Sunday, 21 February 2021
இன அழிப்பு கோட்பாடு (Genocide ).
மொழியால் அடையாளப்படுத்தபடும் இனத்தின் மத கலாச்சார பண்பாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் அந்த மொழியின் மதத்தாலும் கலாச்சார பண்பாடுகளினாலும் அடையாளப் படுத்தப்பட்டவர்கள். அவர்களை பிறிதொரு மதத்தின் கலாச்சார பண்பாடுகளுக்கு மாற்றுவது இன அழிப்பு.
இனமொன்றின் இருப்பினையும் இருப்பின்மையினையும் நிலைநிறுத்துகின்ற இனம் சார் அடையாளத்தை இனத்தின் குறிகாட்டியாக்கி இனத்தின் இருத்தலை நீட்டிக்கின்ற பெரும் காரணி மொழியும் மொழியினதுடைய கலாச்சார பண்பாடுகள் ஆகும். கலாச்சார, பண்பாடுகளையும், மொழியின் தேசிய விழாக்களையும் சிதைத்து சிதைத்து அழித்து விடுவதால் அந்த இனம் தானகவே அழிந்துவிடும். என்பதை விளக்குவதே இன அழிப்பு கோட்பாடுகள் ஆகும்.
மொழி என்பது தேசியத்தின் அடையாளம், கலாச்சார பண்பாட்டின் அடையாளம், தேசத்தின் அடையாளம். தேசமும் தேசியமும் மக்களுடைய வாழ்வியலும் சார்ந்த இவற்றினை அழிப்பதன் ஊடாக ஒரு இனத்தை அழிக்க முடியும் என்பதை விளக்குவதே இன அழிப்பு கோட்பாடுகள் ஆகும்.
மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது.
பொதுவாக இனப்படுகொலை என்பது முறைப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான முறையில் இனவரையறை, நிற பேதமை, மதம் மற்றும் தேசியம் என்ற ஏதாவதொரு வகையில் ஒரு இனத்தை பாகுபடுத்தி, அந்த இனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பது இன அழிப்பு ஆகும்.
ஒரு தேசிய இனத்தின் உறுப்பினர்களை கொல்வது உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான தீங்கினை ஏற்படுத்துவது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.
ஒரு தேசிய இனத்தின் புதிதாக பிறப்புக்களை தடுக்கும் நோக்கில் செயற்படுவது, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு இனக்குழுவுடன் சேர்ப்பது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.
ஒருதேசிய இனத்தின் அடையாளங்களில் ஒன்றான பெயரை பிறிதொருதேசியத்தின் அடையாளமான பெயராக மாற்றி அமைப்பதும், ஒரு தேசிய இனத்தின் பெயருடன் இன்னுமொரு தேசிய இனத்தின் பெயரை கலந்து அடையளப்படுத்துவதும், ஒரு தேசிய இனம் பிறிதொரு தேசிய இனத்தின் பெயரை சூட்டுவதும் இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.
ஒரு தேசியத்தின் மொழிசாா்ந்த மதம்சாா்ந்த கலாச்சார பண்பாடுகளில் இருந்து இன்னுமொரு தேசியத்தின் மொழிசாா்ந்த மதம்சாா்ந்த கலாச்சார பண்பாடுகளுகளுக்கு மாற்றுவதும் இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.
ஒரு தேசியத்தின் அடையாளமான மதத்தில் இருந்து இன்னுமொரு தேசியத்தின் மதத்திற்கு மதமாற்ற செய்வது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.
ஒரு நாட்டில் அந்த நாட்டின் தேசியத்தின் அடையாளக் கூறுகளை அழிப்பதும் அழிக்கப்பட்ட தேசியத்தின் அடையாளத்தின் மீது இன்னுமொரு தேசியத்தின் அடையாளக் கூறுகளை நிறுவதும், ஒரு நாட்டில் அந்த நாட்டின் தேசியத்தின் அடையாளக் கூறுகளை நிறுவதும் இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.
ஒரு நாட்டின் தேசியத்தின் மதத்தை அழித்து பிறிதொரு நாட்டின் தேசியத்தின் மதத்தை நிறுவுவது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.
ஆக்கம் அருளகம்.
Saturday, 20 February 2021
தமிழரின் வாழ்த்துப் பாடல்.
மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறம், பொருள், இன்பம், வீடு ஓங்க வேண்டும்.தவ வேள்விகள் நிகழ வேண்டும்.மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும்.
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.
இப்படியான நிலை நாட்டில் இருந்தால் அமைதியும் சுபீட்சமும் மக்களின் வாழ்வும் உயர்வு பெற்று நாடும் உயர்ந்து உய்வு பெறும் என்பது தின்னம்.
தமிழ் வாழ்த்து.
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி யே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி யே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழியவே!
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
Friday, 19 February 2021
தமிழ் பெளத்தம், சிங்கள பெளத்தம் வரலாறு.
ஈழத்தில் சிங்கள வரலாற்றுக்கு அகரமான பெண் குவேனி .
https://www.youtube.com/watch?v=nV9iS-eQ_NI&ab_channel=IBCTamilTV
Thevanampiya Theesan - மன்னன் தேவநம்பியதீசன் பற்றவைத்த நெருப்பு !
https://www.youtube.com/watch?v=-NXcfwNyK80&ab_channel=TamilVisionHD
Prof .Pusparatnam.
குருந்தூர் மலைப்பிரதேசம் எந்தப்பண்பாட்டின் அடையாளம்?
https://www.youtube.com/watch?v=GZWgai52Lzg&ab_channel=IBCTamilTV
தமிழ் பெளத்தம் எதனை வெளிப்படுத்துகின்றது? பாகம்--08
https://www.youtube.com/watch?v=5kV3xFnzNaw&ab_channel=IBCTamilTV
திட்டமிட்டு மறைக்கப்படும் வரலாறு. பாகம்--09
https://www.youtube.com/watch?v=LoVIUfTtEuM&ab_channel=IBCTamilTV
யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடு.
நம் பிள்ளைகளை எப்படி வழி நடத்தவேண்டும் என பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டும் மிக அற்புதமான இனிய தமிழ் சொற்பொழிவு.
https://www.youtube.com/watch?v=OGohYb8rNH8&ab_channel=TamilaruviManian%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8Dகாவிரிப் பூம்பட்டின கோயில்கள்.
காவிரிப் பூம்பட்டின நகரின் அமைப்பில் பல்வேறு கோயில்கள் இருந்திருக்கின்றன. அவை கோட்டங்கள் என்று வழங்கப்படுகின்றன. அவை:
சிவன் கோட்டம், திருமால் கோட்டம், பலராமன் கோட்டம், இந்திரன் கோட்டம், முருகன் கோட்டம், சூரியன் கோட்டம், சந்திரன் கோட்டம், புத்தர் கோட்டம், அருக தேவன் கோட்டம்.
இதனைச் சிலப்பதிகாரம் பின்வருமாறு கூறும்.
"அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற் வச்சிரக் கோட்டம், புறம்பணையான்வாழ் கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம்".
இந்திர விகாரம் ஏழு. காவிரிப் பூம்பட்டினத்தில் இந்திரனால் நிருமிக்க்ப் பெற்ற புத்த விகாரங்கள் ஏழு இருந்தன.
இந்திர விகாரம் ஏழுடன் போகி இந்திர விகாரம் ஏழுடன் புக்கு இந்திர விகாரம் எனஎழில் பெற்று இந்திர விகார மேழும் ஏத்துதலின் புத்த சைத்தியத்து இந்திரன் நிருமித்தனவாகிய ஏழரங்கு
மணிவண்ணன் கோட்டம்
இதுவும் புகாரில் அமைந்திருந்த கோட்டங்களுள் ஒன்று. திருமாலின் கோயில் என்பதைப் பெயரில் இருந்தே அறிய முடிகிறது. மணிவண்ணன் கோட்டத்தைப்பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில் வருகிறது. காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து வெளியேறுகையில் கோவலனும் கண்ணகியும் இக்கோயிலை வலஞ்செய்து புறப்பட்டமை கூறப்படுகிறது.
கணி கிளர் அரவின் அறிதுயில மர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து
இப்பகுதியை விளக்கி, 'அரவணையின் மீதே அறிவோடு துயில் கொள்ளும் மணிவண்ணன் என்னும் திருநாமத்தையுடைய திருமால் கோயிலை வலஞ் செய்து என்பதாகும்.
காவிரிப்பூம்பட்டின நகரமைப்பில் மேற்குறித்த கோயில்கள் இடம் பெற்றிருந்தமை புலனாகிறது. 'புறம் பணையான் கோயில் என்கிற ஐயனார் கோயில் நகரின் புறத்தே அமைந்திருந்தது என்பார்.
காவிரிப் பூம்பட்டினத்தின்கண் அமைந்திருந்த ஐவகை வனங்களுள் ஒன்றாகிய உவ வனம் என்னும் மலர்ப் பூங்காவின் மேற்றிசையில் அமைந்த சிறிய வாயில் வழியே சென்றால் - உவ வனத்திற்கும், ந்கரின் இடுகாடாகிய சக்கரவாளக் கோட்டத்திற்கும் நடுவே, உலக அறவி என்னும் பொது அம்பலம் இருந்தது.
அந்த உலக அறவியில், காவிரிப் பூம்பட்டினத்தின் நகரத் தெய்வமாகிய சம்பாபதி கோயிலும், அங்குள்ள பொது அம்பலத்தின் தூண் ஒன்றில், கந்திற்பாவை என்ற தெய்வத்தின் உருவமும் இருந்தன என்பதைச் சீ உலக அறவிக்குள் நுழையும் வாயில் பலரும் ஒரு சேரப் புகுமளவு பெரிதாகவும் அகலமாகவும் அமைந்திருந்ததாகச் சாத்தனார் கூறுகிறார்.
சக்கரவாளக் கோட்டம்.
காவிரிப்பூம்பட்டினம் தோன்றிய காலத்திலேயே, அதனுடன் தோன்றியதாகக் கூறப்படும் இடுகாடு, சக்கரவாளக் கோட்டம் எனப்பட்டது. ஊர் மக்கள், அதனைச் சுடுகாட்டுக் கோட்டம் என்றே கூறுவர் எனவும் மணிமேகலை உரைக்கிறது.
அக்கோட்டம் நான்கு பக்கத்திலும் பெரிய மதில்களாற் சூழப்பட்டிருந்தது. அதன் உள்ளே காளி கோட்டமும், வேறு பல்வகை மன்றங்களும், தவத்தவர், அரசர், கற்புடை மகளிர் முதலியோர்க்கு எழுப்பப்பட்ட கோட்டங்களும் இருந்தன.
புகார் நகரில் சக்கரவாளக் கோட்டம் அமைந்திருந்தது பற்றி மணிமேகலை விரிவாகக் கூறுகிறது. இந்தச் சக்கரவாளக் கோட்டம் சிற்ப நூல், கட்டடக்கலை, நகரமைப்பு ஆகியவற்றின் தலைவனாகிய மயனால் நிருமிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
எவ்வெச் சாதியினர் எவ்வெவ்விடங்களில் புதைக்கப் பட்டனர் என்பதை விளக்கப் பல தனித்தனிக் கோட்டங்கள் அந்தச் சக்கரவாளத்தில் இருந்தன. இடுகாட்டுத் தெய்வங்கள் உறையத் தக்க பல தூண்கள் இருந்தன. துறவிகளை வழிபடுவோர் ஓசை, பிணங்களை அடக்கம் செய்ய வருவோர் எழுப்பும் அவலக் குரல்கள், நரிகளின் ஓலம், கோட்டான்களின் அலறல் இவையனைத்தும் அங்கு இரவும் பகலும் கேட்டுக் கொண்டே இருக்கும். பேய்கள் வாழும் வாகை மன்றம், பறவைகள் தங்கும் வெள்ளில் மன்றம், காபாலிகர்கள் வாழும் வன்னி மன்றம், விரதங்களால் இளைத்த மேனியையுடையோர் இறந்த பின் அவர் தலை ஓடுகளை மாலையாகக் கட்டுவோர் வாழும் இரத்தி மன்றம், பிணங்களைத் தின்போர் வாழும் வெள்ளிடை மன்றம் என்னும் ஐவகை மன்றங்கள் சக்கரவாளக் கோட்டத்தில் இருந்தன
பிரபாபகரனின் சுதுமலைப் பிரகடனம்
. 04-08-1987 பிற்பகல் 9:52 தலைவர் பிரபாகரன்.
இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ் மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது.நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.
இதன் பின்னர் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.
https://www.youtube.com/watch?v=nVxBMr3DEwM&ab_channel=SenpakamValaikatchi
https://www.youtube.com/watch?v=8AUW6ge-iWM&ab_channel=IBCTamilNews
Thursday, 18 February 2021
திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். (University of Jaffna).
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (University of Jaffna) இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப்பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இராமநாதன் 90ஆண்டுகளுக்கு முன்பு நிறுவிய இந்த சிவன் கோயிலே அருள்மிகு பரமேஸ்வரன் கோயில். இக் கோயில் பரமேசுவராக் கல்லூரி அறக்கட்டளைச் சொத்தாக இருந்து வருகிறது. 1974 வளாகத்தை அரசுக்குக் கையளித்த பரமேசுவராக் கல்லூரி அறக்கட்டளை கோயிலையும் சுற்றியுள்ள நிலத்தையும் அரசுக்கு கை கையளிக்க வில்லை.இன்றுவரை அறக்கட்டளையின் சொத்தாக இருந்து வரும் கோயிலை திருப்பணி செய்து போற்றி வளர்த்து வருவது அறக்கட்டளை ஆகும்.
இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் பல்கலைக்கழகமொன்று இல்லாமை ஒரு பெருங் குறையாக இருந்துவந்தது. எனினும் இத்தகைய ஒரு பல்கலைக்கழகம் எங்கே நிறுவப்பட வேண்டுமென்பதில் தமிழர் பிரதிநிதிகளிடையே ஒத்தகருத்து நிலவவில்லை. இலங்கைத் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, திருகோணமலையிலேயே பல்கலைக் கழகம் நிறுவப்பட வேண்டுமென்று வாதிட்டுவந்தது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் வேறு சிலரும் யாழ்ப்பாணத்தில் இது அமையவேண்டுமென்றனர். இலங்கையின் தமிழர் பிரதேசத்தின் மத்திய பகுதியில் திருகோணமலை அமைந்திருப்பதும், தமிழர் பகுதியின் தலைமையிடமாகத் திருகோணமலையை வளர்த்தெடுக்கும் நோக்கம் இருந்ததும் தமிழரசுக் கட்சியினர் திருகோணமலையை அமைவிடமாக வலியுறுத்தி வந்ததற்கான காரணங்களிற் சில. திருகோணமலையில் குடித்தொகை அடிப்படையில் தமிழர் விகிதாசாரம் குறைந்துவருவதைத் தடுத்து நிறுத்தவும் இது உதவுமென அவர்கள் கருதினார்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பெயர்ப்பலகை
அக்காலத்தில் யாழ்ப்பாண மாணவர்களே மிகப் பெரும்பான்மையாகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகினர். எனவே உடனடியாக யாழ்ப்பாணத்திலேயே பல்கலைக்கழகம் தேவை என எதிரணியினர் வாதாடியதுடன், திருகோணமலையின் குடித்தொகை நோக்கங்களைப் பொறுத்தவரை தமிழருக்குப் பாதகமான விளைவுகளே ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள்.
1965 ல் பதவிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசில், தமிழரசு, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பங்காளிகளாக இருந்தும், தமிழர் பகுதியொன்றில் பல்கலைக்கழகமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சாதகமான நிலைமை இருந்தபோதிலும் கூட, தமிழரிடையே ஒத்தகருத்தின்மை காரணமாக எதுவும் நடைபெறவில்லை. 1972ல் இலங்கை சுதந்திரக் கட்சி வெற்றிபெற்று சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரான பின்னர். தமிழரசுக் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றை நிறுவினார்.
வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி வளவிலமைந்துள்ள பட்டதாரி மாணவப் பிரிவையும் 1921 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சேர். பொன்னம்பலம் இராமநாதனால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேசுவராக் கல்லூரியையும் இணைப்பதன் மூலம் 1974 ஆகத்து 1 ஆம் நாள் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது. 1974 யூூலை 19 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான எல். எச். சுமணதாச வித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கை, தமிழ் ஆகிய துறைகளின் தலைவரான கலாநிதி க. கைலாசபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டதை அறிவித்தார்.
இவ்வாறு 1974 சூலை 25 வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 121/5 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியாகிய பிரகடனத்தின் மூலம் 1974 ஆகத்து முதலாம் நாள் நிறுவப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் சட்டபீடம், உடற்கல்விப்பீடம் என்பவற்றை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் ஆரம்பத்தில் விஞ்ஞான பீடம், மனிதப் பண்பியற் பீடம் என்பவற்றுடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண வளாகத்தின் முதல் போதனைசார் ஊழியர்களாக 1974 செப்டெம்பர் 1 ஆம் திகதியன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய சில ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்நிலைமைகளைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதைய பிரதம மந்திரியான சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் 1974 அக்டோபர் 6 ஆம் நாள் பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாண வளாகம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் யாழ்ப்பாண வளாகத்தின் முதல் 14 மாணவர்களுக்கான மாணவர் பதிவுப் புத்தகம் பிரதமரால் வழங்கப்பட்டது.
அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக் கழகம் என்ற ஒரே பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. எனவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமும், "இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம்" என்றே அழைக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் விளைவாக உயர்கல்வி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் 1979 சனவரி 1 ஆம் நாள் தன்னாதிக்கமுள்ள பல்கலைக்கழகமாகியது. தமிழறிஞர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
Jafna visit of Hon Sirimavo Bandaranaike.
https://www.youtube.com/watch?v=QdTd9WLFdYE&ab_channel=Archivevideos
Wednesday, 17 February 2021
72 கன்னி பெண்.
ஒருவருக்கு சொர்க்கத்தில் 72 கன்னி பெண் கிடைக்கும் என்பது பற்றிய இன்னுமொரு ஆதாரம் சொர்க்கத்தில் 72 கன்னி பெண் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
https://www.youtube.com/watch?v=aX05OU6NIrA&ab_channel=SIVAPURAM%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81ARULCHELVAN.
இந்திய பிரதமர்நரேந்திர மோடி. (Prime Minister Narendra Modi )
யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஒரே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. (Prime Minister Narendra Modi ) 14--03-2015.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 14-02-2021 திகதி அன்று பேசியது. வணக்கம் சென்னை ,வணக்கம் தமிழ்நாடு.
இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தனது அரசு எப்போதுமே கவனத்தில் கொண்டிருப்பதாகவும் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஒரே இந்தியப் பிரதமர் தாம்தான் என்ற பெருமை தனக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தைவிட தனது அரசுதான் இலங்கைத் தமிழர்களுக்காக அதிகம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மன்னாருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மீண்டும் ரயில் பாதை போடப்பட்டுவருவதாகவும் சென்னை - யாழ்ப்பாணம் விமானப் போக்குவரத்துத் துவங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா கட்டிவரும் யாழ்ப்பாண கலாசார மையம் விரைவில் திறக்கப்படுமென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர்களின் உரிமை குறித்த விவகாரங்களை இலங்கையின் அரசு தலைவர்களுடன் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்ததாக, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர் மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படுமென்று தெரிவித்தார். தங்களுடைய காலகட்டத்தில் 1600 மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் மோதி சுட்டிக்காட்டினார். அதேபோல 316 படகுகளும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பாராதியார் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர்.
ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம்.. கல்விச் சாலைகள் வைப்போம் என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டினார்.
ஔவையாரின் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர்
வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும் என்ற ஔவையாரின் பாடலை மேற்கோள் காட்டினார்.
சென்னைக்கு நான் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, 16 February 2021
வாழ்த்துக்கள் வாழ்த்துகள்
இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? (பசு , பந்து போன்றவை). இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.
இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..
நெடில் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : மாடு , பாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் – உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு
எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?
இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.
1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..
உதாரணம்.. மாடு , ஆடு …. இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..
2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..
பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது )
2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..
செலவு, வரவு- செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்
3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..
வாக்கு – வாக்குகள் (வாக்குக்கள் அன்று)
கணக்கு – கணக்குகள்
நாக்கு – நாக்குகள்
வாத்து- வாத்துகள்
வாழ்த்து – வாழ்த்துகள் (வாழ்த்துக்கள் என்பது தவறு)
உதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை. தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்அதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம்
மால்கம் ரஞ்சித் பாகம்--04.
புலிகளுக்கும் மால்கம் ரஞ்சிக்கும் இடையிலான போர்.
பாகம்--0 2
இலங்கையில் இறுதி கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருநத போது, முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களும் பெரும் தொகையில் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்தாா்கள்.
இந்த பேரழிவை தடுப்பதற்காகவும் தமிழ் குடிகளை கிறிஸ்தவ அழிப்பாளர்களிடம் இருந்து காப்பதற்காகவும் வெளிநாடுகளில், தமிழர்களின் வரலாறு காணத சாத்தீக போராட்டங்கள் பல இடம்பெற்றன இப் போராட்டம் உலக நாடுகளில் பல மனிதநேய கதவுகளை திறந்தன.
எனவே இதை தடுக்கும் வகையில் பிறப்பாள் கிறிஸ்தவரான இலங்கை ஜனதிபதி பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினால் சிங்கள பாதிரிமார்களின் அவசர உதவி கோரப்பட்டது.
ராஜபக்ஷவினால் வத்திகானுக்கு அனுப்பப்பட்டது கத்தோலிக்க சிங்கள கிறிஸ்தவ மிசனரி ஆயர்களின் தலைமையில் தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ மிசனரி ஆயர்களும் அடங்கி இருந்தாா்கள்.
இந்த ஆயர் குழுவினர் வத்திக்கானில் (கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகத்தில்) அழிக்கப்பட்டது பயங்கரவாத புலிகளே அப்பாவி மக்கள் அல்ல என்று அழுத்தி கூறி முன்மொழிந்தாா்கள்.
கத்தோலிக்க சிங்கள கிறிஸ்தவ மிசனரி ஆயர்களின் முன்மொழிவை ஆதரித்து கத்தோலிக்க தமிழ் கிறிஸ்தவ மிசனரி ஆயர்கள் அழிக்கப்பட்டது பயங்கரவாத புலிகளே அப்பாவி மக்கள் அல்ல என்று அழுத்தி கூறி வழிமொழிந்தாா்கள்.
மஹிந்த ராஜபக்ச அவர்கள் எதிர் பார்த்ததை விட மிகவும் கச்சிதமாக முடித்தார்கள் இந்த பாதிரியார்கள் கூட்டம். இதன் மூலம் உண்மை கண்டறியப்பட்டு நீதி வழங்கப்படுவதை தடுத்தார்கள்.
இச் செய்தி அப்போதைய பல ஊடகங்களில் பேசப்பட்டதை யாவரும் அறிவர்.
புலிகளுக்கும் மால்கம் ரஞ்சிக்கும் இடையிலான போர்.
பாகம்--01
இலங்கையின் வற்றிக்கானின் ஆண்டகை ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவர்கள் விடுதலை புலிகளின் அழிவுக்கு காரணமானவர்.
இலங்கையில் பயங்கரவாத தமிழீழ விடுதலை புலிகளை இலங்கை இலங்கை அரசு அழித்துக்கொண்டு இருக்கின்றது. இந்த விடையத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்த கத்தோலிக்கத் திருச்சபையின் ஆண்டகை ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவர்கள் வேண்டுகோளை 2009 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்தாா்.
https://www.youtube.com/watch?v=PhCO7vPzc-0&feature=emb_title&ab_channel=LankasriNews
இலங்கை பெளத்த பேரினவாத நாடு அல்ல பெளத்த நாடு.
பௌத்த தர்மம் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு ஆசீர்வாதமாக நான் பார்க்கிறேன். பண்டைகாலம் முதல் இந்த நாட்டை ஆண்ட மன்னர்கள் பௌத்த மதத்திற்கு பழங்காலத்திலிருந்தே காட்டிய அன்பு, தயவு மற்றும் நெருக்கம் ஆகியவற்றை நாடு முழுவதும் காணலாம்.
இந்த நாட்டை சிங்கள மற்றும் பௌத்த மரபுகள் நிறைந்த ஒரு வலுவான நாடாகவே நான் பார்க்கிறேன். எனவே, இது ஒரு பௌத்த நாடு அல்ல என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொல்பவர்கள் முட்டாள்.
இந்த நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு பௌத்த மதம் என்பதை நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அதைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.
நமது மஹா சங்கத்தினரிப் அறிவுரைகளை நாம் ஏற்றுக் கொண்டு இந்த பார்வையின் மூலம் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
இந்த நாட்டில் தலைவர்களாக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பௌத்த மத சிந்தனைக்கு ஏற்ப இருக்க வேண்டும். பௌத்த சிந்தனைக்கு பொருந்தாத முடிவுகளை எடுப்பது நல்லதல்ல என ஆண்டகை ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் குறிப்பிட்டாார்.
ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன். (Albert Malcolm Ranjith Patabendige Don).
வத்திக்கானின் ஆணை பெற்று நடப்பவர்.புத்தமதத்தை இந்த நாட்டில் முன்னுரிமை மதமாக ஏற்றுக் கொண்டவர். இலங்கையின் அதிஉயர் இயேசுவின் அருளாளர்.
வத்திக்கானிலிருந்து வத்திக்கானில் போப் ஆண்டவரை தெரிவுசெய்யும் கருதினால் குழுமத்தின் உறுப்பினர். தவத்திரு கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் கூறுகிறார்.
1 உடனடியாக மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவருக.
2 உடனடியாக மதமாற்றத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதிகள் பற்றி விசாரணை நடத்துக.
3 மத மாற்றிகள் பலர் ஏமாற்றுக்காரர். அவர்களை மக்கள் நம்பக்கூடாது. பணத்திற்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு மதம் மாறாதீர்கள் மக்களே என்று கூறுகிறார்.
Sunday, 14 February 2021
பெளத்த சிங்கள மக்கள் மீதான தமிழ் கத்தோலிக்க வெறியாட்டம்.
யார் செய்தாலும் கொலை கொலை தான். இறந்தது அப்பாவி மக்களே மனிதாபிமானம் உள்ள எவரும் இதில் இனம் மதம் பார்க்க மாட்டார்கள்.. அநியாயமாக சிலரின் தான்தோன்றித்தனமான கொலை வெறிக் கோபத்தில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளார்கள்.
தமிழர்களின் தினம்
பண்டைய தமிழர்களின் காதலர் தினமாக இருந்தது பௌர்ணமி .
சித்திரை மாத முழு நிலா நாளில் நதிக்கரையில் ஒன்றுகூடி மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகள், கவலைகள், ஆசைகள், கனவுகள் போன்றவற்றை பிரியமாணவர்களுடன் பகிர்ந்து மன சுமையை இறக்கி வைத்து ஓடும் ஆற்றில் அன்பை கலந்த அந்த நிகழ்வை முழுவதுமாக மறந்துவிட்டான் ஆண்ட்ராய்டு தமிழன். 50 வருட வாழ்க்கை வாழ்ந்த முதிய தம்பதிகள், நேற்று திருமணமான இளம் தம்பதிகள், காதலை பரிமாறிக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகள், காதலை பரிமாற துடிக்கும் இளைஞர்கள் என அத்தனை மக்களுக்கும் சித்ரா பௌர்ணமியே காதலர் தினம்.
பழங்காலந்தொட்டு தமிழர்களிடையே பௌர்ணமி கொண்டாட்டங்கள் மனிதர்களின் மன பாரத்தை குறைக்கும் விழாவாகவும், குடும்ப உறவை பலமாக்கும் விழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.சித்ரா பௌர்ணமி தமிழ்தேசியத்தின் பண்பாட்டு விழா.
பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
தமிழ் பூமியின் தமிழ்தேசியத்தை சிதைதது அன்னிய தேசிய பண்பாடுகளை கொண்டாடுவதன் காரணமாகவே தமிழ் பூமி உங்களை நிராகரித்துக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருக்கின்றது.
https://www.youtube.com/watch?v=22OWQ4j5EC8&ab_channel=isaithulitamil
https://www.youtube.com/watch?v=dq6ZPWpSZZI&feature=emb_title&ab_channel=SPSMEDIA














