இந்து என்பது தமிழ் சொல். சந்திரனை குறிக்கின்ற சொல். சிவனை குறிக்கின்றது.சந்திரனைத் தலைமணியாக அணிந்த பெருமான் "இந்து" சிகாமணி எங்களை ஆள எழுந்தரு ளப்பெறிலே". திருவாசகம் பேசுகின்றது. "இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை" விநாயகப் பெருமானை குறிக்கும்.
இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்), அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . உண்மை, உய்வு, உயர்வு, உயிர், உரிமை, உறவு, உற்சாகம், உருவம், உருவஅருவம், உலகம், உள்ளொளி. . .; ஊக்கம், ஊற்றுக்கண், ஊடகம் . எல்லா, எச்சம், எழுத்தருளி . . . ; ஏற்றம், ஏந்து, ஏகம், ஐயன், ஐந்தரம், ஐந்திரம், ஐந்திறம், ஐம்பூதம், ஐந்தெழுத்தான். ஒலி, ஒளி, ஒண்மை, ஒட்பம், ஒழுக்கம், ஒன்றுதல், ஒற்றுமை . ஓமம், ஓகம், ஓதம், ஓதுதல், ஓங்காரம். . .; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கடவுள், கல்வி, கன்னி, கரு, கதை, காதை, கவிதை (காவியம், காப்பியம்). கீதை... ; சத்தி, சத்து, சத்தியம், சமயம், சமுதாயம், சமத்துவம், சகோரத்தத்துவம், சமாதானம், சந்திப்பு, சங்கமம், சங்கம், சித்து, சித்தம், சிவன் சுருதி.. .; தமிழ், தலைவன், தன்னொளி, தரு, தண்ணீர், தன்னையறிதல், தலைவனையறிதல், தவம், திரு.. .; பற்று, பந்தம், பண்பு, பதி, பசு, பழக்கம், பராசத்தி, பசுமை, பிறமண், பிண்டம், பேரண்டம், பகலவன், பகவதி, பாசம், பாவை, பூ, பூசை, போதம், ஞானம், ஞாலம், ஞாயிறு, நலம், நல்வாழ்வு, நம்பிக்கை, நட்பு, நமசிவாயம், நங்கை, நாயகி, நாராயணன், நேமம், நியமம், நிடதம், நிட்டை, நீதி, நாதம், நெறி...; மனம், மதம் மகிழச்சி, மறை, மகாசத்தி, மகேசுவரன், மகேசுவரி, மங்கை, மறை, முறை, மீமாம்சை.. .; யக்ஞம், யாகம், யோகம், வள்ளல், வள்ளண்மை, வல்லமை, வணக்கம், வாழ்த்து, வெற்றி, வேகம், வேதம், வேள்வி வையகம்.
என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன.
இவை போன்று நூற்றுக் கணக்கில் ஏராளமான சொற்கள் இந்து என்ற சொல்லுக்கு பொருள் கூறுவனவாக மூன்றாவது யுகத்திற்கு முன்பே இருந்ததாக ஒன்பதாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் வைகையாற்றங்கரைக் கருவூறார் அவர்களும்; எட்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் குறிக்கிறார்கள்.
இப்படி, இந்த இந்து என்ற ஒரு சொல் ஒர் ஒப்புயர்வற்ற பொருட்செறிவும், பொருளாழமும் மிக்க அழகிய இனிய அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ்ச் சொல்லாகும்.
இந்த இந்து எனும் சொல்லே அண்ட பேரண்டமாளும் பதினெண்சித்தர்களுடைய தத்துவங்களையும், செயல் சித்தாத்தங்களையும், கொள்கைகளையும், குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், சாதனைகளையும், போதனைகளையும் அருட்கொடைகளையும் முழுமையாகக் குறிக்கின்ற ஒரே ஒரு சொல்லாகும்.
No comments:
Post a Comment