Tuesday, 18 August 2020

தமிழ் தேசியம் பாகம்--4

தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளின் ஒன்றான  தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள்.நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்.

மொழி என்பது ஒரு தேசியத்தின் கலாச்சார அடையாளம், அதுபோல ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் அடையாளத்தை அந்தப் பெயரை வைத்தே கண்டுபிடிக்கலாம்.

தமிழன் என்று அடையாளப்படுத்துவதற்கு தமிழ் தேசியத்தின் ஊடாக பல அடையாளங்கள் இருக்கின்றன. யாரும் நம்மை பார்க்காமலேயே, யாரென்று புரிந்து கொள்வது ஒன்று அமுதத் தமிழ்  இருக்கின்றது என்றால் அது, நாம் நமக்கு வைத்துக் கொள்ளும் தமிழ் பெயரே தமிழன் என்று அடையாளப் படுத்தும். அந்நிய மொழி தேசிய அடையாள பெயர்கள் மூலம் அடையாளப்படுத்தப்படும் பெயர்கள் என்றும் தமிழன் என்று அடையாளப்படுத்தப்படமாட்டாது.

தமிழ் தேசியதின் ஊடான தமிழ் பெயர் என்பது எழுத்து வடிவம், உச்சரிக்க மட்டுமல்ல உடலுக்குள் உயிர் போல நம் தேசியத்தின்வாழ்வோடு இணைந்திருப்பதுமாகும். தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்தும் பெயர்கள் சாதாரணமானவை அல்ல தரணி ஆண்ட தமிழ், மரணத்தை வென்று கொடுத்த தமிழ், ஞாணிகலின் நாவில் நந்தணம் ஆடிய தமிழ் சூட்டாமல்  பிறமொழிகளை பெயா்களை சூட்டுவது என்பது தமிழை கொலை செய்வதற்கு சமமானதாகும்..

ஒருவரை நேரில் பார்த்தவுடன் இவர் தமிழர் என்று தெரிந்தும் பெயரைக் கேட்டால் பிற தேசியத்தின் மொழி இனத்தவர் பெயரை தாங்கி தமிழ் இன அடையாளத்தை அழித்தவராக இருப்பாா்.பிறமொழி இனத்தவா்கள் தங்களை   மறந்தும் தமிழ் பெயர்களை பிற மொழியினர் தங்களுக்குள் சூட்டிக் கொள்வதில்லை.

தன்மாணம் இழந்து ,சூடு சொறணை அற்று நித்திரையில் இருக்கும் கிழங்கு தமிழா  உன் சந்ததியினருக்கு  நீய் சூட்டுவது ஆண்பால்,பெண்பால் அறிய முடியாத பிறமொழி பெயா்கள்.நீய்  உன் தமிழ் குலத்தின் இன அடையாளத்தை இழிவு படுத்துகின்றாய். ஆனால் தமிழன், தமிழீழம் என்று எல்லாம் கூவித்திாிகின்றாய்.

அரேபியமொழி மோகத்தால் அரேபிய பெயா்களும்,  பறங்கியின் மோகத்தால் பறங்கியின் பெயா்களும், ஆப்பிரிக்கா மோகத்தால் ஆப்பிரிக்கா பெயா்களும்   தமிழனிடம் இருந்து  ஆழ ஊடுருவி செல்வதற்கு காரணம் சைவமும் தமிழழும் கலந்த தமிழ் உணா்வற்ற சந்ததியின்  விருத்திதான் என்று சொன்னால் மிகையாகாது.


எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.

அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.


அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.

தூஷப்கை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷப்த்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷப்கை, தூஷத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷப்கா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.

வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.

https://www.youtube.com/watch?v=MjPxawDQDd4

https://www.youtube.com/watch?v=NFdhtqP8Vj4

No comments:

Post a Comment