாளில் இந்த திவாகரனே பல புளொட் உறுப்பினர்களுக்கு எதிராக பல போட்டு கொடுப்புகளை செய்த செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் உமா மகேஸ்வரன் திவாகரனை பிரச்சாரம் போன்ற வெளி வேலைகளுக்கு பாவிக்குமாறு வெற்றி செல்வன் மற்றும் மாதவன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார் பின்பு புளொட் அமைப்பு வானொலி ஆரம்பித்தபோது அதற்குப் பொறுப்பாக திவாகரனை நியமித்தார் உமா ஆனால் சந்ததியார் இதனை மிகக் கடுமையாக சந்ததியார் எதிர்தார் இதானல் உமா சந்ததியார் விரிசல் மேலும் அதிகரிக்க வாய்பாக அமைந்தது.
கிளிநொச்சி வங்கி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை சந்தியாருக்கு மிக நெருங்கிய தோழியான சரோஜினி வீட்டில் மறைத்து வைத்ததாகவும், அதில் பெரும்பான்மை நகைகள் களவு போய் விட்டதாகவும் அந்த அந்த நகைகளை சரோஜினியின் அக்கா கணவரும் சகோதரர்களும் எடுத்தது தெரிந்தும் சரோஜினி கலவரத்தின் பின் இந்தியா சென்ற பின்பு அவரின் அக்கா கணவரை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை 84 ஆம் ஆண்டு சரோஜினியின் சகோதரர்களையும் பிடித்து வந்து சென்னையில் விசாரித்ததாகவும் சென்னையில் ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது.இந்த விடயம் சந்ததியாருக்கு மனக்கசப்பு ஏற்படுத்தியது. இது உமா சந்ததியார் பிரிவில் முக்கியமான விடயம் ஆகும்.
அண்ணா நகரில் வீடு எடுத்து சந்ததியாரும் சரோஜினியும் தங்கியிருந்தார்கள். சரோஜினி இயக்கத்தின் மேல் கடும் கோபத்தில் இருந்ததாகவும் உசுப்பேத்தி சந்ததியாரை இயக்கத்துக்கு எதிராக செயல்பட வைத்து இயக்கத்தை கைப்பற்ற யோசனையில் கூறியிருந்ததாகவும் இதில்தான் சந்ததியார் தடுமாறிவிட்டதாகவும் சந்தேகப்பட்டார் உமா.
மேலும் சந்ததியார் சறோயினி இந்தியா வரும் வரை சந்ததியார் இயக்கத்தில் நல்ல முறையில் இருந்ததாகவும் சரோஜினியின் பேச்சைக் கேட்டு இயக்கத்தை உடைக்கப் முற்பட்டது தவறு எனவும் எண்ணியிருக்கிறார் உமா .
மேலும் சரோஜினியின் வீட்டுக்கு சாப்பிட வரும் டேவிட்ஐவையும் பலகதைகள் சொல்லி சந்ததியாருக்கு ஆதரவாக திருப்பி டேவிட் ஐயாவை இயக்கத்துக்கு எதிராக மாற்றிவிட்டதாக கருதினார் உமா மேற்குறித்த விடயம் தொடர்பாக சந்ததியார் கொலை செய்யப்பட்ட பின்னாளில் புளொடின் படைதுறை தலைவர் சோதிஸ்வரன் என்ற கண்ணணும் அரசியல் துறை பொறுப்பாளர் வாசுதேவாவும் வெற்றி செல்வனிடம் வெற்றி செல்வன் புளொட்டில் முக்கிய பொறுப்பில் இருந்த காரணத்தால் தெரிவித்தவையாகும்.
இதேவேளை சந்ததியாரல் “வங்கம் தந்த பாடம்”என்றொரு புத்தகமும் வெளியிடப்பட்டது.இப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்கபட்டபுத்தகம். இந்திய இராணுவம் பங்களாதேஷில் நடந்துகொண்ட முறைகளைப் பற்றி அதில் விபரிக்கப்பட்டிருந்தது.பெண்களை பலாத்காரப்படுத்தியமை, பங்களாதேசில் இருந்து முற்போக்கு சக்திகளை கொன்று குவித்தமை போன்ற சம்பவங்களை அவற்றில’ முக்கியமாக குறிப்பிட்டிருந்தன. இந்திய இராணுவம் தொடர்பாக கடும் விமர்சனத்தை முன்வைத்த ஒரேயொரு ஈழப்போராளி சந்ததியாரே .ஆனால் சந்ததியார் புத்தகத்தை வெளியிடும் பொழுது அறியவில்லை இப்புத்தகம் தன்னுடைய கொலையுடன் தொடர்புபடும் என்பதே.
உமாவின் திருமணத்திற்காக பேபி பராராஜசேகரன் என்பவர் வருகின்றார். இவர் பல போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்.இவர் ஆரம்பத்தில் காந்தீயத்தில் வேலை செய்தவர் .பேபி காந்தீயத்தில் வேலை செய்தகாலத்தில் ஒருமுறை சந்ததியாரை கருத்து முரண்பாடு காரணமாக தாக்கியும் இருக்கிறார். இதன் பொழுது சந்ததியாரின் கண்ணாடியும் உடைந்தமை குறிப்பிடத்தக்கது பேபி 1982ல் உமாவினால் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர். பேபிபராராஜசேகரன் இந்தியா வருவதையும் போதை மருத்து வர்த்தகத்தில் ஈடுபடும் பேபி பராராஜசேகரனுடன் புளொட் அமைப்பு தொடர்புகளை ஏற்படுத்துவதை சந்ததியார் விரும்பவில்லை.
அத்தோடு போதை பொருள் வர்த்தகத்தில் கிடைக்கும் பணத்தை பேபி பராராஜசேகரனிடம் இருந்து உமா பணம் பெறுவதையும் சந்ததியார் விரும்பவில்லை இதனால் சந்ததியார் உமா விரிசல் மேலும் அதிகரிக்கின்றது.
சந்ததியாரை பலரும் காந்தீயவாதி என்று கூறுகிறார்கள் இருப்பினும் காந்திய வழியில் சாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடிறேற்றியமை போன்ற செயற்பாடுகளில் சந்ததியார் ஈடுபட்டாலும் காந்தியின் அகிம்சை வழியை கடைப்பிடிக்க தவறிவிட்டார்.சந்ததியார்.சுபாஸ்சந்திரபோஸ் வன்முறை மூலம் இந்தியாவிற்கு சுகந்திரத்தை பெற்றுக்கொடுக்க முயன்றபோது அதனை முற்றாக எதிர்தவர் அகிம்சா மூர்த்தி காந்தியடிகள் ஆனால் சந்ததியார் தனக்கு தேவைப்படும் போதெல்லாம் வன்முறையை கையில் எடுத்தவர் சந்ததியார் என்பதே நிதர்சனமான உண்மை.அதற்கான இரண்டு சம்பவங்கள் குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.
மாதவன் என்பவர் வவுனியாவை சேர்தவர் இவர் புளொட் அமைப்பின் முக்கிய செயற்பாட்டளரும் கிளிநொச்சி வங்கி கொள்ளையில் ஈடுபட்ட காத்தான் என்றழைக்கப்படும் கிருஷ்ணசாமி கிருஸ்ணகுமாரின் நண்பர் .காத்தான் வவுனியாவில் விமானப்படையினருடனான மோதலில் இறப்பதற்கு முன்பு பொதி ஒன்றினை மாதவனிடம் கொடுத்து வைத்திருந்தார் காத்தான் இறந்த பின்பு மாதவனிடம் காத்தான் வழங்கிய பொதி ஒன்று இருப்பதை அறிந்த சந்ததியார் கந்தசாமியுடன் மாதவனின் வீட்டிற்கு சென்று மாதவனின் சிறு குழந்தை மற்றும் மனைவியை துன்புறுத்தியதோடு கந்தசாமி மாதவனின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்ததோடு பத்து நாட்களில் பொதியை ஒப்படைக்காவிடில் சுட்டுவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
சந்ததியாரும் கந்தசாமியும். ஆனால் மாதவன் காத்தனுக்கு கொடுத்த வாக்கை காப்பற்ற இந்தியா சென்ற மாதவன் சிறையில் இருந்த உமாவை சந்தித்து அனைத்தையும் கூறுகிறார் மாதவன்.சந்ததியாரிடம் ஒப்படைக்க வேண்டாம் தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார் உமா.சிறையில் இருந்து மீண்டும் உமாவிடம் குறித்த பொதியை ஒப்படைத்ததோடு புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறார் மாதவன்.
பின்னாளில் கந்தசாமி மாதவனிடம் தான் தவறாக நடந்தது கொண்டமைக்கு மன்னிப்பு கேட்டதோடு மாதவன் குடும்பத்தில் உரிமையுடன் பழக கூடியவராகவும் மாறி விட்டார். மேற்குறித்த விடயத்தை கந்தசாமி வெற்றி செல்வனிடம் கூறி வருத்தப்பட்டார் கந்தசாமி.
இதனை வெற்றி செல்வன் மாதவனிடம் கேட்க அதனை ஒப்புக் கொண்டுள்ளார் மாதவன். ஒருமுறை தஞ்சாவூரின் ஒரத்தநாடு என்னும் இடத்தில் அமைந்துள்ள மொக்கு மூர்த்தியின் சித்திரவதை கூடத்திற்கு சென்ற சந்ததியார் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்ட சில புளொட் உறுப்பினர்களை தாக்கியும் இருக்கிறார். இச்சம்பவத்தை கந்தசாமி வெற்றி செல்வனிடம் மணியத்தார் ஒரத்தநாட்டில் பெடியளை எலலாம் அடிக்கிறார் எனக் கூறி சிரித்துள்ளார்.இங்கு மணியத்தார் என்பது சந்ததியாரை புளொட் உறுப்பினர்கள் தங்களுக்குள் குறிப்பிடும் ஒரு குழுவுக்குறி.
இதேவேளை கிளிநொச்சி வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்டு உமாவிடம் இருந்த நகைகளை விற்பனை செய்ய பெசன்ட் நகரில் வசித்த ஒரு இலங்கை தமிழரிடம் கொடுத்திருந்தார் உமா.குறித்த இலங்கை தமிழர் நகையை விற்பனை செய்ததோடு குறித்த ஒரு தொகையை எடுத்து விட்டார் இதனை விசாரிக்க சென்ற உமா குறித்த இலங்கை தமிழனின மனைவியிடம் ஒரு விடுதலை இயக்கத் தலைவர் செய்யக்கூடாத தனிமனித ஒழுக்கத்திற்கு எதிரான விதமாக நடந்து கொள்கிறார் .இது மிகவும் அருவருக்கத்தக்க விடயம்.இந்த விடயத்தை கண்ணுற்ற ஈழப்போரட்டத்தில் முன்னேடிகளில் ஒருவரும் புளொட் அமைப்பில் முக்கியமானவருமாகிய காக்கா என்று அழைக்கப்பட்ட உடுவிலை சேர்ந்த சிவனேஸ்வரனுக்கும் உமாமகேஸ்வரனும் முரண்பாடாக மாறி இருந்து.இதுவே காக்கா கொலைக்கு காரணமாக அமைந்த மற்றுமொரு விடயம்.
சந்ததியார் சறோயினி குடும்பத்திடம் ஏமாந்தது போல் உமாவும் ஓர் குடும்பத்திடம் ஏமாந்தார்.அனால் அதனை உமா கையாண்ட விதம் வெறுப்புக்குரியது..கிளிநொச்சி வங்கியில் கொள்ளையடித்த நகைகளை சறோயினியின் உறவினர்கள் எடுத்ததாக முன்னைய தொடரில் குறிப்பிட்டு இருந்தேன் அவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதில் சந்ததியார் உறுதியாக இருந்தார்.சந்ததியாருக்கு சறோயினி குடும்பம் செய்த இத்துரோகமே சந்ததியாரின் போரட்ட வாழக்கையில் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியோடு இன்றுவரை சர்ச்சைக்குரிய பேசு பொருளாகவும் மாறியுள்ளது.
மேலும் உமாவின் மேற்குறித்த செயலானது சந்ததியார் மட்டுமல்லாமல் பல புளொட் உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு உமாவினால் சிறந்த போரளியான காக்கா போன்ற போரளிகளை படுகொலை செய்தமையானது இயக்கத்தின் வளர்ச்சி உகந்ததல்ல என உமாவை எதிர்க்க தொடங்குகின்றார்கள் புளொடின் முக்கிய போரளிகள்.
அக்காலப்பகுதியில் சார்லி கந்தப்பா என்பவர் புளொட் அமைப்பில் சேருகிறார் இவர் ஒரு தமிழ் தெரியாத தமிழர்.கந்தப்பா அன்றைய இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் அத்துலத் முதலியின் ரகசிய முகவர் என நம்பப்படுகிறது. இவர் மூலமே உமாமகேஸ்வரன் அத்துலத் முதலி உடனான இரகசிய தொடர்பை தன்னிச்சையாக ஏற்படுத்துகின்றார் உமா இச்சம்பவமானது புளொட்டின் முன்னனி உறுப்பினர்களுக்கும் சந்ததியாருக்கும் விசனத்தை ஏற்படுத்துகின்றது.
மேலும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் வலது சாரி அரசியலை எதிர்வந்தவர்களில் சந்ததியாரும் ஒருவர் அத்தோடு சந்ததியாரின் நண்பனும் புளொட் அமைப்பின் உருவாக்கத்திற்கு உழைத்த சுந்தரம் கொலை செய்யப்பட்டமையை முந்தைய தொடரில் குறிப்பிட்டிருந்தேன் சுந்தரம் கொலையால் பல தோழர்கள் அமிர்தலிங்கம் மீது கோபம் அடைந்திருந்தார்கள். ஆனால் அமிர்தலிஙத்துடன் மீண்டும் உறவை உமா தன்னிச்சையான ஏற்படுத்த முன்னணி தோழர்களும் சந்ததியாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இதேவேளை புளொட் உறுப்பினர்களின் பயிற்சி முகாமுக்கு சென்று அரசியல் வகுப்பு களை எடுக்கும் பொழுது உமாவை பெரியய்யா என அழைக்க கூடாது எனவும் கழகம் தனி ஒருவரை முதன்மை படுத்துவது பிழையானது என நல்ல விடயத்தை போதித்தோடு ,போரளிகளுக்கு அரசியலை முதன்படுத்தி இராணுவ ரீதியிலான செயற்பாட்டை வலுக்குறைக்கும் வகையிலும் போதிக்கிறார்.அன்றைய சூழலில் இராணுவ செயற்பாடுகள் வலுப்படுத்த வேண்டிய விடயமாக இருந்தது சந்ததியார்.இதுவே சந்ததியாருக்கு பெருமளவிலான போரளிகளின் ஆதரவு கிடைக்காமைக்கு காரணமாக அமைந்தது.
இதனால் முகாம் பொறுப்பாளர்கள் சந்ததியார் போரளிகளின் போரட்ட கனவை சிதைப்பதாக கருதி சந்ததியாரை தங்கள் முகாமில் வகுப்புகள் வைப்பதற்கு அனுமதிக்கவில்லை. சந்ததியாரை முகாம் பொறுப்பாளர்கள் இவர்களின் தங்கள் முகாம்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க விடாததால் அனைத்து முகாம் பொறுப்பாளர் சென்னையில் தங்கிய சமயத்தில் சந்ததியாரின் மிக நெருங்கிய சிஷ்யர் தங்கராஜ் என்பவர் தஞ்சாவூரின் ஓரத்தநாட்டில் sick camp என்ற நோயாளிகள் சிகிச்சை பெறும் முகாமை அமைத்து சந்ததியாரின் கொள்கைகளை போதிக்கிறார் பின்னாளில் குறித்த விடயம் அனைத்து முகாம் பொறுப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால் குறித்த முகாம் மூடு விழாக்கண்டது.
இறுதியாக வாசுதேவாவின் முகாமிற்குள் சந்ததியார் செல்ல முற்ப்பட்பவேளை சந்ததியார் வாசுதேவாவால் அனுமதி இன்றி தனது முகாமிற்குள் நுழைய முடியாது எனத் தடைவிதிக்கிறார். அத்தோடு சந்ததியார் புளொட் அமைப்பில் இருந்து ஒதுங்கி கொள்கிறார்.
உமாவின் தவறுகள் மற்றும் கழக சில முக்கிய தோழர்களின் அராஜகங்கள் அதிகரித்ததால் டேவிற் ஐயாவும் புளொட் அமைப்பில் இருந்து ஒதுங்கி கொள்கின்றார்.
இவ்வாறு வெளியேறியவர்களூடன் சந்ததியார் தீப்பொறி என்னும் அமைப்பு உருவாங்கப்படுகின்றது.1985ம் ஆண்டு மே மாதம் புதியதோர் உலகம் என்னும் புத்தகத்தை வெளியிட்டார்கள் தீப்பொறியினர் இதில் புளொடின் அராஜகம் பற்றி விபரித்திரிந்தது அந்த நூல் .இந்நூல் பல இயங்களின் உதவியுடன் தளத்திற்கு எடுத்து வந்து தளத்தில் விநியோகிக்கப்பட்டது.
இப்பத்தகத்தில் பலரும் புனைபெயர்களில் எழுதியதால் இப்புத்தகம் வரவேற்ப்பு பெறவில்லை. உண்மையான பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பின். இப்புத்தகம் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும்.மேலும் இப்பத்தக ஆசிரியர் கூறி உள்ளார் தங்களது போரட்டம் வீரயத்துடன் முன்னேடுக்கப்படும் என்று இருப்பினும் அக்கூற்று பேச்சளவில் மட்டுமே இருந்தது.
தவறுகளை தட்டிக்கேட்டமைக்காக டேவிட் ஐயா 02.08.1985 ம் ஆண்டு இரவு 10.30 மணியளவில் அண்ணாநகர் பஸ்நிலையத்தின் பின்னால் வைத்து 4 இளைஞர்களால் அடித்து வீழ்த்தப்பட்டு வானில் கடத்தப்பட்ட பொழுது வாகனச் சாரதி கூறுகிறார் நீங்கள் டேவிட் ஐயாவை மாறிக் கடத்தி விட்டீர்கள் என்று மற்றைய கடத்தல் காரர்களை பார்த்து கூற .ஆள்மாறி றிக் உணர்ந்த பின்னர் டேவிற் ஐயாவை கோயம்பேட்டில் தெருவோரத்தில் வீசிச்விட டேவிட் ஐயா அவ்வழியால் வந்த சைக்கிளோட்டி ஒருவரால் மீண்டும் அண்ணா நகருக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்.
இதேவேளை தீப்பெறி குழுவினர் பலரும் கந்தசாமியின் உளவு படைக்கு பயந்து சந்ததியாரை வைவிட்டு தளம் சென்றுவிடுகின்றனர்.உண்மையில் டேவிட் ஐயா கடத்தப்பட்ட பின் சந்ததியாரை பாதுகாக்க நடவேடிக்கை தீப்பொறியினர் எடுத்திருக்கவேண்டும.புத்திஜுவிகளால் நிரம்பி இருந்த தீப்பொறியினரின் தங்களது உயிர்களில் காட்டிய அக்கறையை சந்ததியாரில் காட்டவில்லை.ஆனால் இன்று சந்ததியாரை கந்தியவாதி எனப்புலம்பும் தீப்பொறி குழுவை சேர்தவர்கள் ஏன் அன்று சந்ததியாரை காப்பற்ற தவறிவிட்டனர்.
இவ்வாறு தீப்பொறியை நம்பி வந்த பலர் தளம் திரும்ப முடியாதவர்கள் கந்தசாமி தலமையிலான புலனாய்வு குழுவினரால் நர வேட்டையாடப்பட்டதாக அறிய முடிகின்றது அவர்களையும் பாதுகாக்க தவறிவிட்டது தீப்பொறி அமைப்பு.
மேலும் அரசியலிலும் இராணுவத்திலும் மிளிந்த காந்தன் என்று அழைக்கப்பட்ட ரகுமான் ஜான் போன்றவர்கள் தீப்பொறி அமைப்பில் இருந்த பொழுதும் 1989 ல் தளத்தில் வைத்து 40 உறுப்பின்களால் தலமை மாற்றம் செய்யப்பட்டது போல இந்தியாவில் வைத்து ஏன் தலமை மாற்றம் செய்ய முடியவில்லை. நான் எண்ணுகிறேன் தீப்பொறி கருத்தளவில் செயற்பட்டதே ஒழிய செயல் வடிவம் கொடுக்க தவறிவிட்டனர்.
மேலும் அன்று ஒரு தலமை மாற்றம் இடம் பெற்றிருந்தால் இன்றைய அவப்பெயரை புளொட் சந்தித்திருக்காது.அதேவேளை புளொட் தமிழ் மக்களின் உரிமைக்கு உழைத்த வரலாற்றை பெற்றிருக்கலாம். மேலும் சில தீப்பொறி உறுப்பினர்களுடன் தளமத்தில் சந்ததியார் சென்று இயங்க நடவேடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாலும் புதியதோர் உலகம் என்ற புத்தகம் வெளியீடு என்பவதற்கால் ஆத்திரம் அடைந்த உமா சந்ததியாரை தீர்த்து கட்டுவதல் மேலும் தீவரமாகிறார் உமா.
இதேவேளை சந்ததியார் சுழிபுரத்தை சேர்ந்தவரும் கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவருமான தேவி ஆண்டியப்பன் என்பவரது வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் இதேவேளை சுழிபுரத்தை சேர்ந்த சபாநாதன் குமார் இவர் கந்தசாமியின் உளவு அமைப்பை சேந்தவர் .சபா சந்ததியார் செல்லும் இடங்களை அவதானிக்க தொடங்குகிறார் சபாநாதன் குமாரின் உளவுத்தகவலுக்கு அமைய சந்ததியார் அமைய சந்ததியார் 18/09/1985 அன்று புளொட் அமைப்பை சேர்ந்த தடியன் ரவி,வெங்கட் என்ற கண்ணதாசன், வள்ளுவன் போன்றவர்களால் கடத்தப்பட்து கொடூரமான முறையில் வாமதேவாவால் கொலை செய்து உடலை எரிந்து விடுகிறார்கள்.
இதைவேளை சந்ததியாரை காணத சறோயினி தேவி ஆண்டியப்பன் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சந்ததியார் தங்களது வீட்டிற்கு வந்ததா என கேட்கிறார் சறோயினி மறுமுனையில் வரவில்லை என தகவல் கிடைக்கிறது சறோயினிக்கு. அத்தோடு நேரம் கடந்து கொண்டு சென்றதால் சறோயினி டேவிட் ஐயா மூலம் சென்னையில் பொலிசில் எட்டு புளொட் உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.விசாரணையின் பின் எட்டு புளொட் உறுப்பினர்களை விடுதலை செய்யப்பட்டனர்.
இதேவேளை உமாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார் சறோயினி அந்த வேளை உமாவின் அலுவலகத்தில் இருந்த இன்றைய பாரளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பில் தலைவருமான சித்தார்த்தன் மற்றும் ஆனந்தி ஆகியோர் உமா டெல்லி சென்றதாக கூறுகிறார்கள். அப்பொழுது சென்னையில் சந்ததியார் கொலை பரபரப்பாகப் பேசப்பட்டது. டெல்லியிலிருந்து உளவுத்துறைகள் IB,Raw இது சம்பந்தமாக என்ன நடக்கிறது என டெல்லியில் இருந்தும் வெற்றிச்செல்வனை தொடர்பு கொண்டு கேட்க வெற்றி செல்வன் உமா மகேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவருகிறார் வெற்றிச்செல்வன்.
உடனடியாக டெல்லி சென்ற உமா இந்தியா RAw மற்றும் IB அதிகாரிகளைச் சந்தித்ததோடு சந்ததியார் இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் வங்கம் தந்தபாடம் மொழிபெயர்ப்பு புத்தகத்தை இயக்க முகாம்களில் விநியோகித்தது மாத்திரமின்றி இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார் எனக்கூறியதோடு வேறு சில காரணங்களுக்காகவும் சந்ததியாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகளை சமாளித்திருக்கிறார். உமா இருப்பினும் அந்த அதிகாரிகள் உமா கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை .அத்தோடு உங்கள் பிரச்சினைகளைத் உங்கள் நாட்டில் வைத்து தீர்த்துக் கொள்ளுவதோடு இந்தியாவின் சட்டம் மற்றும் ஒழுங்கை குலைக்க கூடாது என கடுமையாகவே உமாவை எச்சரிக்கை செய்தார்கள் அந்த அதிகாரிகள்.
சந்ததியாரின் கொலையை மறைக்க இன்னொரு கீழ்தரமான காரியத்தை செய்தார் உமா. தனி மனித ஒழுக்கத்தில் சிறந்து விழங்கியவரும் போதைப்பொருளுக்கு எதிரான போரளி சந்ததியாரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ராதா என்ற பெண்ணூடன் ஓடிவிட்டதாக பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பினார் உமா. இவ்விடயமானது பின்தள மாநாட்டில் உமாவிற்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று.
மேலும் பின்தள மாநாட்டில் சந்ததியார் கொலை விடயத்தில் மற்றுமொரு குற்றச்சாட்டு உமாவிற்கு எதிராக வைக்கப்பட்டது அதாவது செயற்குழுவுக்கு தெரியாமல் சந்ததியாரை கொலை செய்ததோடு சந்ததியார் சீனாவின் இடதுசாரி கொள்கை கொண்டவர் சந்ததியார் என்றும் J R ஜெவர்த்தனவுடன் இந்திய அரசு ஏற்படுத்திய திம்பு பேச்சு வார்த்தைகளை குழப்ப சந்ததியார் முயற்ச்சித்தார் என இந்தியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரொமேஷ் பண்டாரிக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியமை மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உமாமகேஸ்வரனும் மற்றவர்களோ தகுந்த பதில் அளிக்கவில்லை.
அவ்வேளை ஏற்கனவே பல புளொட் உறுப்பினர்கள் புளொட் அமைப்பில் இருந்து ஒதுங்கி இருந்தமையாலும் புளொட் அமைப்பானது இவ்விடயத்தில் மேலும் பலவீனப்படும் என்பதாலும் இயக்கம் மேலும் உடையக் கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் உமா மகேஸ்வரனின் தலைமையின் கீழ் இயங்கிய புளொட் அமைப்பின் தலைவர்களும் போராளிகளும் இவ்விடயத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
மேலும் பின்தள மாநாட்டில் மாநாட்டில் வெற்றி செல்வனுடன் சில தோழர்கள் தனிப்பட்ட முறையில் பின்வரும் கருத்தை பரிமாறி இருக்கிறார்கள் " சறோயினியின் குடும்ப உறுப்பினர்கள் சந்ததியாருக்கு செய்த நம்பிக்கை துரோகத்தால் மறைமுக தலைமை போட்டியில் இருந்த சந்ததியாருக்கு எதிராக செயற்பட்ட உமா இலகுவாக சந்ததியாருக்கு எதிராக சறோயினியின் உறவினர்கள் நகையை எடுத்தமையை தனக்கு சாதகமாக உமா பயன்படுத்தி சந்ததியாருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிந்தது. அதோபோல் சந்ததியாரின் உழைப்பை யாரும் மறுக்க முடியாது .
" மேலும் சந்ததியார் அன்றே தீர்கதரிசனமாக கூறிவிட்டார் தமிழ் மககளை அரசியல் ரீதியில் வலுவான நிலைக்கு இட்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார்.அத்தோடு அதற்காகவும் உழைத்தார்.ஆனால் அவருடைய கொள்கையை பின்பற்றி புளொட்டில் இருந்து பிரிந்த தீப்பொறிக் குழுவினர் புத்தகங்களிலும் தீப்பொறி பத்திரிகைகளிலும் நாங்கள் உத்வேகத்துடன் போரடுவோம் கூறியது போல மக்களை திரட்டி அவர்களுடன் இணைந்து அரசியல் முன்னேட்ப்புகளை முன்னேடடுக்கவில்லை மாறக புளொடடை விமர்சிப்பதிலே அவர்களுடைய காலம் கழித்து விட்டது.
தம்மை நம்பி வந்த தோழர்களை கைவிட்டு விட்டு புலம்பெயர் நாடுகளில் குடியேறி விட்டார்கள்.புளட்டின் கனவையும் மண்ணேடு மண்ணாக புதைத்து விட்டு வடயை கடித்து சாப்பிட்டுக் கொண்டு வீரமக்கள் எழுச்சி தினம் என்று கூறிக் கொண்டு தங்களின் சோற்று பாசலை மீளவும் திறக்கின்றாா்கள்.
மேலதிக செய்திகள்.
http://tamilarangam.blogspot.com/2008/01/blog-post_06.html
No comments:
Post a Comment