Pastor சுமந்திரன் அவர்கள் தன்னை வாக்களித்து தெரிவு செய்த மக்களை ஏமாற்றி வருகிறார் என்பதை சொல்லுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் அருவருக்க தக்க பொய்களை சொல்லுகிற ஒரு தமிழ் தேசிய அரசியல் வாதியாக சுமந்திரன் இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் எந்த வித தனிநபர் விமர்சனமும் இன்றி முன் வைத்து வந்து இருக்கிறோம். He is aCompulsive liarJust for an Example
இடைக்கால அறிக்கை முன்வைக்க பட்ட காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் நடத்த ஒரு தமிழரசு கட்சி கூட்டத்தில் திரு சுமந்திரன் உரையாற்றினார். இந்த உரையில் இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக சொன்னார் திரு சுமந்திரன் . (இணைப்பு பதிவில் இருக்கிறது ) .சமஸ்டி இலங்கைக்கு பொருந்தாது என சொல்லப்படவில்லை எனவும் சொன்னார் திரு சுமந்திரன்.ஆனால் இடைக்கால அறிக்கையின் பக்கம் 1 இல், இப்படி தான் சொல்லப்படுகிறது
" The classical definition of the English term “unitary state” has undergone change. In the United Kingdom, it is now possible for Northern Ireland and Scotland to move away from the union. Therefore, the English term “Unitary State” will not be appropriate for Sri Lanka.The Sinhala term “aekiya raajyaya” best describes an undivided and indivisible country.
தமிழ் பொருள்கோடல் : ஒற்றையாட்சியின் ஆங்கில பதமான Unitary State என்ற ஆங்கில வார்த்தை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. Unitary State ஆக கருதப்படும் ஐக்கிய இராச்சியத்தில், இருந்து இப்போது வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை விலகிச் செல்லும் வாய்ப்புகள் உள்ளது. .ஆகவே , "Unitary State" என்ற ஆங்கில சொல் இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்காது . இந்த இடத்தில Unitary State என்பது Indivisible Sovereignty ஐ குறிக்காத காரணத்தினால் தான் ஐக்கிய இராச்சியத்தில், இருந்து வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை விலகிச் செல்லும் வாய்ப்புகள் ஏற்பட்டு இருப்பதாக சொல்லுகிறார்கள் .இதனால் Unitary State என்கிற சொல் பலவீனமானது என்கிறார்கள்
.ஆனால் சிங்கள வார்த்தையான “ஏக்கிய ராச்சிய” Undivided ஐ மட்டுமன்றி Indivisible country ஐ குறிக்கும் என வரையறை செய்கிறார்கள் .அதாவது Unitary State என்பதை விட என்பது இறைமை பகிரப்படவில்லை (Indivisible Sovereignty) என சொல்லும் “ஏக்கியா ராஜ்யா” பொருத்தமானது என என அடையாளம் செய்கிறார்கள்
ஒரு மூத்த சட்டத்தரணியாக PASTOR சுமந்திரன் அவர்களுக்கு இந்த பொருள்கோடலை செய்வது கஷ்டமான காரியம் அல்ல. ஆனால் பொய் சொன்னார். யாருக்காக இந்த பொய் ? வாக்களித்த மக்களை இப்படி பொய் சொல்லி ஏமாற்றியது அருவருப்பானது. சொந்த மக்களுக்காக பேச வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே அந்த மக்களை ஏமாற்றுவது கொடூரம் இல்லையா ?
இது பற்றி எல்லாம் கேட்டால் குறைந்த பட்சம் தமிழரசு கட்சியின் எந்த அடிப்பொடியும் பதில் சொல்ல தயாரில்லை.மாகாணசபை உள்ளுராட்சி பதவிகளுக்கும் சலுகைகளும் அலையும் சிலருக்கு திரு சுமந்திரன் சொல்லும் பொய்களை காவி திரிய வேண்டிய தேவை இருக்கலாம்
No comments:
Post a Comment