Wednesday, 19 August 2020

தமிழ்தேசியம். பகுதி----6

சைவ ஆலயங்கள்

எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலாச்சார பண்பாட்டின் பிரதிபலிப்பாக எம் கண்முன்னே ஆதாரங்களாக  சைவ ஆலயங்களாக தமிழ் தேசியம்  எழுந்து நிற்கின்றன.  சைவ ஆலயங்கள்  இலங்கை முழுவதும்  தமிழ் தேசியம்  பரந்து எழுந்து நிற்கின்றன. என்பதற்கு ஆதாரங்களாக சைவ ஆலயங்கள் இருக்கின்றன.

வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் கலாச்சார பண்பாட்டுஅறவியலுக்கும் இல்லாத பெருமை சைவ தமிழ் தேசியத்தால் அடையாளப்படுத்தப்படும் சைவ தமிழுக்கும், சைவ தமிழருக்கும் தமிழர் தேசத்திற்கு உண்டு.

தமிழ்தேசியத்தின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் சமூகம் எனும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கிறது என்று தானே அர்த்தம்.

 பண்பட்ட மண்ணில்தான் செடிகளும் கொடிகளும் துளிர்விடும். அதுபோல இந்தச் சமூகம் பண்பட வேண்டும் என்றால் நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதனை தமிழினம் இத்தரணிக்குக் கற்று கொடுத்து இருக்கிறது. நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் தமிழ் தேசியத்தின் சைவ பண்பாட்டை கட்டிக் காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். இது வரலாற்றுப் பதிவு.

இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இணையம் வரைக்கும் தமிழ்தேசியத்தின் சைவ  பண்பாடும் பதிவுகள் தன்னைக் காட்சிப்படுத்தி நிற்கிறது. நாகரீகம் என்ற பெயரில் தலைமுறை கடந்து விட்டாலும் தமிழ்தேசியத்தின் சைவ பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் பின் தொடர்ந்து வருகிறது.

தமிழ்தேசியத்தின் சைவ  உயரிய குணங்கள் கொண்டுள்ள ஒரே மாந்தரினம் இன்று கிறிஸ்தவ,இஸ்ஸாமிய, திராவிட நாத்திக, சோசலிச ,மார்க்சிச , லெனினிய வாதிகள் போன்ற சாக்கடையில் சரணடைந்துள்ளது மனவருத்தமாக உள்ளது. மற்ற இனங்கள் காட்டுமிராண்டியாக இருந்தபோதே சங்கம் வைத்து மொழிவளர்த்த உன்னதமான சமூகம் தமிழ்ச்சமூகம் சைவ தமிழ்தேசியத்தின் ஊடாகவே தன்னை அடையாளப்படுத்தியது.

No comments:

Post a Comment