காவிரிப் பூம்பட்டின நகரின் அமைப்பில் பல்வேறு கோயில்கள் இருந்திருக்கின்றன. அவை கோட்டங்கள் என்று வழங்கப்படுகின்றன. அவை:
சிவன் கோட்டம், திருமால் கோட்டம், பலராமன் கோட்டம், இந்திரன் கோட்டம், முருகன் கோட்டம், சூரியன் கோட்டம், சந்திரன் கோட்டம், புத்தர் கோட்டம், அருக தேவன் கோட்டம்.
இதனைச் சிலப்பதிகாரம் பின்வருமாறு கூறும்.
"அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற் வச்சிரக் கோட்டம், புறம்பணையான்வாழ் கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம்".
இந்திர விகாரம் ஏழு. காவிரிப் பூம்பட்டினத்தில் இந்திரனால் நிருமிக்க்ப் பெற்ற புத்த விகாரங்கள் ஏழு இருந்தன.
இந்திர விகாரம் ஏழுடன் போகி இந்திர விகாரம் ஏழுடன் புக்கு இந்திர விகாரம் எனஎழில் பெற்று இந்திர விகார மேழும் ஏத்துதலின் புத்த சைத்தியத்து இந்திரன் நிருமித்தனவாகிய ஏழரங்கு
மணிவண்ணன் கோட்டம்
இதுவும் புகாரில் அமைந்திருந்த கோட்டங்களுள் ஒன்று. திருமாலின் கோயில் என்பதைப் பெயரில் இருந்தே அறிய முடிகிறது. மணிவண்ணன் கோட்டத்தைப்பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில் வருகிறது. காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து வெளியேறுகையில் கோவலனும் கண்ணகியும் இக்கோயிலை வலஞ்செய்து புறப்பட்டமை கூறப்படுகிறது.
கணி கிளர் அரவின் அறிதுயில மர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து
இப்பகுதியை விளக்கி, 'அரவணையின் மீதே அறிவோடு துயில் கொள்ளும் மணிவண்ணன் என்னும் திருநாமத்தையுடைய திருமால் கோயிலை வலஞ் செய்து என்பதாகும்.
காவிரிப்பூம்பட்டின நகரமைப்பில் மேற்குறித்த கோயில்கள் இடம் பெற்றிருந்தமை புலனாகிறது. 'புறம் பணையான் கோயில் என்கிற ஐயனார் கோயில் நகரின் புறத்தே அமைந்திருந்தது என்பார்.
காவிரிப் பூம்பட்டினத்தின்கண் அமைந்திருந்த ஐவகை வனங்களுள் ஒன்றாகிய உவ வனம் என்னும் மலர்ப் பூங்காவின் மேற்றிசையில் அமைந்த சிறிய வாயில் வழியே சென்றால் - உவ வனத்திற்கும், ந்கரின் இடுகாடாகிய சக்கரவாளக் கோட்டத்திற்கும் நடுவே, உலக அறவி என்னும் பொது அம்பலம் இருந்தது.
அந்த உலக அறவியில், காவிரிப் பூம்பட்டினத்தின் நகரத் தெய்வமாகிய சம்பாபதி கோயிலும், அங்குள்ள பொது அம்பலத்தின் தூண் ஒன்றில், கந்திற்பாவை என்ற தெய்வத்தின் உருவமும் இருந்தன என்பதைச் சீ உலக அறவிக்குள் நுழையும் வாயில் பலரும் ஒரு சேரப் புகுமளவு பெரிதாகவும் அகலமாகவும் அமைந்திருந்ததாகச் சாத்தனார் கூறுகிறார்.
சக்கரவாளக் கோட்டம்.
காவிரிப்பூம்பட்டினம் தோன்றிய காலத்திலேயே, அதனுடன் தோன்றியதாகக் கூறப்படும் இடுகாடு, சக்கரவாளக் கோட்டம் எனப்பட்டது. ஊர் மக்கள், அதனைச் சுடுகாட்டுக் கோட்டம் என்றே கூறுவர் எனவும் மணிமேகலை உரைக்கிறது.
அக்கோட்டம் நான்கு பக்கத்திலும் பெரிய மதில்களாற் சூழப்பட்டிருந்தது. அதன் உள்ளே காளி கோட்டமும், வேறு பல்வகை மன்றங்களும், தவத்தவர், அரசர், கற்புடை மகளிர் முதலியோர்க்கு எழுப்பப்பட்ட கோட்டங்களும் இருந்தன.
புகார் நகரில் சக்கரவாளக் கோட்டம் அமைந்திருந்தது பற்றி மணிமேகலை விரிவாகக் கூறுகிறது. இந்தச் சக்கரவாளக் கோட்டம் சிற்ப நூல், கட்டடக்கலை, நகரமைப்பு ஆகியவற்றின் தலைவனாகிய மயனால் நிருமிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
எவ்வெச் சாதியினர் எவ்வெவ்விடங்களில் புதைக்கப் பட்டனர் என்பதை விளக்கப் பல தனித்தனிக் கோட்டங்கள் அந்தச் சக்கரவாளத்தில் இருந்தன. இடுகாட்டுத் தெய்வங்கள் உறையத் தக்க பல தூண்கள் இருந்தன. துறவிகளை வழிபடுவோர் ஓசை, பிணங்களை அடக்கம் செய்ய வருவோர் எழுப்பும் அவலக் குரல்கள், நரிகளின் ஓலம், கோட்டான்களின் அலறல் இவையனைத்தும் அங்கு இரவும் பகலும் கேட்டுக் கொண்டே இருக்கும். பேய்கள் வாழும் வாகை மன்றம், பறவைகள் தங்கும் வெள்ளில் மன்றம், காபாலிகர்கள் வாழும் வன்னி மன்றம், விரதங்களால் இளைத்த மேனியையுடையோர் இறந்த பின் அவர் தலை ஓடுகளை மாலையாகக் கட்டுவோர் வாழும் இரத்தி மன்றம், பிணங்களைத் தின்போர் வாழும் வெள்ளிடை மன்றம் என்னும் ஐவகை மன்றங்கள் சக்கரவாளக் கோட்டத்தில் இருந்தன
No comments:
Post a Comment