Saturday, 20 February 2021

தமிழரின் வாழ்த்துப் பாடல்.

 மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறம், பொருள், இன்பம், வீடு  ஓங்க வேண்டும்.தவ வேள்விகள் நிகழ வேண்டும்.மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும்.    

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்                                                    கோன்முறை அரசு செய்க  குறைவிலாது உயிர்கள் வாழ்க                                            நான்மறை அறங்கள் ஓங்க    நற்றவம் வேள்வி மல்க                                                        மேன்மைகொள் சைவ நீதி   விளங்குக உலக மெல்லாம்.

இப்படியான நிலை நாட்டில் இருந்தால் அமைதியும் சுபீட்சமும் மக்களின் வாழ்வும் உயர்வு பெற்று நாடும் உயர்ந்து உய்வு பெறும் என்பது தின்னம்.

No comments:

Post a Comment