சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது தொடர்பான 70 ஆண்டுகால அனுபவம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது. ஆகவே திரு ரணில் விக்ரமசிங்கே தமிழ் மக்களை ஏமாற்றியது தொடர்பில் தமிழ் சமூகம் ஏமாற்றமடையாது
ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் ஊடகங்களிடமும் அப்பாவி தமிழ் மக்கள் நேர்மையை எதிர்பார்க்கிறார்கள். அதே போல சொந்த மக்களை அரசியல் பிரதிநிதிகள் ஏமாற்றாமல் இருப்பது பலவீனமான சமூகத்தின் ஜனநாயக அரசியலுக்கு மிக அத்தியாவசியமானது.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் நடந்து என்ன ? மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளமன்ற உறுப்பினர்களே சொந்த மக்களை ஏமாற்றிய அவலம் நடந்து முடிந்து இருக்கிறது.
1. இடைக்கால அறிக்கையில் சமஸ்டி இருக்கிறது என வடக்கு மேடைகளில் சொல்ல கிழக்கில் ஒரு படி மேல போய் சமஸ்டி ஏற்கனேவே தரப்பட்டு விட்டது என சொன்னார்கள்
2. இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக பொய் சொல்லி ஏமாற்றினார்கள்
3. அரசமைப்பு பேரவையாக கூடிய பாராளமன்றத்தில் சமஸ்டியின் அடிப்படை பண்பான இறைமை பகிரப்பட்ட தேவை இல்லை என சொன்ன பாராளமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு மேடைகளில் பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில் தீர்வு என பிரச்சாரம் செய்தார்கள்
4. நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சியில் தெற்கின் அரசியல் கட்சிகளுக்கு இடையே பொது இணக்கப்பாடு இருப்பதாக சொன்னார்கள்
5. ஜெனீவா Fact Finding அறிக்கையில் Investigation Report என சொல்லப்பட்டு இருப்பதால் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என சொன்னார்கள்
6.2015 பொது தேர்தல மேடைகளில் சர்வதேச விசாரணை வேண்டும் என முழக்கமிட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் , சம காலத்தில் சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்கும் பொது சர்வதேச மேற்பார்வை வேண்டும் என சொன்னார்கள் ..ஊடகங்களிடம் சர்வதேச விசாரணையும் சர்வதேச மேற்பார்வையும் ஒன்று என வியாக்கியானம் செய்தார்கள்
7. மாமனிதர் ரவிராஜ் வழக்கு , குமாரபுரம் கொலை வழக்கு , திருகோணமலை 5 மாணவர் படுகொலை வழக்கு போன்ற எண்ணற்ற வழக்குகளில் தமிழர்கள் ஏமாற்றப்பட எந்த கூச்சமும் இன்றி நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையில் அரசாங்க தலையீடு இல்லை என சொன்னார்கள்
8. மணலாறு, வவுனியா , மட்டக்களப்பு , திருகோணமலை என பல மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்களும் பௌத்த மயமாக்கலும் நடக்க ஒரு சில பாராளமன்ற உறுப்பினர்கள் மக்களோடு நின்று போராட ஒரு சில பாராளமன்ற உறுப்பினர்கள் சிங்கள அரசாங்க பக்கம் நின்று எந்த குடியேற்றங்களும் நடக்க வில்லை என வாதிட்டார்கள்
9. அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என அரசாங்கம் வாதிட எங்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டு விட்டதாக சொன்னார்கள்.எல்லாவற்றுக்கு ம் மேலாக கைதிகளை விடுவிக்க தங்களிடம் திறப்பு இல்லை என எகத்தாளம் பேசினார்கள்
10. தொல்லியல் திணைக்களம் தொடக்கம் வன வளத் திணைக்களம் வரை போட்டு போட்டு காணிகளை அபகரிக்க அமைதியாக இருந்த பாராளமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து நின்று கொண்டு 80 % ஆன காணிகள் விடுவிக்கப்பட்டதாக சொன்னார்கள்
11. பிராந்தியங்களின் ஒன்றியம் என்கிற சந்திரிகா அரசாங்கத்தின் தீர்வு திட்டத்தில் சமஸ்டி இருந்ததாக சொன்னார்கள்
12. கலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் ஐ நா மனித உரிமை பேரவையில் நிராகரித்து விட்ட பின்னரும் அரசாங்கத்தோடு இணைந்து கால நீடிப்புக்கு துணை போனார்கள் .அதே சமயம் வடக்கு கிழக்கு மேடைகளில் கால நீடிப்பு அல்ல ஐ நா மேற்பார்வை என கதை சொன்னார்கள்
13. OMP யினால் கண்டு பிடிக்கப்படும் எந்தவொரு விடயமும் குற்றவியல் அல்லது சிவில் சட்ட மீறல் சம்பந்தமான குற்றத்திற்கு வழிவகுக்காது என தெரிந்து இருந்தும் கட்சி ஆதரவாளர்களை வைத்து கொண்டு என வடக்கு கிழக்கு போராட்டங்களில் . OMP வேண்டும் என கோசம் எழுப்பி பாதிக்கப்பட்ட மக்களை அவமதித்தார்கள்
14. திரு சம்பந்தன் சுமந்திரன் அமைச்சர்களுக்கு நிகராக சுதந்திர தினத்தில் பங்குபெற்றி தமிழ் மக்களுக்கு தேசிய உணர்வு இருக்க வேண்டும் என பாடம் நடத்த மற்றைய பாராளமன்ற சகாக்கள் வடக்கு கிழக்கில் துக்க தினம் அனுஷ்டித்து நடனமாடினார்
15. நல்லாட்சி அரசாங்கம் அம்மாச்சி உணவகத்திற்கு கூட பெயர் சூட்ட விடாமல் அடாவடி செய்ய அது பற்றி எதுவும் பேசாது சொந்த கட்சியின் மாகாண நிருவாகத்தை மாகாண சபையின் சில உறுப்பினர்களை ஏவி சீரழித்தார்கள்
மேற்குறித்த பொய்களை பேசியவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது உண்மையை பேச முன் வர வேண்டும்
தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களே சொந்த மக்களை ஏமாற்ற சொந்த நலன் நின்று அளவு கடந்து பொய்களை பேசுவது தமிழ் தேசிய அரசியலை வியாபார நிறுவனமாக்கி விடும்
ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் ஊடகங்களிடமும் அப்பாவி தமிழ் மக்கள் நேர்மையை எதிர்பார்க்கிறார்கள். அதே போல சொந்த மக்களை அரசியல் பிரதிநிதிகள் ஏமாற்றாமல் இருப்பது பலவீனமான சமூகத்தின் ஜனநாயக அரசியலுக்கு மிக அத்தியாவசியமானது.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் நடந்து என்ன ? மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளமன்ற உறுப்பினர்களே சொந்த மக்களை ஏமாற்றிய அவலம் நடந்து முடிந்து இருக்கிறது.
1. இடைக்கால அறிக்கையில் சமஸ்டி இருக்கிறது என வடக்கு மேடைகளில் சொல்ல கிழக்கில் ஒரு படி மேல போய் சமஸ்டி ஏற்கனேவே தரப்பட்டு விட்டது என சொன்னார்கள்
2. இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக பொய் சொல்லி ஏமாற்றினார்கள்
3. அரசமைப்பு பேரவையாக கூடிய பாராளமன்றத்தில் சமஸ்டியின் அடிப்படை பண்பான இறைமை பகிரப்பட்ட தேவை இல்லை என சொன்ன பாராளமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு மேடைகளில் பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில் தீர்வு என பிரச்சாரம் செய்தார்கள்
4. நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சியில் தெற்கின் அரசியல் கட்சிகளுக்கு இடையே பொது இணக்கப்பாடு இருப்பதாக சொன்னார்கள்
5. ஜெனீவா Fact Finding அறிக்கையில் Investigation Report என சொல்லப்பட்டு இருப்பதால் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என சொன்னார்கள்
6.2015 பொது தேர்தல மேடைகளில் சர்வதேச விசாரணை வேண்டும் என முழக்கமிட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் , சம காலத்தில் சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்கும் பொது சர்வதேச மேற்பார்வை வேண்டும் என சொன்னார்கள் ..ஊடகங்களிடம் சர்வதேச விசாரணையும் சர்வதேச மேற்பார்வையும் ஒன்று என வியாக்கியானம் செய்தார்கள்
7. மாமனிதர் ரவிராஜ் வழக்கு , குமாரபுரம் கொலை வழக்கு , திருகோணமலை 5 மாணவர் படுகொலை வழக்கு போன்ற எண்ணற்ற வழக்குகளில் தமிழர்கள் ஏமாற்றப்பட எந்த கூச்சமும் இன்றி நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையில் அரசாங்க தலையீடு இல்லை என சொன்னார்கள்
8. மணலாறு, வவுனியா , மட்டக்களப்பு , திருகோணமலை என பல மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்களும் பௌத்த மயமாக்கலும் நடக்க ஒரு சில பாராளமன்ற உறுப்பினர்கள் மக்களோடு நின்று போராட ஒரு சில பாராளமன்ற உறுப்பினர்கள் சிங்கள அரசாங்க பக்கம் நின்று எந்த குடியேற்றங்களும் நடக்க வில்லை என வாதிட்டார்கள்
9. அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என அரசாங்கம் வாதிட எங்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டு விட்டதாக சொன்னார்கள்.எல்லாவற்றுக்கு
10. தொல்லியல் திணைக்களம் தொடக்கம் வன வளத் திணைக்களம் வரை போட்டு போட்டு காணிகளை அபகரிக்க அமைதியாக இருந்த பாராளமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து நின்று கொண்டு 80 % ஆன காணிகள் விடுவிக்கப்பட்டதாக சொன்னார்கள்
11. பிராந்தியங்களின் ஒன்றியம் என்கிற சந்திரிகா அரசாங்கத்தின் தீர்வு திட்டத்தில் சமஸ்டி இருந்ததாக சொன்னார்கள்
12. கலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் ஐ நா மனித உரிமை பேரவையில் நிராகரித்து விட்ட பின்னரும் அரசாங்கத்தோடு இணைந்து கால நீடிப்புக்கு துணை போனார்கள் .அதே சமயம் வடக்கு கிழக்கு மேடைகளில் கால நீடிப்பு அல்ல ஐ நா மேற்பார்வை என கதை சொன்னார்கள்
13. OMP யினால் கண்டு பிடிக்கப்படும் எந்தவொரு விடயமும் குற்றவியல் அல்லது சிவில் சட்ட மீறல் சம்பந்தமான குற்றத்திற்கு வழிவகுக்காது என தெரிந்து இருந்தும் கட்சி ஆதரவாளர்களை வைத்து கொண்டு என வடக்கு கிழக்கு போராட்டங்களில் . OMP வேண்டும் என கோசம் எழுப்பி பாதிக்கப்பட்ட மக்களை அவமதித்தார்கள்
14. திரு சம்பந்தன் சுமந்திரன் அமைச்சர்களுக்கு நிகராக சுதந்திர தினத்தில் பங்குபெற்றி தமிழ் மக்களுக்கு தேசிய உணர்வு இருக்க வேண்டும் என பாடம் நடத்த மற்றைய பாராளமன்ற சகாக்கள் வடக்கு கிழக்கில் துக்க தினம் அனுஷ்டித்து நடனமாடினார்
15. நல்லாட்சி அரசாங்கம் அம்மாச்சி உணவகத்திற்கு கூட பெயர் சூட்ட விடாமல் அடாவடி செய்ய அது பற்றி எதுவும் பேசாது சொந்த கட்சியின் மாகாண நிருவாகத்தை மாகாண சபையின் சில உறுப்பினர்களை ஏவி சீரழித்தார்கள்
மேற்குறித்த பொய்களை பேசியவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது உண்மையை பேச முன் வர வேண்டும்
தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களே சொந்த மக்களை ஏமாற்ற சொந்த நலன் நின்று அளவு கடந்து பொய்களை பேசுவது தமிழ் தேசிய அரசியலை வியாபார நிறுவனமாக்கி விடும்
சுன்னாகத்தில் சுத்துமாத்து சுமந்திரனும் வித்தியாதரனும் கதைத்த முழுமையான வீடியோ இங்கு தரப்பட்டுள்ளது
No comments:
Post a Comment