Monday, 9 March 2020

சுமந்திரன் பாகம்---07

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆடுவதில் கில்லாடி Pastor ஏபிரகாம் சுமந்திரன்.

கொடுக்கப்பட்ட வேலையை மிகவும் சரியான பாதையில் நேர்த்தியாக கொண்டு போகிறார் சுமந்திரன். நேற்றைய தினம் யாழில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர்.சில விடயங்களை தெரியப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் .மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது சில விடயங்கள்.
2009 யுத்த முடிவின் பின்.யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக எதிர்காலத்தில் ஐக்கிய நாடு சபைகளால் நிச்சயம் ஒரு பாதிப்பு வரலாம் என்று உணர்ந்த அரசாங்கங்கள் ஆளுங்கட்சியாக இருக்கட்டும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கட்டும் இரண்டும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி நிரல்.அரசைப் பாதுகாக்கும் திட்டம் அதாவது அரசு எப்படி மாறி மாறி பயணித்தாலும் அதை பாதுகாக்கப்பட வேண்டிய தேவை ஆட்சியிலிருக்கும் அரசுக்கு உரியது.
யுத்தம் முடிவுற்றதும் எதிர்காலத்திற்கான நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்பட்டது. அதில் முதல்கட்டமாக இலக்கு வைக்கப் பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. காரணம் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக அன்று இருந்தார்கள். அக்கட்சியில் அதிகமானோர் இல்லாவிட்டாலும் சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் அரசுக்கு எதிராக. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் உறுப்பினர்களைத் தவிர அன்று வேறு எந்த தமிழ் கட்சி உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக எப்போதும் செயல்பட மாட்டார்கள் என்பதில் அரசு உறுதியாக இருந்தது.
கூட்டமைப்பை உடைப்பது மட்டுமே அரசின் திட்டமாக இருக்கவில்லை அவர்களின் திட்டம் நீண்ட ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டது.அதற்காக ஒரு சகுனி அல்லது நாரதர் இவர்களை விட சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவர் தேவைப்பட்டது அப்படியான சந்தர்ப்பத்தில்தான் சுமத்திரன் உள்ளே இழுத்து வரப்பட்டார் அரசியலுக்கு.குறிப்பாக சொல்வதாக இருந்தால் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை விட மிகவும் கடினமான ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுதான் உள்ளே நுழைந்தார் சுமந்திரன்...
இன்றைய பொழுதில் அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தில் 50 வீதம் வெற்றி கண்டுவிட்டார் நிச்சயமாக உறுதியாக கூறலாம். உடைக்கப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அதாவது அரசுக்கு எதிராக எதிர்காலத்தில் பிரச்சினை உருவாக்க கூடியவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
அடுத்து ஒருவேளை இவர்களும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் போராளிகள் மீது இலக்கு வைக்கப்பட்டது.
காரணம் உரிமைக்காக வியர்வை சிந்தி இரத்தம் சிந்தி போராடியவர்கள் தங்களை அர்ப்பணிக்க துணிந்தவர்கள் நிச்சயம் அரசியலிலும் அப்படி செயற்பட்டு விடுவார்களோ ஆனால் எதிர்பார்த்ததை விட முன்னாள் போராளிகளை இலகுவில் முத்திரை குத்தி விட்டார் நிகழ்ச்சி நிரலின் படி...
தமிழர் உரிமைப் போராட்டத்தை மெல்ல மெல்லமாக ஒரு பயங்கரவாதப் போராட்டமாக கொண்டு செல்வதற்கு முயற்சி செய்கிறார். அதிலும் சரியாக பயணிக்கிறார்.உரிமைகள், போராட்டங்கள், இனம் சார்ந்த சிந்தனையற்ற ஒரு இளையோரை உருவாக்கிவிட்டார். வடக்கு கிழக்கு எங்கும் போதைப்பொருள் கலாச்சார சீரழிவு அரசியல் சிந்தனை தெளிவற்ற முட்டாள் தனமான செயல்களுக்கு குடை பிடிக்கக் கூடிய ஒரு தரப்பை உருவாக்கிவிட்டார். இனத்துக்காக போராடிய இனம் இது என்ற நிலைமையில் கொண்டு வந்துவிட்டார்.
இவரைவிட கூட்டமைப்புக்கு முன்னுக்கு வந்தவர்கள் எல்லாரும் இன்று இவரின் கட்டளைப்படி தான் செயல்படுகிறார்கள். அதாவது சம்பந்தன் இருக்கத் தக்க ஒரு மறைமுக தலைவர். அப்படியென்றால் நிகழ்ச்சி நிரலின் திட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது...
கடந்த காலங்களை நினைவுபடுத்திப் பாருங்கள்.அரசை காப்பதற்காக எப்படியான முயற்சிகளை மேற்கொண்டார் என்று. இனத்தைக் காப்பதற்கு எடுத்த முயற்சிகளை விட அரசை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் அதிகம் இவரின் அரசியல் வாழ்க்கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும்..
ஜெனிவா தீர்மானத்தில் இருந்து துணிவாக அரசு விலகியதற்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் தான் காரணம். இதன் இதன் பின்புலத்தில் சுமத்திரன் இருக்கிறார். காத்திருங்கள் உங்களுக்கு புரியும். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையும் கிள்ளுவது இவருக்கு கைவந்த கலை..
விமர்சன அரசியலை விதைத்து அதன் அறுவடையை சுவைக்க தெரிந்த ஒருவர்.
காலத்துக்கு நேரத்திற்கு ஏற்ப அரசு மீதும் விடுதலைப்புலிகள் மீதும் விமர்சனத்தை வைத்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதில் திறமையான ஒருவர் ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் அந்தத் திறமையும் ஒரு நிகழ்ச்சி நிரல் தான்..
இவர்மீது ஆதாரப்பூர்வமான பதிவுகளை வைத்தாலும் அதையும் உடைத்தெறிந்து எமது இனத்தை அழிப்பதற்கான பல பாகங்களைக் கொண்ட திட்டமிடல்கள் இருக்கின்றன இவரின் கைவசம். அனைத்தையும் உடைத்து எறிந்தாள் மட்டுமே எமது இனம் காக்கப்படும்..
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-3.html

No comments:

Post a Comment