வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் கலாச்சார பண்பாட்டுஅறவியலுக்கும் இல்லாத பெருமை தமிழ் தேசியத்தால் அடையாளப்படுத்தப்படும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழர் தேசத்திற்கு உண்டு.
தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளில் முக்கியமானது சைவ வாழ்வியல் நெறிகளை கொண்ட கலாச்சாரம், பண்பாடு, சைவ நாகரிகம் ஆகும். தமிழ் தேசியத்தின் சைவ கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, ஆய கலைகள் அறுபத்து நான்கி என கூர்ந்து, அகன்று, ஆழ்ந்து செல்லுகின்றது.
மேலும் சங்ககால இலக்கியங்கள் ஊடாக விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, அறுசுவை உணவுகள் , சைவ பண்பாடு ஆடைகள், சைவ பண்பாடு கொண்டாட்டங்கள், சைவ வாழ்வியல் தத்துவம், சைவ சமய நெறிகள் வழிபாடுகள் மரபுகள், சைவ சமய சடங்குகள், நிறுவனங்கள், ஞானிகளின் அறிவியலை சங்ககால இலக்கியங்கள் ஊடாகவும், அரசியல் திருக்குறள், இலக்கியங்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
மற்றும் பண்டைய தமிழர்களின் தொழில்நுட்பம். தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டது தமிழ்தேசியம்.சைவ சமயத்துக்குத் தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு. அத்தகைய தொடர்புகள் தமிழ் தேசியத்துடன் என்றும் பிரிக்க முடியாதவாறு கலந்தே காணப்படுகின்றது.
" தமிழ் தேசியத்தின் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்."
https://www.youtube.com/watch?v=MjPxawDQDd4
https://www.youtube.com/watch?v=NFdhtqP8Vj4
No comments:
Post a Comment