Monday, 17 August 2020

இறைவன் அருளிய முருக அவதாரமே தமிழ்தேசியம்.



                                                                ஓம் முருகா.

ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ் சிவனின்  நெற்றி கண்ணில் இருந்து  பொறிகளாக வெளிப்பட்ட  தமிழ் தேசியம்  பொய்கை நதியில் பட்டதும் அவை ஆறு குழந்தைகளாக முருகப் பெருமானாக  அவதரித்த நன்னாள் வைகாசி விசாக  ஆகும்.

 அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்து வர. பின் ஒருநாள் அந்த ஆறு குழந்தைகளுக்கும் தாயான பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கையில், பன்னிரு கரங்களோடும் ஆறு முகத்தோடும் முருகன் தோன்றினார் என்கிறது கந்த புராணம்.

முருகனின் நெற்றியில் இருக்கின்ற திருநீறும் பொட்டும், கையில் ஏந்தி இருக்கின்ற வீரவேல் முருகனின்  கலாச்சார பண்பாட்டு உடைகளும் அனைத்தும் பார்வைக்கும்  அத்துடன் முருகனின் தமிழ் பெயர்கள் அனைத்தும் இனைந்து தமிழன் என்று சொல்லும்.


தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும், தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும், தனி நிலை எனப்படும் ஆயுதமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும். மெல்லினம் மென்மையும், இனிமையும் மிக்கது. மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை அதன் பின் அமைத்து உண்டான பெயர் முருகு.

முருகனின் பெயர்கள் அனைத்தும்தமிழ் தெய்வம் என்றே அடையாளப்படுத்தும்  அதேவேளை தமிழ்தேசியத்தின் அடையாளத்தின் குறியீடாகும். 

முருகா என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறுபொருள்கள் உண்டு. முருகனின் பெயர்களில் முருகன். குமரன், குகன் ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கவை. இதனை அருணகிரிநாதர், முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய், என்று கந்தரநுபூதியில் குறிப்பிட்டுள்ளார்.

முருகா என்ற பெயரை மனதால் நினைத்தாலும், உள்ளம் உருகிச் சொன்னாலும் இனிமையான வாழ்வு அமையும். ‘மு’ என்பது திருமாலையும் ‘ரு’ என்பது சிவபெருமானின் அம்சத்தையும் ‘க’ என்பது பிரம்மனையும் குறிக்கும். முருகனின் தமிழ் பெயர்கள் யாவும் தமிழன் என்று அடைாளப்படுத்தும் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளில் முக்கியமான கூறு ஆகும்.

தமிழ் தேசியத்தின் அவதாரமான ஆறுமுகன் பன்னிரு கரங்களோடும் ஆறு முகத்தோடும்  தோன்றினார்.ஆறு முகனின் தெய்வீக அடையாளங்கள்  யாவும் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளே ஆகும்.

முருக வழிபாடான தமிழ் வழிபாட்டை நிராகரிக்கின்றவர்கள் அத்துடன் முருகனை யாக அடையாளப்படுத்தி படங்களை வெளியிடுபவர்கள் அனைரும் தமிழின அழிப்பாளர்கள்.

No comments:

Post a Comment