Wednesday, 9 September 2020

சிவபூமியான இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள்--

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 

சிவபூமியான இலங்கையில் இராவணன் காலத்திலேயே நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் பஞ்ச ஈஸ்வரங்கள்  கட்டப்பட்டன அவையாவன .  நகுலேஸ்வரம் வடக்கு யாழ்ப்பாணம், திருக்கேதீச்சரம் வடமேற்கு,மன்னார், திருக்கோணேச்சரம் கிழக்கு திருக்கோணமலை, முன்னேசுவரம் மேற்கு புத்தளம்,  தொண்டீசுவரம் தெற்கு மாத்தறை    அமைந்திருக்கின்றன. இதன் காரணமாகவே காரணமாகவே இலங்கையை சிவபூமியாக அடையாளப்படுத்தினாா்கள்.

இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை போர்த்துக்கீசர் கைப்பற்றி இலங்கையைத் தம்முடைய காலனித்துவ நாடாக மாற்றிய காலப்பகுதியில் இவ்வீஸ்வரங்களை இவர்கள் அழித்துச் சேதம் விளைவித்தனர்.

1----
நகுலேஸ்வரம்


கீரிமலை (Keerimalai) இலங்கைத் தீவின் யாழ்ப்பாண மாவட்டத்தில் குன்றும் நன்னீருற்றும் கொண்ட ஒரு புண்ணிய தலமாகும். இங்கு வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகுலேச்சரம் சிவாலயம்உள்ளது.

இங்குள்ள நன்னீரூற்றில் (தீர்த்தத்தில்) கீரிமுகம் கொண்ட ஒரு முனிவர் தீர்த்தமாடி இங்குள்ள குன்றில் தவமிருந்து கீரிமுகம் மாறப் பெற்றார். இதனால் இத்தலம் கீரிமலை என அழைக்கப்பட்டு வருகிறது 

கிபி 8-ஆம் நூற்றாண்டில் குதிரை முகத்தைக் கொண்ட மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ இளவரசி இங்கு தீர்த்தமாடித் தனக்கிருந்த குதிரை முகம் மாறப் பெற்றாள் என்றும் வரலாறு கூறுகின்றது

2----
திருக்கேதீச்சரம்-------

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்று. சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.

இத் தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீரும்.

இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.

கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது.

பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.

3---

திருக்கோணேச்சரம்--

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார்.

திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது. இத்தலதின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர். கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினான்.

போர்த்துக்கேயர் திருகோணமலையில் ஆலயத்தை அழித்தபோது சிவனடியாா்கள்  சில விக்கிரகங்களை மறைத்து காப்பாற்றினர். அவ்வாறு காப்பாற்றப்பட்ட விக்கிரகமே பின்பு தம்பலகாமத்தில் பிரதிட்டைசெய்யப்பட்டது. ஆதிகோணேச்சரம் என்றறியப்படும் இக்கோவிலை தம்பலகாமத்தில் உருவாக்கினாா்கள்.

4--
முன்னேசுவரம் அல்லது முன்னேஸ்வரம் -

முன்னேசுவரம் அல்லது முன்னேஸ்வரம் (Munneswaram) இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட கோயில் ஆகும்
 மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது.போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இவ்வாலயம் இடிக்கப்பட்டது. 

5--

தொண்டீசுவரம்-

தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம்) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். இக்கோயில் போத்துக்கீசர் ஆட்சியின் போது போத்துக்கீசரால் உடைக்கப்பட்டு (Souza d'Arronches) கத்தோலிக்க கிறித்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்" என இது அழைக்கப்படுகிறது.

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 
 அன்பேசிவம்.


புலம் பெயர் தேசத்து சைவ ஆலயங்களில் சிலுவை அடையாளம் பொறிப்பது மதமாற்ற முயற்ச்சியாகும்.

தமிழ்மொழி,  தமிழ் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை கொண்ட சைவ ஆலயங்களில் எதற்காக எம்மதம் சம்மதம் என்று கூறிக் கொண்டு தமிழுடன் தொடர்பற்ற மத அடையாளங்களை ஆலயவால்களில் தொங்கவிடுவதற்கு காரணம் இவர்களை இயக்குவது கிறிஸ்தவ மிசனறிகள் ஆகும். சைவ ஆலயங்களுக்கு வருகின்ற மக்களுக்கு சிலுவை அடையாளத்தை அறிமுகப்படுத்தி மதமாற்றம் செய்கின்ற முயற்ச்சியாகும்.

புலம் பெயர் தேசத்தில் சில ஆலயங்களில் சிலுவைகளை ஆலயவாசல்களில் தொங்கவிட்டு அறிமுகப்படுத்தி  தமிழர்களை படிப்படியாக சிலுவை வழிபாட்டிற்கு அழைத்து சென்று   தமிழ் இன அழிப்பு செய்கின்ற நிலையங்களாகவும்   வியாபார நோக்கமா  கொண்டு தொழில்படுகின்ற  இந்த ஆலயங்கள் கிறிஸ்த வாசல்களில் எம்மதம் சம்மதம் என்ற வாக்கியத்துடன் சிவனின் படத்தை அவர்களை கொண்டு வைப்பிப்பாா்களா?


புலம் பெயர் தேசத்தில்  சைவக் குடிகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணம் தாயகத்தில் தமிழ்போற்றிய தமிழர்களின் இறைவனையும், தெய்வங்களையும், சைவத் தமிழர்களையும் சாத்தான்கள் என்றும்  கூறி தமிழ் இன அழிப்பு செய்கின்ற கிறிஸ்த நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றது.

சைவ ஆலயங்கள் இதனை மறுப்பாா்களானால் தாங்கள் உதவிகள் செய்கின்ற நிறுவனங்கள் உதவிகள் பெறுகின்ற மக்கள் அனைவரையும் படங்களுடன் வெளியிடுவாா்கள் ஆனால் தமிழர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள முடியும்.


புலம் பெயர் தேசத்தில்  சைவக் குடிகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தைக் கொண்டு இவர்கள் புதிதாக எந்தவொரு சைவக் கிராமத்தையும் உருவாக்கவில்லை. அதுமட்டுமன்றி இருக்கின்ற சைவக்கிராமங்களை கிறிஸ்தவ கிராமங்களாக மாற்றுகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கே உதவி செய்கின்றாா்கள்.


சிவன் அருளிய தமிழையும் சைவ வாழ்வியல் நெறிகளையும் உமை உமையொருபாகனின் கலாசசார பண்பாடுகளையும், சிவபூமி தேசத்தின் சிவஅடையாளங்களை அழிக்க நினைப்பவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும் உதவிகள் செய்பவர்களும்,  உதவி செய்ய துடிப்பவர்களும்  அவர்களது ஆண்மாவும் உடல்கலும் சிவகுற்றம் புரிந்தவர்களாகவே சைவநெறிகள் கூறுகின்றன. சிவனின் கண்ணுக்கு  சிவனின் பாா்வையில் சிவ குற்றமாகவே தெரிவர்.


சிவகுற்றம் புரிந்தவர்கள் இறந்த பிற்பாடு அவர்களது உடல்களுக்கும் ஆன்ம சாந்திக்கும் சைவநெறி முறைப்படி   எல்லாவிதமான சைவகிாியைகள் செய்தும் திருவாசகம் ஓதியும்  கிாியைகள் செய்தாலும், சிவகுற்றம் காரணமாக என்றுமே ஆண்மா மோட்சம்  அடையமாட்டாது ஆண்மா கர்ம வினைபயனை கவ்விக் கொண்டு பேய்களாகவே அலைவாா்கள் என்பது தமிழர்களின் நெறியியல் கூறுகின்றது.


 சிவசொத்தை தவாறான முறையில் பாவிக்கப்படுவதால் குலநாசத்தை  உருவாக்கும்  இதனை நீங்கள் உங்கள் கண்முன்னே கண்டது 

சைவக் குடிகளின் பணத்தை ஆலயங்கள் தவறான முறையில் பயன்படுத்தியவர்களின் சந்ததிகள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை  இதனை நீங்கள் உங்கள் கண்முன்னே கண்டது. 



Tuesday, 8 September 2020

ஆலய கோபுரங்கள்.









போலி தமிழ் பெயர்களுடன்24 மணி நேரமும் 100 மேற்பட்ட ஒலி ஒளி பரப்புகள் சேவைகளுடன் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழிக்கும் நோக்குடன் சீரியல் எனும் சீரழிவு நிகழ்சிகளை நடாத்தும் கிறிஸ்த நிறுவனங்கள் தமிழர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் என்ன?

1).அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது?
2).அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது?
3).மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது?
4).மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது?
5).பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு செய்வது?
6).எந்த தவறை எப்படி மறைப்பது?
7).அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது?
8).மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது?
9).கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது?
10).மனைவியை எப்படி அடிமை படுத்துவது?
11). எப்படி பழிக்குபழி வாங்கலாம்?
12)  கொலை, கொள்ளை எப்படி செய்வது ? செய்த பின் எப்படி மறைப்பது ?
13).ஆபாசமாக பேசுவது எப்படி?
14), அடுத்தவன் மணைவியை எப்படி தள்ளிக்கொண்டு போவது ?
15)அடுத்தவன் மணைவியுடன் கள்ள காதல் ,விபச்சாரம்,எப்படி செய்வது ?
16)  ஏமாற்றம், அபகரிப்பு, ஆள் கடத்தல்,வன்முறை, வஞ்சகம்,அநியாயம்,
           அக்கிரமம்,பொய், திருட்டுஎப்படி செய்வது ?
              செய்த பின்  எப்படி  மறைப்பது  ?
17)  தமிழ் இன அடையாளத்தை அழிக்கும் நோக்குடன் தமிழ் பெயர்களை      மறைத்து அன்னிய மத பெயர்களை அறிமுகபடுத்தி தமிழ் இன அழிப்பு செய்தல்.

24 மணி நேரமும் 100 மேற்பட்ட ஒலிஒளி பரப்புகள் சேவைகள் தமிழ்தேசிய அழிப்பிற்காக கிறிஸ்தவ நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்றது.இந்த சீரியலுக்கு மதசாா்பின்மை வாதிகளின் குடும்ப பெண்கள் அடிமையாக சீரழிந்து கொண்டு இருக்கின்றாா்கள்.சீரியல் என்னும் தொடர் வகுப்பில் பல பாடங்கள் மிகவும் அழகாகவும், ஆழ்ந்த விளக்கத்துடனும் செய்து கொடுக்கின்றாா்கள்.

மதசாா்பின்மை வாதிகளின் குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு 70 % காரணம் இந்த சீரியல்கள்தான்!நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும்தான் ஒரு சிறந்த சமூகத்திற்கான அடையாளம். தீமைகளையும்,பாவங்களையும் ரசிப்புக்குரியவையாக நாம் பார்ப்பது அழிவுக்கே வழி வகுக்கும். சீரியல் என்பது தீமைகளின் "சிற்றேடு" எனவே சீரியல் பார்ப்பதை விட்டும் நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்வோம்.

கிறிஸ்தவ நிறுவனங்கள் போலித் தமிழ் பெயர்களில் தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சீரழிக்கும் சீரியல் எனும் சீரழிவு நிகழ்சிகளை நடாத்துகின்றாா்கள்.

தமிழ் மக்களுக்கும் பெளத்த மக்களுக்கும் இடையில் முரன் பாடுகளை உருவாக்கியவர்கள் யாா்?

தமிழ் சிங்களம் ஆகிய மொழியால் வேறுபட்டு சமயத்தால் ஒன்றுபட்டு தமிழ் போற்றிய பெளத்த காப்பியங்களை ஏற்றுக் கொணட பெளத்த மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை ஏற்படுத்தியவர்கள் கிறிஸ்தவ சிங்கள் தலைவர்களும், கிறிஸ்தவ தமிழ் தலைவர்ளும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 

 கிறிஸ்தவ சிங்கள தலைவர்கள்.
டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க, டட்லி செல்ட்டன் சேனாநாயக்க ,சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா--சிறிமாவோ பண்டாரநாயக்கா, பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) போன்றவர்கள்.

கிறிஸ்தவ தமிழ் தலைவர்கள்.
 தமிழரசுக்கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு (Bishop தனிநாயகம் அடிகள்.

அன்ரன் பாலசிங்கம்
தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் கொலைக்காரர்கள், கொள்ளைக் காரர்கள் என்று அடையாளப்படுத்தி அழிப்பித்தவர்.ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்றவர்களை அழிப்பிக்காமல் பாதுகாத்துக் கொண்டார்.  ஜனநாயக முறைமையில் செயல்பட்ட சைவக் குடித் தலைவர்களையும், பெளத்த தலைவர்களையும் அழிப்பித்தாா்.


வணபிதா சிங்கராயர் சின்னராசா ,வணபிதா. க. ஜேம்ஸ் சிங்கராயர் அடிகளார் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் உலக தமிழர் பேரவை அமைப்பை உருவாக்கி அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மதத்தை முன்னிலை படுத்தி கொண்டு ஒரு நிலைப் பாட்டை நோக்கி நகருகின்றார். வணபிதா மேரி பஸ்ரியான் - வணபிதா ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட்--வணபிதா எஸ். செல்வராசா வணபிதா திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண்--வணபிதா பாக்கியரஞ்சித் வணபிதா சேவியர் கருணாரத்தினம் --வணபிதா பிரான்சிஸ் யோசப் போன்ற மேலும்  பல கிறிஸ்தவ மிசனறிகள்   தமிழ் மக்களுக்கும் பெளத்த மக்களுக்கும் இடையில் முரன் பாடுகளை உருவாக்கியவர்கள். 

Sunday, 6 September 2020

விஞ்ஞானம் வியக்கும் தமிழ் வேதநெறி

ஆய கலைகள் அறுபத்தினான்கு, அதில் சோதிட சாத்திரம் (வான சாத்திரம்), கணிதம்,சித்த மருத்துவம் என்பன மணிகளாய் பூத்து வேதநெறியை அழகுபடுத்துகின்றன என்றால் மிகையாகாது.

 மெஞ்ஞானம் என்பது மூலமூர்த்தியாகவும் ஏனைய மருத்துவம்,கணித விஞ்ஞானம்,வான சாத்திரம்,அரசியல் என்ற ஏனையவை பிரகார மூர்த்திகளாகவும் கொண்ட மேன்மைகொள் நெறியே தமிழ்தேசியத்தின் வேதநெறி. 

இதைத்தான் நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் என்றும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க என்றும் திருமுறைகள் எடுத்தியம்புகின்றன.அறம் பொருள் இன்பம் வீடு என்று சைவத் திருக்குறலும் பேசுகின்றது.

வேதநெறியாயினும் சரி அதன் மூலாதாரமான சைவநெறியாயினும் சரி, இந்த அறுபத்தி நான்கு கலைகளையும் உலகுக்குத் தந்த பெருமையை உடையது எனலாம். அன்றைய முனிவர்கள் (ஏன் இன்றும் தவத்தினுள் ஆழ்ந்தும் பரதேசிகள் என்ற திருப்பெயர்களோடும் உலாவருகின்றனர்) விஞ்ஞானிகள் என்றால் அது பொருந்தாப் பேச்சு அன்று.

சித்த மருத்துவம், சோதிடம், கணிதம்,இல்லற இன்பவியல் கலை என்று ஏராளமானவற்றுக்கு முன்னால் மேலைதேயம் விழிபிதுங்கி நிற்பது நம்மவர்களில் சிலருக்குப் புரியாது. இதற்கு காரணம் அவர்கள் அன்னியர்களின் அடிமைதன வாழ்வில் மூழ்கி கிடப்பதே ஆகும்.

சித்த மருத்துவத்துக்கு இணையான மருத்துவம் இல்லவே இல்லை என்பேன். மேலைத்தேய மருத்துவம் வெளியோட்டமாய் பார்க்கும்போது ஆகா ஒகோ என்று இருக்கும். ஆனால் அதனுள் மூழ்கினால் பல மருந்துகள் தமிழ்சித்த மருத்துவத்திற்கு பயன்படும் தாவரங்களை அறிந்து அதிலிருந்து உருவாக்கப்பட்டது என்பது மெல்ல மெல்லப் புலப்படும்.

மேலைத்தேய மருத்துவத்தில் உள்ள மருந்துகள் யாவுமே உடலில் டோக்சின்(toxin) எனும் பொருளை உருவாக்கி மிகச் சிறிய அளவேனும் பாதகத்தையேனும் உண்டு பண்ணிவிட்டே செல்லுகின்றன. 

இந்த டோக்சின் பொருட்கள் உடலில் அதிகரிக்க அதிகரிக்க உடலும் இயற்கை நியதிகளுக்கு மாறாக செயற்பட ஆரம்பிக்கின்றது. ஈற்றில் புதிய புதிய நோய்களை ஏற்படுத்துகின்றது. 

இதய மாற்று சிகிச்சை, ஈரல் மாற்று சிகிச்சை,சிறு நீரக மாற்று சிகிச்சை எல்லாம் மேலைத்தேய மருத்துவ மேன்மைகளாக நினைக்கும் மூடரும் உள்ளர். ஆயுர்வேத வாழ்வியலை மேற்கொள்பவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சைகளுக்கு முகம் கொடுக்கும் துர்பாக்கியம் நிகழ்வதில்லை. ஏன் அறுவை சிகிச்சைகள் எல்லாம் ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் உண்டு என்பது மறக்கப்படக்கூடாதவை.

அன்று எல்லாவகையான உணவுகளும் எல்லாக் காலங்களிலும் பெறமுடியாது. குறித்த உணவு குறித்த பருவத்தில்த்தான் விளையும்.அவை நிறைவான முறையில் சமிபாட்டிற்கு உள்ளாகும் வகையில் உணவு சமிபாட்டுத்தொகுதியும் பருவமாற்றத்திற்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துகொள்ளும். 

ஆனால் இன்று உணவுப்புரட்சி என்று எல்லாப் பருவத்திலும் எல்லா உணவும் கிடைக்கும் விந்தையால் உணவு சமிபாட்டுத்தொகுதி ஈற்றில் கெட்டுப்போகின்றது.நோய் வந்து சேருகின்றது. உணவுப்பழக்கமே ஆரோக்கியத்தின் அத்திவாரம் என்பர். ஆதலால்த்தான் சிலசமயங்களில் சித்த மருத்துவத்தில் உணவுக்கட்டுப்பாடு அவசியமாகின்றது.

ஜேர்மனியில் பல்லாயிரம் ஏடுகள் உள்ளன என்று வீரகேசரியில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த நினைவு உண்டு. ஜேர்மன்காரர்கள் வெளிநாட்டவர்கள் எல்லோரும் வந்து இந்தியாவில்  தமிழர்களிடம் கொட்டிக்கிடந்த அறிவு வளங்களை எல்லாம் திரட்டிச் சென்றனர். 

நம்மவர்கள் நாத்தீகம் கதைப்பதிலேயே அறிவை இழந்து தம்மிடம் இருக்கும் வளங்களை மறந்து மேலைதேயத்தை துதிபாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் அன்றும் இருந்தனர். இன்றும் உள்ளனர். என்றும் இருப்பர். திருந்தவே மாட்டார்கள்.

வானத்துக்கோள்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் வேத நெறி சைவ தமிழ் மக்களே என்பது வெள்ளிடைமலை.

அமாவாசை பௌர்ணமிகளில் சிலருக்கு சித்த சுவாதீனம் இல்லாமல் போவது ஏன்?குறித்த நாட்களில் புவியீர்ப்பு மாறுவதால்த்தான் கடல் அலைகளே ஆர்ப்பரிக்கின்றன . பருவ காலங்களே இக்கோள்களின் அசைவின் தாக்கங்களை சுமந்து பூப்பது என்று விஞ்ஞானம் நவில்வதை உணர்க.. எனவே மனித வாழ்க்கையும் நாளும் கோளுடனும் ஒன்றாய் கலந்திருப்பது புலப்படும்.உலகில் பன்னிரண்டு மாதங்களைக் கொண்ட ஆண்டு நடைமுறையைக் கொண்டிருந்தது வேதநெறிப் பண்பாடே.

அமெரிக்க Methodist Church வம்சத்தவர் நன்றி கூறினார். அருளகம்.


சுமந்திரனின் கிறிஸ்தவ சாதிய வெறி .


தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து இலங்கை Methodist Church தலவர் சுமத்திரனை  கிறிஸ்தவ சாதிய   வெறி கொண்ட  கத்தோலிக்க  மதம்  வெளியேற்றியதை எதிா்த்து பழிவாங்கும் நோக்குடன் இலங்கை Methodist Church தலவர் சுமந்திரன்.நேரடியாகவே Methodist Church இன் சாதிய வெறியை வெளிப்படுத்தி Methodist Church தனது மத சாதிய வெறி கொண்டு மயிலிட்டி வடக்கு ரோமன் கத்தோலிக்க பாடலையே மூடுகின்றார்.

கத்தோலிக்க சாதிய வெறி வழிபாட்டிற்குள் Methodist Church இன் வழிபாட்டாளர்கள் சாதிய பாகுபாட்டின் காரணமாக செல்வது இல்லை. அதேபோன்று Methodist Church இன் சாதிய வெறி வழிபாட்டிற்குள் கத்தோலிக்க சாதிய வெறி வழிபாட்டாளர்கள் செல்வது இல்லை.

கொலக்கருவியான சிலைவையில் உயிா்விட்டு ஆவியான அதாவது பேய்யான பின்பு பிணமாக தொங்கியவர் யேசுபாலன்.கொலைக்கருவியையும் பேய்வழிபாட்டையும், பிணவழிபாட்டையும் கொண்ட கிறிஸ்தவ மதத்தில் சாதிய வெறி தலைவிாித்தாடுகின்றது.

Methodist Church இன் இலங்கைபிரிவின் தலைவர் சுமந்திரனின் கிறிஸ்தவ சாதிய சாதியவெறிகாரணமாக கத்தோலிக்க மதம் அழிந்து போகும் நிலமை. காணப்படுகின்றது.

ஆகவே Methodist Church இன் சாதிய வெறிக்குள் அகப்பட்டு கத்தோலிக்க Church இன் சாதிய வெறி விழித்து கொள்வார்களா இல்லை அழிந்து போவார்களா?










Saturday, 5 September 2020

இசைத் தமிழ் அதிசயங்கள்

1).
காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திருக்கிறார்:

“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்
உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு
தகுணிதம் துந்துபி டாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்பன் இடம்திரு வாலங் காடே”

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.
2).
பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:
“ திண்வார்விசித்த முழவோடு ஆகுளி                                                                   நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்                                                           மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு                                                       கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்                                                       இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு                                                            விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ                                                                        நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை                                                               கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி                                                                       நொடிதரு பாணிய பதலையும் பிறவும்                                                                 கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப                                                                   நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)
இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).
3). 
இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:இறையனார் களவியல் உரை: முதுநாரை, முது குருகு. அடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்  அரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம் .யாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்
 4). 
சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய  பல வகை  யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.
 5.)
மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி                                                                பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்                                                                              குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது                                                             படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென                                                            மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)
6).
பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:
ஆறலை கள்வர் படைவிட அருளின்                                                                                       மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)
7). 
புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)
 8).
தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:
தகுட தகுதகு தாதக தந்தத்                                                                                                           திகுட திகுதிகு தீதக தொந்தத்                                                                                                  தடுடு டுடுடுடு டாடக டிங்குட்  டியல் தாளம்                                                                 தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்                                                                                 கரடி தமருகம் வீணைகள் பொங்கத்                                                                                     தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………
என்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
9). 
வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்                                        பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்                                                                      தமர முரசுகள் குடமுழவொடு துடி                                                                                       சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர
என்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன.

 10)  பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.
ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்                                                                                       மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் என்ற வரிகளில்  மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
11) 
கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:
த தை தா தை த                                                                                                                                     தை தா தே தா தை                                                                                                                                 தா தே தை தே தா                                                                                                                                 தை தா தே தா தை                                                                                                                                    த தை தா தை த                                                                                                                       முத்தமிழ் வாழ்க! தமிழ் இசை வாழ்க  !!

தமிழுக்குத்தான் எத்தனை பெயர்கள்?

தெய்வத் தமிழ், செந்தமிழ், முத்தமிழ், கன்னித் தமிழ், தென் தமிழ், தேன் தமிழ், பழந்தமிழ், ஞானத் தமிழ், திருநெறிய தமிழ், அமுதத் தமிழ், அருந்தமிழ், தண்டமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் இசைத் தமிழ், தன்னேரிலாத தமிழ், இயற்றமிழ், தீந்தமிழ், இருந்தமிழ், நாடகத் தமிழ், பசுந்தமிழ், கொழிதமிழ், பாற்றமிழ், சொற்றமிழ், பைந்தமிழ் – இப்படி எத்தனையோ பெயர்களை உடையது நம் தாய்த் தமிழ் சிவன் தந்த தமிழ்.

ஞானத் தமிழ்
கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுடன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவ லோகமதே.
                                                                                                 திருஞானசம்பந்தர் .

பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.

                                                    நம்பியாண்டார் நம்பி .

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

                                                       பூதத்தாழ்வார்,

திருநெறிய தமிழ்
அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

                                                                                                                          முதல் திருமுறை
அருந்தமிழ்
அலைபுனல் ஆவடுதுறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெமிறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்.

                                                                                       சம்பந்தர்

கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது
அறியாது அருந்தமிழ்ப் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ் நின்று

வேண்டு மதுவினி வேண்டுவன விரைந்தே 
                                                                                              பெருந்தேவபாணி.

செந்தமிழ்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

பிறந்த பிறவியிற் பேணியெஞ்செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங்கூடுவரே
முதல் திருமுறை, சம்பந்தர்

செந்தமிழ்த்திறம் வல்லிரோ செங்கண்
அரவம்முன்கையில் ஆடவே
வந்துநிற்கும்இது என்கொலோபலி
மாற்றமாட்டோம் இடகிலோம்
பைந்தண்மாமலர் உந்துசோலைகள்
கந்தம்நாறுபைஞ் ஞீலியீர்
அந்திவானமும் மேனியோசொலும்
ஆரணீய விடங்கரே.

அந்திவானமும் மேனியோ? – (சுந்தரர் தேவாரம்)

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

முத்தமிழும் நான்மறையும் ஆனான் (அப்பர் தேவாரம்)

தென் தமிழ்
தென் தமிழ் நன்னாட்டு தீது தீர் மதுரை

                                                                                     சிலப்பதிகாரம்.
வடதிசை மருங்கின் மன்னர்க்கெல்லாம்
தென் தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி

மண்தலை ஏற்ற வரைக 
                                                   சிலப்பதிகாரம்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்

                                          பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்


தண்டமிழ்
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை (மணிமேகலை)

தள்ளாப் பொருள் இயல்பின்
தண் தமிழாய் வந்திலார்
கொள்ளார் இக்குன்று பயன் –(பரிபாடல் 9)

தண்டமிழ் நூற் புலவாணர்க்கோர் அம்மானே –(சுந்தரர்)

குழுவு நுண்தொளை வேயினும் குறிநரம்பு எறிவுற்று
எழுவு தண்தமிழ் யாழினும் இனிய சொற்கிளியே –(கம்ப இரா.அயோத்தி.சித்திர 28)


தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை
                                                                          மாணிக்கவாசகர், திருவாசகம்

தன்னேர் இலாத தமிழ்
ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.
                                            தண்டி அலங்காரம்

பசுந்தமிழ்
கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச்சில இலக்கணவரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ – 
                                                                                              திருவிளையாடல், நாடு.57

முத்தமிழ்
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்து முத்தமிழும் தந்து முற்றுமே
                                                                           கம்பன் 

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை
முத்தமிழும் நான்மறையும் ஆனான்
                                                                                அப்பர் தேவாரம்.

அலகிறந்தனை தலை சிறந்தனை
அருள் சுரந்தனை இருள் துரந்தனை
உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை
ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை
                                                                              காசிக் கலம்பகம் 

சொற்றமிழ்
மற்றுநீ வன்மை பேசி வந்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை; நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார் 
                                                                                          பெரியபுராணம், சேக்கிழார்

தமிழ்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென
வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனாப் பெருமை அகத்தியன்
                                                               பன்னிருபடலம்

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

                                                                   -சுத்தானந்த பாரதியார்

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை         சிறுபாணாற்றுப்படை  

இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் 
                                                                                           பிங்கலந்தை.
இன் தமிழ் இயற்கை இன்பம்
                                                                 சிந்தாமணி 2063

தமிழ் தழிய சாயலவர் 
                                          சிந்தாமணி சுர.32

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.  
                                                                                  திருமூலர் திருமந்திரம்.

கடவுள் தந்த தமிழ்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் 
                                                                              கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41.

சாறு சுவை எனக் கூற நின்று இட்ட
ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே
ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்

கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் 
                                                                                                         பொய்கையார்.

"மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
    வைதாரை யுமங்கு வாழவைப்போன்"
 ...
                                                                    கந்தர் அலங்காரம்-22, அருணகிரிநாதர்.




வடமொழியும் தென்தமிழும் -பகுதி--3.

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை
ஒன்றும் ஆயினை, பலவும் ஆயினை
                                                                     *குமரகுருபரர் அருளிய காசிக் கலம்பகம்*.

செந்தமிழ்க் கலைநிலை சீர்நெறித்திருநெறி
                                                                                         *ஐந்திறம் பாடல் எண்- 845*

ஆடலான் நிலைகலை அருளியல் மூலம் ஆடலான் நெறிக்கலைஐந்தெழுத்தியல்நெறி.
                                                                                      *ஐந்ததிறம் பாடல் எண்-866*

மேலும் இந்த உலகில் தோன்றிய முதல்மொழி தமிழ்மொழி என்பதை திட்டவட்டமாக மயன் முனிவர் தனது ஐந்திற நூலில் கூறுகிறார்.

*தென்றிசை எண்டிசை மூலமென்றோர்ந்தே தென்மொழி பன்மொழி மூலமென்றாய்ந்தே*

*நன்மொழி உயிர்குல முதன்மொழிதமிழென*
                                                                                                 *ஐந்திறம் பாடல் எண் -810*

*இந்த மொழி தோன்றிய இடம் குமரி நாடு என்றும் அந்நாட்டில் கி.மு பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி சங்கம் வைத்து தமிழ்நிலைகளையும், கலைகளையும் ஆக்கம் எய்தினர் என்கிறார் மயன் முனிவர்.* குமரி மாநிலம் என்கின்ற கடல்கொண்ட தென்னாட்டை பின்வருமாறு கூறுகிறார்.

*பைந்தமிழ்க் கலைநிலைப் பரப்பியல் ஓர்ந்தே*
*குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்*
                                                                                  *ஐந்திறம் பாடல் எண் -812*

தமிழும் சிவமும் ஒன்றென்பதை* கீழே காணுங்கள் சித்தர்களின் குரல் நண்பர்களே.

இந்த அண்டமும் பிண்டமும் ஒன்று தான் என பல சித்தர்கள் கூறியுள்ளனர். இந்த அண்டம் பிண்டம் என்பது சிவன் நடத்தும் கலையே ஆகும்.இந்த கலையே எழுத்தாகும். இந்த எழுத்தே தமிழாகும். இந்த தமிழே சிவமாகும்.

*எழுத்ததனின் விவரத்தை விரித்துச்சொல்வேன்*
*அருவுருவாய் நின்றதுவே எழுத்ததாகும்*
*ஆதியந்தம் அண்ட பிண்டமதுவேயாகும்*
*வான்மீகர் சூத்திரம்16ல் பாடல்-1*
*ஆடலான் கலையே அண்டமும்பிண்டமும்*
                                                                                           *ஐந்திறம் பாடல் எண்-814*


*தோனுமடா சிவயோகம் வாசியோகம்*
*தூக்கவென்றால் தமிழதுதான் வேணும் வேணும்*
                                                                                              *தேரையர் பூசா விதி பாடல்-69*

*வாசியோகம் சித்திக்க வேண்டுமானால் தமிழை அறிந்திருக்க வேண்டும். தமிழை அறியாமல் சிவத்தை அறிய முடியாது.ஆக வாசியோகம் பயிற்சி செய்யலாம், ஆனால் வாசி சித்திக்காது. கடைசிவரை பயிற்சி செய்து காலம் கழியுமே அன்றி அவருக்கு வாசி சித்தியாகாது. அவரை அண்டினோர்க்கும் வாசி வராது. அது கடைசி வரை பயிற்சியாக இருந்து முடிந்து விடும். ஆகையால் தமிழின் சூட்சுமம் அறியாமல் பயிற்சி செய்வது என்பது, செய்யும் நபருக்கு முன்பிறவி புண்ணியம் இருந்தால் மட்டுமே வாசி சித்திக்கும் என சொல்லிவிடுதல் சிறப்பே.*

*உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்*
*வழக்கினும் மதிக்கவியினும் மரபின்நாடி,-*
*நிழல் பொலிகணிச்சிமணி நெற்றி உமிழ் செங்கண்*
*தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்.*
 *கம்பராமாயணம்/ஆரணிய காண்டம்/அகத்தியப் படலம் பாடல் எண்-41*

இப்பாடலில் சுடர்க்கடவுள் தந்த தமிழ் என கம்பர் நேரடியாகவே
கம்பராமயணத்தில் சிவன் தமிழ்மொழியை அகத்தியருக்கு தந்தார் என அகத்திய படலத்தில் கூறுகிறார்.

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்
                                                          திருவாசகம் திருஅம்மாணை பாடல் எண்-10

*உலகியல் நிறுத்தும் பொருள்மரபு ஒடுங்க*
*மாறனும் புலவரும் மயங்குறுகாலை*
*முந்துறும் பெருமறை முளைத்தருள்வாக்கால்*
*‘அன்பின் ஐந்தினை என்று அறுபது சூத்திரம்*
*கடல் அமுது எடுத்து கரையில் வைத்துபோல்*
*பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி, மற்றவர்க்குத்*
*தெளிதர கொடுத்த தென்தமிழ்க் கடவுள்’*
                                                                                               *கல்லாடம் 3.ல் எண்10*

இதில் இனிமையான தமிழை அளிக்கும் தென்பாண்டி நாட்டானே என மாணிக்கவாசகர் தனது திருஅம்மாணை பதிகத்தில் சிவபெருமான் தமிழ் அளித்ததை கூறுகிறார். மேலும் சிவனை, தென்னாடுடைய சிவனே போற்றி என போற்றி திரு அகவலில் கூறுவதை கவனிக்கவும்.

மேற்கண்ட பாடலில் புலவர்களும் பாண்டியமன்னனும் அகத்தினை
சார்ந்த இலக்கணத்தில் வியக்கும்படியாக அத்தமிழை திரட்டி நூலாக கொடுத்தவர் தென்னாடு என்கிற குமரிகண்டத்தில் வாழ்ந்த தென்தமிழ் கடவுள் என கூறுகிறார்..

மேலும் மதுரையில் சங்கம் வைத்து தமிழ் ஆராய்ந்தவர் நம் அங்கணார் என்ற சிவன் என்பதை சேக்கிழார் பின்வருமாறு கூறுகிறார்.

*சென்றணைந்து மதுரையினில் திருந்திய நூற் சங்கத்துள்அன்றிருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்*
                                                                                      *பெரியபுராணம்*

சிவமே தமிழ் வடிவம், சிவமே தமிழ்தேசியம். சிவனிடம் இருந்து தமிழை பிரித்து பாா்த்தாலோ அல்லது சிவனிடம் இருந்து தமிழ்தேசியத்தை  பிரித்து பாா்த்தாலோ தமிழர்களாகிய நாம் எமது புணிதமான மணிதனை தெய்வமாக்கும் வாழ்வியல் என்றும் அடையாது முடியாது. என்பதை தமிழர்களின் இருண்டகால வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் தமிழை சிவன் தான் இந்த உலகிற்க்கு தந்தார்  என ஆதாரம் கொடுத்துள்ளேன்.சிவனின் ஆலயங்களை அழித்தால் தமிழ் அழியும். தமிழ்தேசியம் அழியும். தமிழர்கள் அழிவாா்கள். சிவம் அழியும் என்பது முட்டாள்கள் போட்ட கணக்கு.

சிவமே தமிழ் வடிவம். சிவமே தமிழ் கலாச்சார பண்பாட்டு வடிவம்.

தமிழும், தமிழ்போற்றய கலாச்சார பண்பாடுகளும் சிவனுடன் கலந்ததே தமிழ்தேசியம்.  இமயமலை தொடக்கம் இலங்கைவரை தமிழ்தேசியம் போற்றி அடையாளப்படுத்தியது சிவபூமி தமிழர் ஆண்டதேசமாகும். அதுவே சிவபூமி ஆகும்.


வடமொழியும் தென்தமிழும் -பகுதி--1.

அகத்தியர் கடல் கொண்ட குமரி நாட்டில் தோன்றியவர்."அகத்தியர்" என்பது தமிழ்சொல் ஆகும்.வடமலை தாழ்ந்து தென்திசை உயர்ந்த பொழுது  நாவலந்தீவினைச் சமன் செய்வதன் பொருட்டே அகத்தியரைச் சிவபெருமான் இங்கு அனுப்பினார் என்றும் கந்தபுராணம் கூறுகிறது. தமிழ் இலக்கணத்தில் முதன் முதலில் ஐந்திலக் கணங்களையும்  தொகுத்து அகத்தியம் என்னும் நூலைத் தந்தவர்.

தமிழ் சங்கத்திற்கு,முதல் தமிழ் இலக்கண நூலக இருந்தது "அகத்தியம்" என்னும் இலக்கண நூல் ஆகும்.இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்தவர் அகத்தியர்.
 பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். பேரகத்தியத்தில் 12000 சூத்திரங்கள் இருந்தன. இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும்,   சோதிட சாத்திரங்களும்   வழங்குகின்றன.   அகத்தியர் தொடர்பாக தமிழிலும் வடமொழியிலும் வழங்கும் புராணக் கதைகள் பல உள்ளன. 

தமிழ் தந்த முனிவர்     இவர் தமிழுக்குச் செய்த பெருந்தொண்டினைப் பாராட்டும்.

கம்பர் பெருமான். 
‘தமிழ் என்னும் அளப்பரும் சலதி (கடல்) தந்தவன்’ ‘தழல்புரை சுடர்க்கடவுள் (சிவன்) தந்த தமிழ் தந்தான்’ என்று பாராட்டினார். 

 யாப்பருங்கலக் காரிகை, 
‘தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீர் அருவிக் கானார் மலையத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ்’ என்று புகழ்கிறது.


வீரசோழிய ஆசிரியர், 
‘அகத்தியன் புவனிக்கு இயம்பிய தண்டமிழ்’ என்று புகழ்ந்தார்.

"அகத்தியம்" கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச்சொன்னார் அகத்தியர்.

தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.

தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து,சொல்,பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.

தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள உறவு ஆழமானது.  தமிழ் மொழியிலும், சம்ஸ்கிருதமொழியிலும்  உயிர் எழுத்தில் எத்தனை பாடல்கள் துவங்குகின்றன என்று பாருங்கள். அற்புதமான ஒற்றுமை இருப்பதைக் காண்பீர்கள்.

‘’ஔ’’ என்ற எழுத்தில் இரு மொழிகளிலும் பாடலே துவங்காது. அல்லது அபூர்வமாக இருக்கும். யாரும் பழைய காலப் புலவர்களிடம் போய் நீ இந்த எழுத்தில் துவங்கும் பாடல்கள் இவ்வளவுதான் பாட வேண்டும் என்று சொன்னதும் இல்லை. அப்படி இலக்கண விதிகள் எதுவும் இல்லவும் இல்லை. ஆயினும் இரு மொழிகளும் ஒரே பாணியைப் பின்பற்றுவதைக் காணலாம்.

இரு மொழிகளிலும் உயிர் எழுத்துக்களில் துவங்கும் பாடல்கள் ‘மூன்றில் ஒரு பகுதி’ அல்லது ‘நான்கில் ஒரு பகுதி’ இருக்கும். இவ்விரு மொழிகளை மட்டுமே எளிதில் ஒப்பிடும் மாதிரியில் இரு மொழி அரிச்சுவடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இரு மொழி மக்களின் சிந்தனை, செயல்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியனவும் ஒரே மாதிரி உள்ளன. வெகு சில விஷயங்களே மாறுபடும். அத்தகைய மாற்றங்களை உலகில் எல்லா இடங்களிலும் காண முடிகிறது.

கீதையும் குறளும்.

பகவத் கீதையில் அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-9, ஊ-2, க்ரு-1, ஏ-21, ஓ-2 வில் துவங்கும் ஸ்லோகங்கள் =171, மொத்தம் ஸ்லோகங்கள் 700
ஆக நாலில் ஒரு பகுதி உயிர் எழுத்தில் துவங்குபவை

திருக்குறளில் அ-157, ஆ-23, இ-114, ஈ-8, உ-81, ஊ-21, எ-45, ஏ-9, ஐ-4, ஒ-40, ஓ-6 ஔ-0 -வில் துவங்கும் பாடல்கள் = 508, மொத்தம் உள்ள குறள்கள் 1330

ஆக மூன்றில் ஒரு பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதி இருப்பதோடு ஔ – வில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல.

குறில் ஒலிகளில் ( அ, இ, உ, ஒ) அதிகப் பாடல்களும் நெடில் ஒலி எழுத்துக்களில் குறைவான (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ) பாடல்களும் இருப்பதையும் காணலாம். 

இவை எல்லாம் இரு மொழியிலும் இயற்கையாகவே அமைந்துள்ள விஷயங்கள் —- யாரும் போய் கட்டளை இட்டுச் செய்தது அல்ல. மேலும் கவிதை என்பது உள்ளத்தில் எழுந்து பீறிட்டு எழும் உணர்வுகள். அதற்கு யாரும் தடைகளோ விதிகளோ போட முடியாது. ஆக கவிதைகள் கூட இரு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்து ஏறத் தாழ ஒரே விதிகளைப் பின்பற்றுவதைக் காட்டுகின்றன.

மொழிகளுக்குள் சொற்களை இணைப்பதற்கான சந்தி விதிகள் இருக்கின்றன. இவை உலகில் தற்போதைய மொழிகளில் காணப்படாத புதுமை. ஆனால் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டும் உண்டு.

டூத் + பவுடர்( Tooth powder )என்ற இரு சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே இணைத்து டூத் பவுடர் என்று எழுதலாம். ஆனால் தமிழில் பல்+ பொடி= பற்பொடி என்று மாறுவதைக் காணலாம். இது போல சந்தி விதிகளை இன்றும் பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே.

தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இரண்டு அரிய, பெரிய, பழைய மொழிகள் தமிழர்களின் இரண்டு கண்கள் போல தமிழர்களுடனே வாழ்ந்து வருகின்றன.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் போற்றி பாடி உள்ளனரா்.


“சைவசமயம் நமக்கு எல்லாம் தந்துள்ளது சைவ சமயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று பாருங்கள்”
வடமொழியும் தென்தமிழும்  பகுதி--2
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_10.html



Friday, 4 September 2020

சமஸ்கிருதம்

அகத்தியரிடம் இருந்தது 51 தமிழ் அச்சரம் , தொல்காப்பியரிடம் இருந்தது 31 தமிழ் அச்சரம் இடையில் காணாமல் போன  20 தமிழ் அச்சரங்களை கொண்டு உருவாகியதே சமஸ்கிருதம்.

ஏழு சக்கரங்கள்

மனிதனின் சக்திநிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் காணப்படுபவை அல்ல. சூட்சும சரீரத்தில் உள்ளவை. இந்த சக்கரங்கள் பற்றி விரிவாக இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்...

எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ, காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவை தான் சக்கரங்கள்.

மனித உடலில் நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்கள் உள்ளன. அவைதான் மனிதனின் சக்தி நிலைக்கான ஊற்றுக் கண்கள். ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.
சக்திநிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக் கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.
மூலாதாரம்:
உடலின் அடிப்படையான சக்கரம். இது ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருக்கிறது. இந்த சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் உணவு, உறக்கம் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.

சுவாதிஷ்டானம்:
பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது. உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருக்கிற ஈடுபாட்டிற்குக் காரணமானது.

மணிப்பூரகம்:
தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது. உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.

அனாஹதம்:

விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது. இந்த சக்கரத்துக்கென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாஹதத்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.

இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சமநிலையான தன்மை அநாஹதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால்தான், மேல்நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாஹத வடிவம். மேல் நோக்கிய முக்கோணம் அருளியல் வாழ்வுக்கும், கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாஹதத்தில் இருந்து உருவானவைதான்.
விசுக்தி:
தொண்டை குழியில் அமைந்துள்ளது. இது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல். சிவபெருமானுக்கு "விசுகண்டன்" "நீலகண்டன்" என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது, விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல. தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.
ஆக்னா:
புருவ மத்தியில் உள்ளது. இது ஞானம், தெளிவு போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு திகழ முடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தில் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்வார்கள்.
சஹஸ்ரஹாரம்:
உச்சந்தலையில், பிறந்த குழந்தைக்கு மட்டும் தலையில் மென்மையாக இருக்கும் இடத்தில் இருக்கிறது. இந்த சக்கரம், பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது.
இந்த ஏழு சக்கரங்களும், வாழ்வின் ஏழுவிதமான தீவிரத்தன்மைகள், பெரும்பான்மையான மக்கள் மூலதாரத்திற்கும், மணி பூரகத்திற்கும் நடுவில் சக்திநிலை தூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாஹதம் வரையில் அந்த ஆற்றல் தூண்டப்படுகிறது.
வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று பாதை எதுவுமில்லை. ஒரு மையத்திலிருந்து மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே. அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும், துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காததாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர்.
ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தாண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும், அர்ப்பணிப்புணர்வும் தேவை.
நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ரஹாரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.
கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல்திறக்கும். இதையே திருமூலர்,மூலாதாரத் துவாரத்தையும், கபாலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர்களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.
மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன.
சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள் கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும். மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான் சித்தி எனப்படும்.
மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினி குண்டலினி என்பர். அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள். அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போதுதுரிய குண்டலினி என்பார்கள்.
மேலும் குண்டலினியானது தோற்றம், நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.
யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும்.
அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச்சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான். பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள்.
இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள் என்று சொல்லப்பட்டுள்ளது.
அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார்.
முதல் ஆறு சக்கரங்களையும் யோகா,தியானம், பக்தி, மந்திர உச்சாடனம் போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம், ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை.
ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம். இவையெல்லாம் கூடுமானால் மெல்ல மெல்லத் திறக்கும் ஞானத்தின் பத்தாம் வாசல்.