Thursday, 20 August 2020

தமிழ்தேசியம். பகுதி----1

ஐவகை நிலத்திணைகளின் தமிழ் தேசியத்தின் தெய்வீக வழிபாட்டு பண்பாடுகள்.

சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. 

ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ள நிலத்திணைகளின் தெய்வங்களின் பண்பாடுகள் தமிழ் தேசியத்தில் இருந்து பிரிக்க முடியாத தெய்வீக வழிபாட்டுடன் கூடிய பண்பாடுகளாவே பின்னி பினைந்தே காணப்படுகின்றது.

 'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே'

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி.  குறிஞ்சியின் தமிழ் தேசியத்தின் தெய்வீக பண்பாடுகள் 'சேயோன்' (முருகன்) மூலமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

காடும் காடு சார்ந்த முல்லை.  முல்லையின் தமிழ் தேசியத்தின் தெய்வீக பண்பாடுகள் மாயோன் (திருமால்) மூலமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். மருதத்தின் தமிழ் தேசியத்தின் தெய்வீக பண்பாடுகள்  இந்திரன் மூலமாக அடையாளப் படுத்தப்படுகின்றது.

கடலும் கடல் சார்ந்த நிலமே நெய்தல். நெய்தலின் தமிழ் தேசியத்தின் தெய்வீக பண்பாடுகள்  வருணன் மூலமாக அடையாளப் படுத்தப்படுகின்றது.

முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போன நிலமே பாலை. பாலையின் தமிழ் தேசியத்தின் தெய்வீக பண்பாடுகள் கொற்றவை அம்மனின் மூலமாக அடையாளப் படுத்தப்படுகின்றது.

ஆகவே தமிழ்தேசியம் தெய்வீக தமிழ் போற்றிய பண்பாடுகளின் ஊடாகவே அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றது.


No comments:

Post a Comment