பண்டைய தமிழர்களின் காதலர் தினமாக இருந்தது பௌர்ணமி .
சித்திரை மாத முழு நிலா நாளில் நதிக்கரையில் ஒன்றுகூடி மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகள், கவலைகள், ஆசைகள், கனவுகள் போன்றவற்றை பிரியமாணவர்களுடன் பகிர்ந்து மன சுமையை இறக்கி வைத்து ஓடும் ஆற்றில் அன்பை கலந்த அந்த நிகழ்வை முழுவதுமாக மறந்துவிட்டான் ஆண்ட்ராய்டு தமிழன். 50 வருட வாழ்க்கை வாழ்ந்த முதிய தம்பதிகள், நேற்று திருமணமான இளம் தம்பதிகள், காதலை பரிமாறிக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகள், காதலை பரிமாற துடிக்கும் இளைஞர்கள் என அத்தனை மக்களுக்கும் சித்ரா பௌர்ணமியே காதலர் தினம்.
பழங்காலந்தொட்டு தமிழர்களிடையே பௌர்ணமி கொண்டாட்டங்கள் மனிதர்களின் மன பாரத்தை குறைக்கும் விழாவாகவும், குடும்ப உறவை பலமாக்கும் விழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.சித்ரா பௌர்ணமி தமிழ்தேசியத்தின் பண்பாட்டு விழா.
பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
தமிழ் பூமியின் தமிழ்தேசியத்தை சிதைதது அன்னிய தேசிய பண்பாடுகளை கொண்டாடுவதன் காரணமாகவே தமிழ் பூமி உங்களை நிராகரித்துக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருக்கின்றது.
https://www.youtube.com/watch?v=22OWQ4j5EC8&ab_channel=isaithulitamil
https://www.youtube.com/watch?v=dq6ZPWpSZZI&feature=emb_title&ab_channel=SPSMEDIA
No comments:
Post a Comment