Wednesday, 25 March 2020

பிாிவினை வாதத்தை விதைத்தவர்கள் யாா் ? பகுதி--02"

போர்ததுக்கீசர் , ஒலலாந்தர்  தொடர்ந்து ஆங்கிலேயர்களிடம்  இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon) ஆங்கிலேயர்கள்தான் அதிகாரத்தி இருந்தவர்கள் இதன் காரணமாக இலங்கையின் பிரதமர்கள் , ஜனாதிபதிகளும் எல்லோரும் கிறிஸ்தர்களாகவே இருந்தாா்கள்,அதே போன்று தமிழர்களின் சைவத் தலைமைகளை அழித்து கிறிஸ்தவம் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டதும் வரலாற்று உண்மை.

பிறப்பாள் கிறிஸ்தவ சிங்களத் தலைவர்கள் அரசியலின் ஊடாக கிறிஸ்தவத்தை நிலை நிறுத்துவதற்காக சிங்கள பெளத்தம் என்ற முகமூடியின் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக பலபயங்கரவாத சட்டங்களை இய்ற்றி ஏவி விட்டதை வரலாற்று பாடங்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள முடியும் .இலங்கையில் கிறிஸ்தவ பேரினவாதத்தை பெளத்த பேரினவாதமாக வழி நடாத்திய சிங்கள கிறிஸ்தவ தலைவர்களான டொன் ஸ்டீபன் சேனாநாயக்க    (டிஎஸ்.டி. எஸ்.) சேனநாயக்கா    டட்லி செல்ட்டன் சேனாநாயக்க     (டிஎஸ்.டி. எஸ். சேனநாயக்காவின் மகன்)    சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை       ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா , போன்றவர்களாகும் .பேர்சி மஹிந்த ராஜபக்ஷ (மதவெறியன் அல்ல என்பதனை பிறிதொரு சந்தர்பத்தில் விளக்கம் தரப்படும் ).

மூத்த சைவத் தமிழ்த் தலைவரான  ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களாள் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழ் காங்கிரஸ் சைவத்தமிழனின் தலைமையில் செயல்பட்ட காரணத்தால்  சைவத்தமிழனின்  இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் சதிக்காக கிறிஸ்தவ மிசனறிகள் காத்திருந்தாா்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோப்பி, தேயிலை, இறப்பர் போன்ற பயிர் செய்கைகளுக்காக 1844ஆம் ஆண்டு காலப் பகுதியில் அழைத்து வரப்பட்டவர்களே (சேரநாட்டு தமிழர்கள் ) இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள். இவ்வாறு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் மலையகப் பகுதிகளில் லயின் குடியிருப்புக்களில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் 150 வருடங்களாக இலங்கையில் தேயிலை, இறப்பர் போன்ற தொழில்களில் ஈடுபட்ட இவர்களினால், இலங்கையின் ஏற்றுமதித்துறை மிகவும் அபிவிருத்தி அடைந்த நிலைக்கு முன்னோக்கி நகர்ந்தது.அதன்
பின்னர் 1948ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இந்திய வம்சாவளித் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசாங்கத்தால் நாடற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினால் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ்  காங்கரஸை உடைத்துக்கொண்டு  சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறிய அணியினரால், டிசம்பர் 1949ல் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும்.

எந்த மலையக மக்களை காரணமாக காட்டி கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சைவத் தமிழ்த் தலைவரான  ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின்   இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினாரோ  அதன் பிற்பாடு அந்த மலையக மக்களைப்பற்றி கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகமும் அவரது கிறிஸ்தவ தமிழரசுக்கட்சியோ சிந்திக்கவில்லை.எந்தவொரு எதிர் நடவடிக்கையோ போராட்டங்களோ செய்யவில்லை (செய்திருந்தால் ஆதாரங்கள் தரமுடியுமா?) அவர் தனிக்கட்சி அமைக்க ஒரு காரணம் கிறிஸ்தவ மேலான்மைக்காக தேவைப்பட்டது. அவ்வளவுதான். தமிழரை ஏமாற்ற தமிழரசுக்கட்சி எனறும் சிங்கள மக்களைஏமாற்ற சமஷ்டிக் கட்சி( Federal Party) என்றும் இரட்டை வேட அரசியல் நடாத்திய ஏமற்றுக்காரன்.

 மதசாா்பின்மை கோட்பாட்டை அறிமுக படுத்தியவரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு இயற் பெயரை அடையாளமாக கொண்டவரும் தனிநாயகம் அடிகள் தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவரின் ஆலோசகராக இருந்து வழிநடாத்தியவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற கிறிஸ்தவ பெயரை மறைப்பதற்காக  தமிழரசு கட்சியின் தொண்டர்கள் ஊடாகவும் , "சுதந்திரன் " ஊடாகவும் பத்திரை ஆசிரியர்  "கோவை மகேசன் " அவர்களின் ஊடாகவும்    மூதறிஞா் தந்தை செல்வா"   ,  "ஈழத்தின் காந்தி "  என்ற பல பெயர்களில் அழைக்க வைக்கப்பட்டனர்.

இலங்கையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ மக்களையும் , பெளத்த சிங்கள மக்களையும் அரசியல் அதிகாரங்களின் ஊடாக வழிநடத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களே. தமிழ் மொழி பேசுகின்ற கிறிஸ்தவ மக்களையும் , தமிழர்களையும் அதே கிறிஸ்தவ நிறுவனங்களே வழிநாடாத்துகின்றன இதன் காரணமாகவே அரசியல் தலைவர்களும் ஆலோசகர்களும் கிறிஸ்தவர்களாகவே இருந்தனர் , இருக்கின்றனர் என்பது மறுக்கவோ மறைக்க முடியாத உண்மை ஆகும்.

சிவபூமி தேசத்தில் "சிவபூமியை பிளந்து " சைவத்தை மறுதலித்து நடாத்தி முடிக்கப்பட்ட எந்தவொரு ஒப்பந்தமும் வென்றதாக வரலாறுகள் இல்லை.

https://jaffnaviews.blogspot.com/2020/03/02.html

No comments:

Post a Comment