முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ளது வேணாவில் கிராமம்.
மொத்தம் 258 குடும்பம் இந்து குடும்பம் 248 கிறிஸ்தவ குடும்பம் 10 இந்துக் கோவில்-1 கிறிஸ்தவ சபைக் கூட்டங்கள்-4 வெறும் பத்து கிறிஸ்தவ குடும்பம் மட்டுமே உள்ள கிராமத்தில் 4 கிறிஸ்தவ சபைக் கூட்டங்கள் எதற்காக?
நான்கு சபைக் கூட்டங்கள் வருமுன்னர் இக்கிராமம் முழுமையான சைவக் கிராமம். அப்படியிருக்கையில் இங்கு சபைக்கூடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது ஏன்? வழங்கியவர்கள் யார்? உதவி வழங்குதல் என்ற பெயரில் அங்கு குடியேறியுள்ள கத்தோலிக்க மேரி றோசலின் என்ற கிறிஸ்தவ பெண்மணி ஒருவர் அறநெறிப் பாடசாலை இடம்பெறும் நேரம் ஆலய பஜனை இடம்பெறும் நேரம் என மாணவர்களை அங்கு செல்லவிடாமல் பதிவு உறுதிப்படுத்தல் என அழைத்து குழப்பும் நடவடிக்கை தொடர்கிறது.
அறநெறிப் பாடசாலை நேரத்தில் மாட்டிறைச்சி சாப்பாடு கொடுத்து மாணவர்களை அழைக்கிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மக்கள் தொடர்ந்தும் அனைத்து அரச அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கிராம அலுவலர் கிறிஸ்தவர். அவர் கிறிஸ்தவ ஆதரவு நிலையில் சைவ விரோத போக்கில் செயற்படுவதாக மக்கள் விசனப் படுகின்றனர். பிரதேச செயலாளருக்கு முறையிட்டனர்.அவர் மக்களுடன் கலந்துரையாடினார். குறித்த கிறிஸ்தவ பெண்மணியை அழைத்து குறித்த முறைகேட்டை நிறுத்தப் பணித்தார்.
பிரதேச செயலாளருக்கு எமது மனமார்ந்த நன்றிகள். அவருக்கு என்றும் சிவனருள் கிட்டும். ஆனால் அந்த கிறிஸ்தவ பெண்மணி தன் செயலை தொடர்ந்தும் செய்கின்றார். அவர் பிரதேச செயலருக்கே மிரட்டும் வகையில் சவால் விடுகின்றாரா? அவரை பின்புலத்தில் இருந்து இயங்கும் சக்தி எது? இயங்குவது யார்? இதனை முடிவிற்கு கொண்டு வர மக்கள் நாம் என்ன செய்ய போகின்றோம். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் ஆகியோர் அனுமதியின்றி அமைக்கப்பட்ட சபைக்கூடங்களை இல்லாமல் செய்ய உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது வெறும் மதம் சார்ந்த பிரச்சனை அல்ல. இது சமூகத்தை துண்டாடும், சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி அமைதியின்மையை ஏற்படுத்தும்.
எதிர்கால சந்ததி வன்முறையற்ற அமைதியான சூழலில் வாழ உடன் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பில்.
No comments:
Post a Comment