Wednesday, 17 February 2021

இந்திய பிரதமர்நரேந்திர மோடி. (Prime Minister Narendra Modi )

 யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஒரே இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி.  (Prime Minister Narendra Modi ) 14--03-2015.



பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 14-02-2021 திகதி அன்று பேசியது. வணக்கம் சென்னை ,வணக்கம் தமிழ்நாடு.


இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தனது அரசு எப்போதுமே கவனத்தில் கொண்டிருப்பதாகவும் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஒரே இந்தியப் பிரதமர் தாம்தான் என்ற பெருமை தனக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தைவிட தனது அரசுதான் இலங்கைத் தமிழர்களுக்காக அதிகம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மன்னாருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மீண்டும் ரயில் பாதை போடப்பட்டுவருவதாகவும் சென்னை - யாழ்ப்பாணம் விமானப் போக்குவரத்துத் துவங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா கட்டிவரும் யாழ்ப்பாண கலாசார மையம் விரைவில் திறக்கப்படுமென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் உரிமை குறித்த விவகாரங்களை இலங்கையின் அரசு தலைவர்களுடன் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அடுத்ததாக, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர் மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படுமென்று தெரிவித்தார். தங்களுடைய காலகட்டத்தில் 1600 மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் மோதி சுட்டிக்காட்டினார். அதேபோல 316 படகுகளும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாராதியார் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர்.

ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம்.. கல்விச் சாலைகள் வைப்போம் என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டினார்.

 ஔவையாரின் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர்

வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும் என்ற ஔவையாரின் பாடலை மேற்கோள் காட்டினார்.

சென்னைக்கு நான் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.







No comments:

Post a Comment