Thursday, 20 August 2020

தமிழ் தேசியம் பாகம்----6

 தமிழ் தேசியத்தின் பஞ்ச பூத பண்பாட்டு வழிபாடு.

"நீர்"  வழிபாட்டு பண்பாடு.
பாகம்---1

தமிழ் தேசியத்தின்  பண்பாடுகள் தமிழர்களின் பண்பாடே அதில் பஞ்சத பூத  வழிபாட்டு பண்பாடுகளில் ஒன்றான  நீர் வழிபாட்டு பண்பாடு  தமிழ் தேசியத்தின் பண்பாட்டில் அடங்கும்.

நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த   "பஞ்சபூத"   மயக்கம் உலகம் என்கிறது தொல்காப்பியம். 'நீரின்றி அமையாது உலகு', நீர் 'மிகுனும் குறையினும் நோய் செய்யும்' என்கிறார் வள்ளுவர். நீரில்லாமல் இவ்வுலகம் இல்லை என்பதை பண்டைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். வழிபாடாக போற்றி வணங்கி வந்திருக்கின்றாா்கள் என்பதற்கான வெளிப்படையான சான்று இது.

தமிழரின் நீர் மேலாண்மை திறன் மிக தொன்மையானது. சங்ககாலம் தொட்டு நீரை கொண்டாடி இருக்கிறார்கள், அதை பாதுகாத்து இருக்கிறார்கள். சங்க காலத்தின் முந்நீர் விழவு என நீருக்கு விழா எடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். தமிழர் பண்பாட்டை நீர் பண்பாடு

அகழி, அசும்பு, அலந்தை, ஆவி, ஆறு, இலஞ்சி, இலந்தை, உடுவை, உவளகம், ஊரணி, எல்வை, ஏல்வை, ஏம்பல், ஏந்தல், ஏரி, ஓடை, கண்மாய், கயம், கால், கால்வாய், கிடங்கு, கிணறு, குட்டை,குட்டம், குண்டு, குண்டம், குண்டகம், குழி, குளம், கூவல், கூபம், கேணி, கோட்டகம், சட்டம், சலதரம், சிலந்தரம், சிக்கரி, சுனை, சூழி, சேங்கை, தடம், தடாகம், தம்மம், தாகம், தாங்கல், தரவு, பாக்கம், பொய்கை, மங்கல், மடு, மடுவு, மூழி, வலயம், வாக்கம், வாய்க்கால், வாவி - இவை அனைத்தும் சங்க காலம் முதல் தற்காலம் வரை நீர் நிலைகளை குறிப்பிடும் சில பெயர்கள்.நீர் நிலையை குறிக்க, இத்தனை பெயர்கள் இருப்பதே தமிழர்கள் வாழ்வு நீரோடு எவ்வளவு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்றுஒரு சமூகம், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினால் மட்டுமே அதனை சுட்டும் இத்தனை பெயர்கள் இருக்க முடியும்.

"குளம் (குளம் தொட்டு). கலிங்கு (கோடு பதித்து), வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல் (வழி சித்து), பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஆயக்கட்டு பகுதிகளை உருவாக்குதல்  (உழுவயலாக்கி) பொதுக்கிணறு அமைத்தல் (கிணறு).ஒரு ஏரியை இந்த ஐந்து அங்கங்களுடன் அமைப்பவன் சொர்க்கத்துக்கு செல்லுவான்," இதுதான் பாடலின் பொருள்.

தற்போது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை இணைத்து பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடு உலகெங்கும் பரவி வருகிறது. இந்த சிறந்த நீர்மேலாண்மை உத்தி, சங்கம் மருவிய காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த தேசம் எங்கும் இருந்திருக்கின்றது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
இது தமிழர் வாழ்வில் நீர் மேலாண்மை எவ்வாறு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்று.

"ஏரிகள் பன்முகத் தேவைகளை நிறைவுச் செய்யும் ஒரு களஞ்சியம். அதுவொரு மீன் வளர்ப்புப்பண்ணை, மழைநீர் சேமிப்புக் குட்டை, வண்டல் தரும் உரவங்கி, கரப்பு நீர் மேம்பட உதவும் ஊற்றுக்கால், சுற்றுச்சூழலைப் பசுமையாக குளுமையாக மாற்றி வெப்பம் குறைக்கும் இயற்கைக் குளிர் சாதனம். இறுதியில் அதுவொரு பாசனக்குளம்."

தமிழ் தேசியத்தின்  பண்பாடுகள் தமிழர்களின் பண்பாடே அதில் பஞ்சத பூத  வழிபாட்டு பண்பாடுகளில் ஒன்றான  நீர் வழிபாட்டு பண்பாடு  தமிழ் தேசியத்தின் பண்பாட்டில் அடங்கும்.

No comments:

Post a Comment