Saturday, 15 August 2020

தமிழ்தேசியம். பகுதி----1

இமயமலையிலிருந்து இலங்கை கதிர்காமம் வரை பரந்த நிலப்பரப்பு சிவபூமியாகும். இலங்கை தமிழர்களின் சிவஞானபூமி பஞ்ச சிவதலத்தால் சூழப்பட்டுள்ளது. சிவனை முழு முதல் கடவுளாக் கொண்டதே சைவம். சிவனால் அருளப்பட்ட தமிழ் போற்றிய இலக்கியங்களும் சிவனால் அறியப்பட்ட  பண்பாடுகளுடன் கூடிய தெய்வீக வழிபாடுகளுடன் என்றுமே பிரிக்க முடியாதவாறு கலந்ததே தமிழ் தேசியத்தை அடையாளப்படுதிய தேசம் சிவபூமி ஆகும். சிவபூமி சிவபண்பாடுகளாள் அடையாளப்படுத்தப்பட்டே இருந்தது.

காலத்தால் அளக்கவும் அளவிட முடியாத காலம் தொட்டு  இமய மலையிலிருந்து உலகம் முழுவதும் பரந்த நிலப்பரப்பில் இன்று வரை  பறந்து கொண்டு இருக்கும் தமிழ் தேசியத்தின் கொடியான நந்திக் கொடி  பண்பட்ட  அறநெறியை தாங்கிய கொடி ஆகும்.

பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமான நந்திக் கொடி. சிவபூமியின் தேசிய கொடி.  யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி. தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் கொடி. சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி. நாடுகளையும், அரசுகளையும், கண்டங்களையும் கடந்து பல்லாயிரரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்துகின்ற  இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட சைவக் கொடி. தமிழர்களின் உயிரிலும் மேலான புனிதமான நந்திக் கொடி தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை அடையாளப்படுத்தும்  தமிழ்தேசியத்தின் கொடி.

சிவனை மையமாக வைத்து உருவாக்கப்படுகிற அடையாளமே சிவ பூமியில் நிலை பெறப்போகும் உண்மையான தமிழ்த் தேசியம் ஆகும். சிவ தமிழ்த் தேசியத்தை அடையாளப்படுத்தாமல் சிவ பூமியில் தேசியம் பேசுபவர்கள் அனைவரும் அன்னியப் படைகளின் போலித்தமிழ்த் தேசிய வாதிகள் என்பதை எப்போதும் மறக்கக் கூடாது.ஆகவே சைவமும் தமிழும் கலந்தது தமிழ்த் தேசியம் ஆகும்.

சிவனை முன்னிலைப் படுத்தாத தமிழ் தேசியம் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை.அத்துடன் தமிழ் தேசியம் என்று அடையாளப்படுத்தப்படமாட்டாது.

சிவகுற்றம்---
சிவனிடம் இருந்து தமிழ் தேசியத்தை பிாித்து பாா்பது சிவகுற்றம்.சைவமும் தமிழும் கலந்த சிவபூமியின் தமிழ் தேசியமான சைவ சமய திருப்பணி தொண்டுகள் செய்கின்றவர்களுக்கு  துரோகம் செய்பவர்கள்,  பாதக செயல்களை நாசகாரமாக செய்பவர்கள், சிவாலயங்களை அழித்து கிறிஸ்தவ இஸ்ஸாமிய தேசமாகமாக மாற்றுபவர்களுக்கு உதவிகள் செய்கின் கட்சிகள், குழுக்கள் போன்றவர்களுக்கு நேரடியாக உதவி செய்பவர்கள், மறைமுகமாக உதவி செய்பவர்கள் சிவகுற்றத்திற்கு உள்ளாவார்கள் இதனை புராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

சிவகுற்றத்திற்கு உள்ளானவர்கள் இறந்த பின்பு அவர்களது இறந்த உடலுக்கு சைவதீட்சைகள் செய்து திருவாசகம் பாடி, சகலவகையான கிாியைகள் செய்து முடித்தும், ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டிய சகல வகையான சைவக் கிரியைகள் செய்தாலும் அந்த ஆண்மா அவர்கள் செய்த சிவகுற்றத்தின் பயனாக சிவபதம் அடையமாட்டாது.மாறாக பேய்களாகவோ அல்லது நரகலோகத்தில் அல்லல்பட்டு உருளவேண்டிவரும். இதனை பல புராணங்கள் எமக்கு கூறுகின்றன.

No comments:

Post a Comment