நாடு என்றால் என்ன?
அரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் (பண்பாடு சார்ந்த ஒன்று) மற்றும் அரசு (அரசியல் சார்ந்த ஒன்று) என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
தேசம் (Nation) என்றால் என்ன?
தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும். நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு.[1] ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகள் பல நாடுகளாக பிரிந்தும் காணப்படுகின்றன.
அரசு என்றால் என்ன?
அரசு அல்லதுஅரசாங்கம் என்பது தனது அரசியல் எல்லைக்கு உட்பட்ட மக்கள் கூட்டம், நிலப் பரப்பு, ஆகாய பரப்பு, இறைமை உட்பட்ட அனைத்து வளங்களையும் நிர்வகிக்கும் அமைப்பு ஆகும்.
அரசாங்கத்தின் அதிகாரங்கள் அரசிடமிருந்து பெற்றவை ஆகும். அரசாங்கமானது தற்காலிக தன்மை உடையதாகும். அரசாங்கம் என்பது காணக்கூடிய ஒரு திட அமைப்பாகும்.
No comments:
Post a Comment