Friday, 14 August 2020

விட்டில் பூச்சிகளின் மரண விளக்குகள்.


விட்டில் பூச்சிகளுக்கு கலைப்பொழுதில் சூரிய உதய வெளிச்சம்  தான் அதன் இலக்கு என்ற காரணத்தால் விட்டில் பூச்சிகள் இளங் காலை வெளிச்சத்தில் காற்றில் பறந்துதிரிவது அதன் சுகமான ஆனந்தமான நடவடிக்கை.

ஆனால் இரவு நேரங்களில் மனிதர்களாகிய நாம் தீபங்களை எற்றுகிறோம். மின் விளக்குகளை ஒளிர விடுகிறோம்! சூரிய வெளிச்சத்தை எதிர்நோக்கியிருக்கும் விட்டில் பூச்சிகள், நாம்மால் உருவாக்கப்படும் செயற்கையான வெளிச்சத்தை சூரிய வெளிச்சம் என நம்பி ஓடி வருகின்றன. நெருப்பில் அல்லது மின்விளக்குகளின் சூடான கண்ணாடிகளில் மோதி வீழ்ந்து உயிர் விடுகின்றன.

 சூரியனின் இளங்காலை ஒளி வெள்ளம், புதிய விடியல், சுகமான காற்று, நல்ல எதிர்காலம் என்றெல்லாம் கற்பனையில் வெளிச்சத்தை நோக்கி ஒடிவந்த விட்டில் பூச்சிகள் இப்போது செத்துக் கிடக்கின்றன.

சாவுக்குக் காரணம் ஒளிவிளக்குகளின் கவர்ச்சி! மற்றும் சூரிய ஒளிக்கும் மனிதர்களால் உருவாக்கப் பட்ட ஒளிக்கும் வித்தியாசம் தெரியாத அறியாமை! விட்டில் பூச்சிகளைப்பொறுத்தமட்டில் விடிவு விளக்காக நினைத்தது மரணவிளக்காக மாறிவிட்டது.

இந்த விட்டில் பூச்சிகளின் நிலையில்தான் இலங்கை தமிழ் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதோன்று களிமண் மூளைகளை கொண்ட தமிழ் அரசியல் வாதிகளும் புதிய விடியலை நோக்கியுள்ளார்கள்.இருக்கிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்கு ஒரு வளர்ச்சி வராதா? வளம் வராதா? தமிழர்களின் ஆரோக்கியம் நலம் பெறாதா? வீரமும் பலமும் மீண்டும் வராதா? நேர்மையும் நாணயமும் மீண்டும் தலைதூக்காதா? பக்தியும் உண்மையும் மீண்டும் உதயம் ஆகாதா? பரபரப்பற்ற பிரச்சனையற்ற வசந்தகாலம் மீண்டும் இலங்கையில் சைவ நெறி மலராதா? சைவ நெறி வாழ்வியல் நெறியில் முன்னேற்றம் வராதா?  இது வெல்லாம் தான் இலங்கைத்  தமிழ் மக்களின் தேடல்களாக உள்ளது, விடியலை நோக்கும் விட்டில் பூச்சிகளாக  இலங்கைத்  தமிழ்மக்கள் உள்ளனர்.

நானுறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒளிமயமான காலப்பகுதியும், போர்த்துக்கீச கத்தோலிக்கத்திற்கு பிற்பட்ட காலப் பகுதி இருண்டுபோய் உள்ளது. வெளிச்சத்தையும், இருளையும் பார்த்தவர்களுக்கு தான் இருள் என்றால் என்ன என்பது புரியும்.

இருளிலேயே இருந்து அடிமைப் பட்டு பழக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மக்கள், தமிழர் தலைவர்கள் என்று பிரகடணம் செய்யும் பலருக்கு இப்போது வெளிச்சம் என்றால் என்ன என்பது கூட மறந்து போய் விட்டது.

இரவு நேரங்களில் மனிதர்களாகிய நாம் தீபங்களை எற்றுகிறோம். மின் விளக்குகளை ஒளிர விடுகிறோம்! சூரிய வெளிச்சத்தை எதிர்நோக்கியிருக்கும் விட்டில் பூச்சிகள், நாம்மால் உருவாக்கப்படும் செயற்கையான வெளிச்சத்தை சூரிய வெளிச்சம் என நம்பி ஓடி வருகின்றன நெருப்பில் அல்லது மின்விளக்குகளின் சூடான கண்ணாடிகளில் மோதி வீழ்ந்து மாண்டது போல  தங்களின் முன்னோா்களை சிலுவையில் ஏற்றிபடுகொலை செய்ய கிறிஸ்தவ நிறுவனங்களை தமிழர்களின் விடி வெள்ளியாக கருதி மண்டியிட்டு வீழ்ந்து மாண்டு கொண்டாா்கள் தமிழர்கள்.  இந்த வரலாறு களிமண் மண்டைகளுக்கு எவ்வாறு விளங்கப் போகின்றது.

கிறிஸ்தவ மரண பொறிக்குள் வீழ்ந்த மாண்டவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அதேபோன்று இன்று வீழ்ந்து உள்ளாா்கள் தமிழ் அரசியல்வாதிகள் இவர்களும் மாழ்வது உறுதி.




No comments:

Post a Comment