Wednesday, 25 March 2020

தமிழர்கள் மத்தியில் பிாிவினை வாதத்தை விதைத்தவர்கள்.


 சுமார்  என்பது வருடங்களுக்கு முன்பு  இலங்கை தீவு முழுவதும் குறிப்பாக சகல அரச உயர் பதவிகளையும் வகித்தவர்கள் தமிழர்கள். அவர்களிடம்  அந்த காலப்பகுதியில் தனித் தமிழ் தேசம் என்று எதாவது பேசினால் அவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை "FOOL MAN" ஏன்என்றால் அன்று அவர்கள் முழு இலங்கையையுமே தமது கல்வியால் ஆக்கிரமித்திருந்தார்கள் . தெற்கில் வாழ்த்த சிங்களவர்கள் தமிழ் அதிகாரிகளை மிகவும் மரியாதையுடன் நடத்தினர்.

ஏன் என்றால் அதிகாரம்மிக்க பதவிகளில் எல்லாம் தமிழர்களே இருந்தார்கள். இதற்கு சிறிது பிற்பட்டகாலத்தில் தான் கண்டிய சிங்களவர்கள் சமஷ்டி ஆட்சி கோரிநின்றனர். அந்தநேரம் இருந்த தமிழ் அறிவுஜீவிகள் இந்த சிங்களவர்கள் படிக்காதவர்கள், அரசியல் அனுபவம் அற்றவர்கள் என்ற கோணத்திலேயே கருத்துக்களை சொன்னார்கள். இந்த சிவபூமி தேசத்திற்கு சமஷ்டி தேவையில்லை , பிாிவினை தேவை இல்லை சைவம் ஆண்ட பூமி என்பது அவர்களின் கருத்தாகவிருந்தது.

இதை ஆழமாக பார்த்தோமானால் இப்படி கூறலாம். அதாவது சமஷ்டி அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தால் சிவபூமி பிளக்கப்பட்டு இருக்கும் , வடக்குகிழக்கு தனிமாநிலமாக பிரிக்கப்பட்டிருந்தால் அன்று நாடுமுழுவதும் அதிகாரமையங்களில் உயர்பதவிகளை அனுபவித்து வந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் வடக்குகிழக்கு என்ற ஒரு குறுகிய பரப்பிற்குள் முடக்கப்பட்டிருப்பார்கள். பலருக்கு வேளை செய்யமுடியாத நிலமைகள்தோன்றியிருக்கும். இதைதவிர்த்துக் கொண்டு முழு இலங்கையிலும் தமது அறிவு புலத்தை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தலாம் என்ற நிலைப்பாட்டினாலேயே அப்போது சமஷ்டி வேண்டாம் என்று முழங்கினாலும் சிவபூமியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே மணதிற்குள் புதைந்து கிடந்தது என்பதே ஆகும்.

அப்படி சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டு சிவபூமியின் தேசிய அடையாளக் கூறுகளை காப்பாற்றலாம் என்று சொன்ன சமூகத்தில் பிரிவினைவாதத்தை விதைத்தவர்கள் யார்?அப்படி பிரிவினைவாதத்தை விதைத்தவர்களின் நோக்கம்என்ன?


https://jaffnaviews.blogspot.com/2020/03/01.html

No comments:

Post a Comment