Monday, 9 March 2020

டான் தொலைக்காட்சியில் சுமத்திரன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்

டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சுமந்திரன் (சுமறா வைரசு.)சர்வதேச விசாரணை / போர்க்குற்றம்/ இனப்படுகொலை தொடர்பாக பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் தொடர்பான உண்மை!

1. சுமந்திரன் சொல்லுவது போல சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டதா ?

இல்லை. ஜெனீவா அறிக்கை மிகத் தெளிவாக தாம் செய்திருப்பது ஒரு தரவு சேகரிப்பு மட்டுமே என்பதை பதிவு செய்து இருக்கிறது. குற்றங்கள் நிகழ்ந்துள்ள வகைமுறை பற்றியே எங்களால் ஆராய முடிந்ததென்றும் தனிப்பட்ட ரீதியாக இந்த குற்றங்களுக்கு யார் பொறுப்பு என்பதை தீர்மானிக்கும் பணி நீதிமன்ற குற்றவியல் விசாரணை குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என்று அறிக்கை தெளிவாக சொல்கின்றது. முழுமையான சர்வதேச விசாரணையின் ஓர் பகுதியான தரவு சேகரிப்பு மட்டுமே இது வரை நடந்தது

2.
2015  ஆம் ஆண்டு வெளிவந்த ஜெனீவா அறிக்கையின் பலாபலன்கள் என்ன ?
மிகப் பயங்கரமான மோசமான கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றுள்ளன என்பது அதிகார பூர்வமாக ஐ. நா அங்கம் ஒன்றால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை வெளிக் கொணர்ந்தமையின் மூலம் இக்குற்றங்கள் நடை பெறவில்லை என இனியும் மறுப்பதற்கான சூழல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இக்குற்றங்களுக்கு தண்டனை அளிக்கலாமல் இருப்பது பெரும் அநீதி என்ற கருத்துருவாக்கத்தையும் இந்த அறிக்கை உருவாக்கியுள்ளது. இந்த விசாரணையை உள்ளகப் பொறிமுறை மூலம் செய்ய முடியாது எனவும் தீர்க்கமாக அறிக்கை பதிவு செய்துள்ளது.

3.

இனப்படுகொலை குற்றம் நடைபெறவில்லை என்று அறிக்கை கூறுகிறதா?
இனப்படுகொலை நடந்ததா என்பது தொடர்பில் அறிக்கை மௌனமாக உள்ளது. எனினும் இது தொடர்பில் ஜெனீவா பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஐ. நா மனித உரிமை ஆணையாளர் இந்த முடிவு இது வரை நடந்த விசாரணைகளை வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் விசாரணை இனப்படுகொலை நடைபெற்றது என்ற முடிவை எட்டுவது சாத்தியமற்ற ஒன்றல்ல என்றும் கூறி இருந்தார். இந்த இடத்தில இனப்படுகொலை நடந்தது என்பதற்கான ஆதாரங்களை திரட்டுவதில் தமிழ் சிவில் அமைப்புகள் , புலம் பெயர் அமைப்புகள் கணிசமான அக்கறையை காட்டி இருந்தாலும் தமிழ் மக்களின் ஏற்று கொள்ளப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்க வில்லை .மாறாக இனப்படுகொலைக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள்.

4.

ஜெனீவா அறிக்கையின் குறைபாடு என்ன ?
உள்ளகப் பொறிமுறை மூலம் நம்பகமான குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது சாத்தியமில்லை என்று ஐ. நா அறிக்கை மிகவும் திட்ட வட்டமாக சொல்லி இருந்தாலும் அந்த முடிவுக்கான காரணம் தவறாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்திடம் குற்றவியல் நீதிமன்ற விசாரணையை செய்வதற்கு தேவையான அரசியல் விருப்பு இருக்கின்றது என அறிக்கை சொல்லி இருந்தது . உண்மையில் ரணில் விக்ரமசிங்கே அரசாங்கத்திடம் அந்த விருப்பு ஒருபோதும் இருக்க வில்லை என்பதை சாதாரண தமிழ் மக்கள் கூட சொல்லுவார்கள் . தமிழ் சிவில் சமூக அமைப்புகள் , கஜேந்திரகுமார் தரப்பு என பலரும் நல்லாட்சி அரசாங்கத்திடம் குற்ற விசாரணை செய்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்திடம் அரசியல் விருப்பு இருக்கவில்லை என வாதிட்ட போதும் தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவு செய்யத பிரதிநிதிகள் நல்லாட்சி அரசாங்கத்திடம் குற்ற விசாரணை செய்வதற்கு அரசியல் விருப்பு இருக்கிறது என்பதை ஏற்று கொண்டார்கள். அப்பாவி தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட பல இடங்களில் இதுவும் ஒன்று.

5.

ஐ. நா பாதுகாப்பு சபை மூலம் ஏன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கை விடயத்தை பாரப்படுத்த அறிக்கை பரிந்துரை செய்யவில்லையா?
இல்லை. நல்லாட்சி அரசாங்கம் தான் விசாரணைகளை முன்னெடுப்பேன் என்று தொடர்ந்து கூறி வருகின்றமையை இதற்கு காரணமாக சொன்னார்கள் . நல்லாட்சி அரசாங்கத்திற்கு குற்றவியல் நீதிமன்ற விசாரணை அரசியல் விருப்பு இருக்கின்றது என்பதால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கை விடயத்தை பாரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என சொல்லப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை விடயத்தை ஒப்படைக்க தேவையில்லை என்று ஐ. நா மனித உரிமை ஆணையாளர் முடிவெடுத்தமை தமக்கு வெற்றி என்று பத்திரிகை ஆசிரியர்களின் சந்திப்ப்பு ஒன்றில் தங்களது சாதனை என சொல்லி இருந்தார் ரணில் விக்கிரமசிங்க. இலங்கை அரசாங்கத்திடம் குற்ற விசாரணை செய்வதற்கு அரசியல் விருப்பு இல்லை என்பதை தமிழர் தரப்பில் கூட நிரூபிக்க வில்லை . பாலஸ்தீன விடயத்தில் செய்ததைப் போல நிபுணர் குழுவொன்றை (Committee of Experts) உருவாக்கி அறிக்கையின் சிபாரிசுகள் உள்ளக பொறிமுறை ஊடாக நிறைவேற்றப்படுகின்றனவா என கண்காணிக்கும் கோரிக்கையை கூட எங்கள் தரப்பில் நாங்கள் முன்வைக்கவில்லை

6.

அப்படி என்றால் கலப்பு விசாரணை பற்றி சொல்லப்பட்டது ஏன்?
நல்லாட்சி அரசாங்கத்திற்கு விருப்பம் இருந்தாலும் இலங்கையின் நீதித் துறைக்கும் சட்டத் துறைக்கும் விசாரணை செய்வதற்கு போதிய தகைமை இல்லை என்பதனால் கலப்பு பொறிமுறையை உருவாக்குங்கள் என்ற பரிந்துரையை முன் வைத்ததாக அறிக்கை கூறுகின்றது.

7.

கடந்த பொது தேர்தல் (2015) காலத்தில் சர்வதேச விசாரணை/ போர்க்குற்றம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கே தரப்பும் தமிழரசு கட்சி சுமந்திரன் தரப்பு நிலைப்பாடும் ஒத்திசைவாக இருந்தது என சொல்லப்படுவது உண்மையா ?
ஆம். ஜெனீவா அறிக்கையின் பரிந்துரைகளின் முழுமையான நடைமுறையாக்கலை இரு தரப்பும் ஏற்று கொண்டன . ஆனால் வடக்கிலும் தெற்கிலும் வேறு வேறு மொழி நடைகளில் இதற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டன. வடக்கில் சர்வதேச மேற்பார்வையுடன் (சர்வதேச விசாரணை அல்ல) உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலமே ஜெனீவா அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியம் என சுமந்திரன் தரப்பு பேச , தெற்கில் மகிந்த ராசபக்சே அவர்களை மின்சார கதிரையில் இருந்து தாங்கள் காப்பாற்றி விட்டதாகவும் சர்வதேச விசாரணைக்கு இனி இடம் இல்லை என்றும் உள்ளக பொறிமுறையில் இலங்கை இராணுவம் சுற்றவாளிகள் என நிரூபிப்போம் எனவும் பேசினார்கள். வடக்கில் சர்வதேசத்தை தாங்கள் வளைத்து விட்டதாக சுமந்திரன் தரப்பு பேச தெற்கில் ரணில் /மைத்திரி கூட்டணி சர்வதேசத்தை வென்று விட்டதாக பேசினார்கள்

8.
உள்ளகப் பொறிமுறை ஒன்றை இலங்கையில் உருவாக்குவதற்கு ஐ. நா இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து இரகசியமான முறையில் திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக சனல் 4 நிறுவனம் 28 ஜூலை 2015 அன்று வெளியிட்ட செய்தி உண்மையா ? சுமந்திரன் தரப்புக்கு இந்த விடயங்கள் தெரியுமா ?
ஆம் . மங்கள சமரவீர , ரணில் விக்ரமசிங்கே மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்த விடயங்களை அறிந்து இருந்தார்கள். இதனால் தான் ஜெனீவா அறிக்கையுடன் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்றும் இனி அதை பற்றி பேச வேண்டியது இல்லை எனவும் சுமந்திரன் தரப்பு பிரச்சாரம் செய்ய தொடங்கியது. ரணில் விக்கிரமசிங்கே தெற்கில் மகிந்த ராஜபக்சேவை போர்குற்றத்தில் இருந்து காப்பாற்றியதாக பிரச்சாரம் செய்ய தொடங்கினார். நல்லாட்சி அரசாங்க தரப்பில் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் உள்நாட்டு விசாரணைக்கு ஐ. நாவின் ஆலோசனையையும் உதவியையுமே (advice and assistance) அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் என சொன்னார்.இதை தான் வடக்கில் சுமந்திரன் தரப்பு தாம் வெறுமனே உள்ளகப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய உள்ளக விசாரணையை தான் ஏற்றுக் கொள்வதாக சொன்னது. இதன் மூலம் இரு தரப்பும் உள்நட்டு விசாரணை என்கிற நிகழ்ச்சி நிரலுக்கு வந்தார்கள். ஆனால் இறுதியில் அது கூட நடக்கவில்லை

9.

Yasmin Sooka, (an Expert on the UN Secretary General’s Panel of Experts on Sri Lanka) இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லை என சொன்னதாக சுமந்திரன் சொல்லுவது உண்மையா ?இல்லை . விசாரணை ஒன்று நடைபெறும் போது அவர்கள் இனப்படுகொலை நடந்ததா என்பதை பற்றி ஒரு முழுமையாக விசாரிக்க வேண்டும் என சொன்னார்கள் .

 “I do think that when the inquiry takes place they will need to probe this question because many Tamils have often spoken about the fact that this is a genocide, and that it
has genocidal tendencies—the way in which this war prosecuted . . . . I think all of us in the Panel [of Experts] that were confronted with this question have always raised that there is a real need for a proper investigation when it happens to test this issue [genocide].

https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-5.html

No comments:

Post a Comment