இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள குருந்தூர்மலையில் பல ஆண்டுகாலமாக கிராமிய தெய்வ வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளது. ஆனால் தொல்லியல்துறை அரசின் பக்கம் சாய்ந்துகொண்டு இது பௌத்தர்களின் வரலாற்று இடமென்றும் புத்தபெருமானுடன் தொடர்புபட்ட இடமென்றும் கூறிக்கொண்டு புத்தபெருமானை தேடி ஆய்வுகளை மேற்கொண்டனர்.
புற்றரைகளை கிண்டினார்கள் எட்டிப்பார்த்தது ஆனால் கிடைத்தது புத்தரோ விகாரையோ அல்ல அன்று அயனும் அரியும் தேடியும் காணாத அந்த திருவுரு இன்று மூடர்களின் அறிவுக்கண்ணை திறப்பதற்காக என்னப்பன் எங்கும் நிறைந்தவன் ஈசன் பூமியிலிருந்து வெளிப்பட்டார்.
ஆம் அவரே உயிர்கள் தோன்றி ஒடுங்கும் ஒரே பரம்பொருள். ஆனால் சற்று வித்தியாசமாக உள்ளார் பொதுவான லிங்க அமைப்புகளில் இருந்து வேறுபட்டுள்ள இவர் பல்லவர்களின் கைவண்ணத்தை தன்வசம் கொண்டுள்ளார்."தாராலிங்கம்" என்று பெயர் பெறும் இந்த லிங்கமூர்த்தம் பொதுவாக லிங்கத்திருமேனியில் பதினாறு அல்லது எட்டு பட்டைகளுடன் காணப்படுகிறார்.
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தின் சிறுவத்தூர் கிராமத்தில் நாகநாதேஸ்வரர் எனும் பெயரில் பதினாறு பட்டைகளுடன் 07ம் நூற்றாண்டின் பல்லவர்காலத்தை சேர்ந்தவராக உள்ளார்.
அதுபோல விழுப்புரம் மாவட்டத்தில் பனைமலை கிராமத்தில் சரியாக குருந்தூர்மலையில் கிடைத்திருக்கும் லிங்கத்திருமேனியைப் போன்றே வளைவுகளைக் கொண்டு பல்லவர்கால தாளகிரீஸ்வரர் காணப்படுகின்றார். மேலும் புகழ்பெற்ற காஞ்சி கைலாசநாதர், திருவதிகை வீரட்டானேஸ்வரர் போன்ற மூர்த்திகளும் தாராலிங்க அமைப்பிலேயே உள்ளனர்.
ஆகவே கிடைத்திருப்பது லிங்கத்திருமேனியே.ஆனால் இதிலும் அரசாங்கம் குழறுபடிகள் செய்ய நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.
உண்மையான ஆய்வாளர்கள் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு லிங்கத்திருமேனியராய் இருக்கும் எம்பெருமானின் முழு விபரங்களை பெற்று இது "சிவபூமி" என்னும் திருமந்திரத்தை உறுதிசெய்ய வேண்டுகின்றேன்.
உண்மைகள் உறங்காது எங்கள் தாண்டவமாடிடும் ஆதியோகியின் மண்ணிது மடியாது திருமூலர் என்ற பெருஞ்சித்தன் சொன்னான் இது சிவபூமியென்று ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் விதைத்த என் பெரும்பாட்டன் இராவணனின் மண்ணை சிவபூமி எண்டு.... என் மார்பைத்தோண்டினாலும் லிங்கம் இருக்கும் என் மண்ணைத் தோண்டினாலும் லிங்கம் இருக்கும். ஆதியில் சைவன் வாழ்ந்த ஈழம். அதுவே தமிழன் தாய்மண் ஆகும்.
நாகர்களினதும் சோழர்களினதும் கலப்பு இனம்தான் பல்லவர்கள். நாகர்களின் இளவரசி பீரிவளை சோழ இளவரசனை மணந்து அவர்களுக்கு பிறந்த திரையன் என்பவனிடம் இருந்துதான் பல்லவ இனம் தோற்றம் பெறுகின்றது.
No comments:
Post a Comment