பிரபாகரன் தமிழ் ஈழத்தை கைவிட்டவர்Pastor ஏபிரகாம் சுமத்திரன்.
பிரபாகரன் ஒரு போதும் தமிழ் ஈழத்தை கைவிட்டதாக சொல்லவில்லை, தமிழ் விடுதலை புலிகள் எப்போ தமிழீழ கொள்கையை கைவிட்டார்கள் என்று சுமந்திரன் திகதி/நேரம்/ ஆண்டு வாரியாக சொல்ல முடியுமா?
சுமந்திரன் அவர்களே பிரபாகரனிடம் எதுவும் நாம் கேட்கவேண்டிய தேவை இருக்கவில்லை...ஏனென்றால் அவர் தமிழருக்காக அரசியல் செய்தார் அவர் ஏதும் செய்தால் அதில் ஏதும் சுயநலம் இருக்காது என்ற நம்பிக்கையில் யாரும் கேட்பதில்லை, நீங்கள் தமிழர்களை வைத்து அரசியல் செய்கிறீர்கள் அதில் சுயநலம் இருக்க வாய்ப்பிருக்கிறது அதனால் , உங்களிடம் கேள்வி கேட்பார்கள்!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கேட்காத கேள்வியை, திரு உருத்திரகுமாரன் ஏன் எம்மிடம் கேட்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.கனடாவில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
விடுதலைப்புலிகள் அரசாங்கத்திடம் பல வருடங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அந்த பேச்சுவார்த்தைகளில், தமிழீழத்தை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று பேச்சு நடத்தவில்லை, எல்லைக் கோட்டை எங்கே வரைய வேண்டும் என்று பேச்சு நடத்தவில்லை மாறாக ஒரு நாட்டுக்குள் எப்படி அதிகாரத்தை பகிர்வது என்றே பேசினார்கள்.
இவ்வாறு இருக்க நாங்களா தமிழீழத்தை கைவிட்டோம்? இந்த நிலையில் “ஒரு நாட்டுக்குள் தீர்வைப்பற்றி பேசுகின்றீர்கள், இதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் திரு உருத்திரகுமார் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டும் அல்லவா என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில் “உள்ளக சுய நிர்ணய அடிப்படையில் ஒரு தீர்வுக்கு தயார்” என்று பிரபாகரன் உரை நிகழ்த்தினார்.அத்துடன், அந்த டிசம்பர் மாதமே போர் நிறுத்தத்தையும் ஒருதலைப் பட்சமாக செய்தார்.
அப்போது யாரும் பிரபாகரனிடம் இந்த கேள்வியை கேட்கவில்லையே. இப்போது மட்டும் ஏன் எங்களிடம் வந்து கேட்கின்றார்கள் எனவும் சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழீழத்தை தற்போது யாரும் கோரவில்லை. இலங்கையில் யாருக்கும் தமிழீழம் விருப்பமில்லை. யாரும் ஒருவரேனும் விரும்ப மாட்டார்கள். இதற்காகவே புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வை முன்வைத்துள்ளோம்.
இந்த அரசியலமைப்பு விடயத்தில் இந்த அரசாங்கம் தவறுமாக இருந்தால், துரோகம் இழைக்குமாக இருந்தால், தனிநாடு சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.நாம் படிப்படியாகத்தான் போக வேண்டும். நாங்கள் தனிநாடு கோரவில்லை. ஆனால் அதிகாரப்பகிர்வை சரியாக செய்யுங்கள். ஒரு சமஸ்டி கட்டமைப்பில் முழுமையான அதிகாரப்பகிர்வுடன் ஒரு ஆட்சியை கேட்கின்றோம் என தெளிவுபடுத்தினார்.மேலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், உருத்திரகுமாரன் கூறுவதும் சர்வதேச அனுசரணையுடன் ஒரு சர்வஜன வாக்கெடுப்பையே. ஆகவே சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதும் சர்வதேச ரீதியான ஒரு செயற்பாடுதான்.ஒரு நாடு தனியாக உருவாகுவதற்கு மற்ற நாடுகள் அதை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும். ஆகவே இதறகு சர்வதேசத்தின் பங்கு முழுவதும் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment