Friday, 27 March 2020

Bishop எஸ். ஜே. இமானுவெல்பாகம்--02


ஒட்டு மொத்த தமிழர்களையும் "Bishop எஸ். ஜே. இமானுவெல் " சிலுவையில் அறைகின்றார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக அருட்தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டதனைத் தொடர்ந்து அவர் 1997ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1997ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் இருந்து  மதகுரு பேசிய வார்த்தைகள் , பாதர் இமானுவேல் அடிகளார் அமெரிக்காவில் 01.11.2003 அன்று உரையாற்றும்போது “அநீதியான முறையில் நான் அடக்கப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டால் எந்த ஆயுதத்தையும் பாவித்து சண்டையிடும் உரிமை எனக்கு உண்டு” என்று கூறினார்."

 பாதர் இமானுவேல் அடிகளார் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களுக்கு 17.04.2000 அன்று ஆங்கிலத்தில் கடிதம் எழுதினார் அதில்  "தமிழ் மக்களுக்கு நீதி கிடைகக் துணிச்சலுடனும் முதுகெலும்புடனும் நீங்கள் செயற்பட வேண்டும் இல்லையேல் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள்’ என தமிழ்த்தேசியக் கூட்மைப்புக்கு மதகுரு விடுத்த எச்சரிக்கை. "

‘ உண்மை எங்கள் விடுதலைக்கு வழி வகுக்கும்’ என்று தான் ஆங்கிலத்தில் எழுதிய நூல் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அனுப்பிவைத்தார்."இவரின் ஆங்கில எழுத்தாற்றலை அறிந்து கொண்ட தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் கைமணிக்கூடு ஒன்றை  அன்பளிப்பாக  கொடுத்தாா் இப்பவும்  அந்தக் மணிக்கூடு பாதரின் கையில் டிக் டிக் என ஒலித்துக் கொண்டே இருக்கிறது.அந்த மணிக் கூடே நீங்கள் படத்தில்  காண்பது ஆகும்..

தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதம் 2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்டபோது என்ன செய்வதென்று தெரியாது தமிழ்  ஈழ விடுதலை புலிகள்  நிராதரவாக நின்ற நேரத்தில் விடுதலை வேட்கையை வென்றெடுப்பதற்காக சர்வதேச தமிழ் ஈழ விடுதலை புலிகளை அழைத்து வந்து 2009ம் ஆண்டு 8ம் திகதி ஆவணி மாதம் பாரிஸ் நகரில்  "Bishop எஸ். ஜே. இமானுவெல் உலகத்தமிழர் பேரவை நிறுவினாா்

.2010ம் ஆண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Robert O’Blake உடன் ஒரு சந்திப்பொன்றை ஏற்படுத்துகின்றனர். இச்சந்திப்பிற்குப் பின் உலகத்தமிழர் பேரவையில் அங்கம் வகித்த அத்தனை தமிழ் ஈழ விடுதலை புலிகளையும் தூக்கி எறியப்பட்டு இவ்வமைப்பு மத குரு கட்டுப்பாட்டில் இன்று இயங்கி வருகின்றது.

பிரபாகரனின் நண்பன் என கூறித் திரிந்த உலக தமிழர் இயக்கத்தின் தலைவர் கிறிஸ்தவ போதகர் இமானுவேல். தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் தலையில் சுமந்த போராட்டத்தை தாம் தோளில் சுமப்பாதாக கூறிதிாிகின்றாா்.

 இந்த கிறிஸ்தவ பாதிரியார் இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்பளிப்பு செய்த கைக்கடிகாரம் வேலை செய்யவில்லை என்றும் கூறித் திரிகிறார்.

கிறிஸ்தவ பாதிரியாரின் இன்னுமொரு வேடிக்கை இருபத்தைந்து வருடங்களாக தமிழர்களுக்காக நீதி கேட்டு ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தான் போராடியதாகவும் ஆனால் தனது கதையை பயங்கரவாதிகள் என்று கூறி செவிமடுப்பதில்லை என்றும் கூறுகின்றார்.

கிறிஸ்தவ பாதிரியார் ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழ் பெண்கள் செல்வதாலேயே அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தூக்கியுள்ளதாக கதையும் விடுகிறார்.

ஐக்கிய நாடுகள் சபை பல நாடுகளின் கூட்டு அரங்கம் என்பதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் கற்றறிந்து கொண்டவரே இவர்.ஆனால் தமிழ் மக்களுக்கு இதை ஒழிப்பதில் ஓர் மர்மம் இருக்கிறது. அதாவது தமிழ் மக்கள் வெளி நாடுகளின் உதவியை பெற்று பிரச்சினையை தீர்ந்து விட்டால் யுத்த அவலம் என்னும் மதமாற்று கருவியை தாங்கள் பாவிக்க முடியாது என்பதற்கே ஆகும்.

 இந்த கிறிஸ்தவ பாதிரியார் இலங்கை அரச தலைவர்களின் நண்பராவார். இலங்கையில் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக கிறிஸ்தவ மதம் இருப்பதால் தமிழ் மக்கள் முடிவின்றி அல்லோல கல்லோலப்படுகிறார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதம் மாறிய சைவ மக்களாக இருந்தாலும் சரி மாறாத தமிழ் மக்களாக இருந்தாலும் சரி இவர்களை ஒதுக்கி ஓரம் கட்டும் காலம் கனிந்து விட்டது.

தமிழ் மக்களின் இறைமை, தமிழர் தாயகத்தின் கடற்பரப்பு, நில எல்லைகளை பாதுகாக்க புறப்பட்டவர்  இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் இடையில் முரன்பாடுகளை ஏற்படுத்தி திாிகின்றார் இதற்கு காரணம் இந்திய இந்து மக்களும் இலங்கை சைவ மக்களும் ஒன்றுபட்டால் கிறிஸ்தவ மேலாதிக்கத்தை நிலை நாட்ட முடியாது என்பதே இவரின் சிந்தனை கோட்பாடாகும்.
அருளகம்


https://jaffnaviews.blogspot.com/


No comments:

Post a Comment