அகத்தியர் கடல் கொண்ட குமரி நாட்டில் தோன்றியவர்."அகத்தியர்" என்பது தமிழ்சொல் ஆகும்.வடமலை தாழ்ந்து தென்திசை உயர்ந்த பொழுது நாவலந்தீவினைச் சமன் செய்வதன் பொருட்டே அகத்தியரைச் சிவபெருமான் இங்கு அனுப்பினார் என்றும் கந்தபுராணம் கூறுகிறது. தமிழ் இலக்கணத்தில் முதன் முதலில் ஐந்திலக் கணங்களையும் தொகுத்து அகத்தியம் என்னும் நூலைத் தந்தவர்.
தமிழ் சங்கத்திற்கு,முதல் தமிழ் இலக்கண நூலக இருந்தது "அகத்தியம்" என்னும் இலக்கண நூல் ஆகும்.இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்தவர் அகத்தியர்.
பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். பேரகத்தியத்தில் 12000 சூத்திரங்கள் இருந்தன. இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் வழங்குகின்றன. அகத்தியர் தொடர்பாக தமிழிலும் வடமொழியிலும் வழங்கும் புராணக் கதைகள் பல உள்ளன.
தமிழ் தந்த முனிவர் இவர் தமிழுக்குச் செய்த பெருந்தொண்டினைப் பாராட்டும்.
கம்பர் பெருமான்.
‘தமிழ் என்னும் அளப்பரும் சலதி (கடல்) தந்தவன்’ ‘தழல்புரை சுடர்க்கடவுள் (சிவன்) தந்த தமிழ் தந்தான்’ என்று பாராட்டினார்.
யாப்பருங்கலக் காரிகை,
‘தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீர் அருவிக் கானார் மலையத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ்’ என்று புகழ்கிறது.
வீரசோழிய ஆசிரியர்,
‘அகத்தியன் புவனிக்கு இயம்பிய தண்டமிழ்’ என்று புகழ்ந்தார்.
"அகத்தியம்" கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச்சொன்னார் அகத்தியர்.
தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.
தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து,சொல்,பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.
தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள உறவு ஆழமானது. தமிழ் மொழியிலும், சம்ஸ்கிருதமொழியிலும் உயிர் எழுத்தில் எத்தனை பாடல்கள் துவங்குகின்றன என்று பாருங்கள். அற்புதமான ஒற்றுமை இருப்பதைக் காண்பீர்கள்.
‘’ஔ’’ என்ற எழுத்தில் இரு மொழிகளிலும் பாடலே துவங்காது. அல்லது அபூர்வமாக இருக்கும். யாரும் பழைய காலப் புலவர்களிடம் போய் நீ இந்த எழுத்தில் துவங்கும் பாடல்கள் இவ்வளவுதான் பாட வேண்டும் என்று சொன்னதும் இல்லை. அப்படி இலக்கண விதிகள் எதுவும் இல்லவும் இல்லை. ஆயினும் இரு மொழிகளும் ஒரே பாணியைப் பின்பற்றுவதைக் காணலாம்.
இரு மொழிகளிலும் உயிர் எழுத்துக்களில் துவங்கும் பாடல்கள் ‘மூன்றில் ஒரு பகுதி’ அல்லது ‘நான்கில் ஒரு பகுதி’ இருக்கும். இவ்விரு மொழிகளை மட்டுமே எளிதில் ஒப்பிடும் மாதிரியில் இரு மொழி அரிச்சுவடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இரு மொழி மக்களின் சிந்தனை, செயல்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியனவும் ஒரே மாதிரி உள்ளன. வெகு சில விஷயங்களே மாறுபடும். அத்தகைய மாற்றங்களை உலகில் எல்லா இடங்களிலும் காண முடிகிறது.
கீதையும் குறளும்.
பகவத் கீதையில் அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-9, ஊ-2, க்ரு-1, ஏ-21, ஓ-2 வில் துவங்கும் ஸ்லோகங்கள் =171, மொத்தம் ஸ்லோகங்கள் 700
ஆக நாலில் ஒரு பகுதி உயிர் எழுத்தில் துவங்குபவை
திருக்குறளில் அ-157, ஆ-23, இ-114, ஈ-8, உ-81, ஊ-21, எ-45, ஏ-9, ஐ-4, ஒ-40, ஓ-6 ஔ-0 -வில் துவங்கும் பாடல்கள் = 508, மொத்தம் உள்ள குறள்கள் 1330
ஆக மூன்றில் ஒரு பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதி இருப்பதோடு ஔ – வில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல.
குறில் ஒலிகளில் ( அ, இ, உ, ஒ) அதிகப் பாடல்களும் நெடில் ஒலி எழுத்துக்களில் குறைவான (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ) பாடல்களும் இருப்பதையும் காணலாம்.
இவை எல்லாம் இரு மொழியிலும் இயற்கையாகவே அமைந்துள்ள விஷயங்கள் —- யாரும் போய் கட்டளை இட்டுச் செய்தது அல்ல. மேலும் கவிதை என்பது உள்ளத்தில் எழுந்து பீறிட்டு எழும் உணர்வுகள். அதற்கு யாரும் தடைகளோ விதிகளோ போட முடியாது. ஆக கவிதைகள் கூட இரு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்து ஏறத் தாழ ஒரே விதிகளைப் பின்பற்றுவதைக் காட்டுகின்றன.
மொழிகளுக்குள் சொற்களை இணைப்பதற்கான சந்தி விதிகள் இருக்கின்றன. இவை உலகில் தற்போதைய மொழிகளில் காணப்படாத புதுமை. ஆனால் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டும் உண்டு.
டூத் + பவுடர்( Tooth powder )என்ற இரு சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே இணைத்து டூத் பவுடர் என்று எழுதலாம். ஆனால் தமிழில் பல்+ பொடி= பற்பொடி என்று மாறுவதைக் காணலாம். இது போல சந்தி விதிகளை இன்றும் பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே.
தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இரண்டு அரிய, பெரிய, பழைய மொழிகள் தமிழர்களின் இரண்டு கண்கள் போல தமிழர்களுடனே வாழ்ந்து வருகின்றன.
ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் போற்றி பாடி உள்ளனரா்.
“சைவசமயம் நமக்கு எல்லாம் தந்துள்ளது சைவ சமயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று பாருங்கள்”
வடமொழியும் தென்தமிழும் பகுதி--2
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_10.html
No comments:
Post a Comment