Friday, 21 August 2020

வடவாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்


ஆலமரத்தின் கீழமர்ந்திருக்கும்    தட்சிணாமூர்த்தி   என்ற சிவபெருமானின் வடிவமே  ஞானத்தைக் கூறிப்பதாகும். தட்சிணாமூர்த்தியின்  திருக்கரத்திலுள்ள நூல் சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கியதாகத். திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.
திருக்கரத்தில் உருத்திராட்ச மாலை 36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துகிறது.இடக்கரத்தில் அமிர்தகலசம்   கொண்டிப்பது _
அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றலைக்  குறிக்கிறது.

ஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.
புலித்தோல்  மீதமர்தல் தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றலைக் குறிக்கிறது. காமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.

 முயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் ( சிவபெருமான்)அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுகிறார். ஞான சூத்திரம், ஞானச் சுருக்கம், ஞான பஞ்சாட்சரம் என பல நூல்களை தட்சணாமூர்த்தி   அருளியுள்ளார்.

ஞான தட்சிணாமூர்த்தி, வியாக்யான தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, இராஜ தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி என்று தட்சிணாமூர்த்தி பல வடிவங்களில் உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன.

 பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் என்ற நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டினர் நால்வரும். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். யோகத்தினை புரிந்துகொள்ள யோகநிலையில் இருந்துகாட்டினார். இவ்வாறு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்த தருணத்தினை யோக தட்சிணாமூர்த்தி என்று வழங்குகின்றனர்.

யோக தட்சிணாமூர்த்தி 🙏

 சாம வேதத்தினை வீணையில் இசைத்திட விரும்பிய நாரத முனிவரும், சுக்ர முனிவர்களும் சிவபெருமானை வேண்டிக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் இசை ஞானத்தினையும், சாம வேதத்தின் இசையையும் அவர்களுக்குக் கற்பித்தார். வீணையை உருவாக்குவது பற்றியும், அதனை முறையாக இசைப்பது பற்றியும் வீணா தட்சிணா மூர்த்தியாகிய சிவபெருமான் எடுத்துரைத்தார்.

தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும் (அடிப்படை) ,  அவற்றின் பொருளாகும்.

தட்சிணாமூர்த்தியை 'தென் திசை கடவுள்'  என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிவ தலங்களில் கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை குரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.

படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்கள் எனப்படும் சனகாதி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.

இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சக்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று,  பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்தவண்ணமே இருந்தன. பின்பு தட்சிணாமூர்த்தி சின் முத்திரையை அவர்களுக்கு காண்பித்தார். பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர்.

தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு  வடவாலின்  கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் முயலகன்  என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமை   என்ற இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும்  ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லும்  ஓலைச்சுவடியும் வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

"கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்".🙏 (திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)
விளக்கம்:

கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கடலாகியப்  பகையை வெல்லலாம் என்பதே இதன் பொருள்.

அதாவது கல்லால மரம்,  வட + ஆல்= வடவால்   என்பதெல்லாம் ஆலமரத்தைக் குறிக்கிறது. வட  என்றால் ஆலமரம் . ஆலமரத்தின் கீழிருந்து   சனகாதி முனிவர்களுக்குச்  சிவபெருமான், ரிக்,யஜுர், சாமம்,   அதர்வணம் என்ற நான்மறைகளையும்  போதித்தார்.  " வட என்ற ஆலமரத்தின் கீழிருந்து   சிவபெருமான்  போதித்த மொழி  என்பதால்    சமஸ்கிருதம்,   "வடமொழி" என்றானது.   ஆனால்   வேண்டுமென்றே பிரிவினை வாதம் பேசுவோர், சமஸ்கிருதம் ஆரிய மொழி  என்றும் வடக்கே பேசுவதால்   வடமொழி எனவும் திரித்துப்பொருள் எடுக்கின்றனர். இது  அறியாமையின் செயல்.  சிவபெருமான்  உடுக்கை   அடிக்க அதன் ஒரு புறம் இருந்து தமிழும், மறுபுறம் இருந்து சமஸ்கிருதமும் தோன்றின என்பர்.
 
சமஸ்கிருதம்  🙏

தமிழும், சமஸ்கிருதமும்  ஒரே நேரத்தில்   சிவபெருமானால்  தோற்றுவிக்கப்பட்ட  மொழிகளே.வடக்கே பேசியதால்   வடமொழி எனப் பெயர் வந்தது  என்றால், தெற்கே பேசியது  தென்மொழி என ஆகியிருக்க வேண்டுமே?  ஏன் தமிழுக்குத்  தென் மொழி, தென்னகத்தோர் பேசுவது என    யாருமே கூறவில்லை.  ஆனால்  'வட என்ற ஆலமரத்தின் கீழிருந்து  மறையோதும் எங்கள் பரமன்'  எனக்  கூறியது  உமையம்மையிடம்  ஞானப்பாலுண்ட  திருஞானசம்பந்தர்   பெருமான்  கூறியிருக்கிறார்.

 "கோளறு  பதிகத்தில்  இதை   அழகாகப்  பாடியுள்ளார் திருஞானசம்பந்தர்.
"மதிநுதன் மங்கையோடு வடவாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் கொதியுறுகாலன் அங்கி நமனொடு தூதர் கொடுநோய்களான பலவும்  அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே" ஞானசம்பந்தர்.

* "வடவால் இருந்து மறையோதும் பரமன்"வட= ஆலமரம்  வட ஆல்
வட என்றாலே ஆலமரம் தான். எனவே  அறிவாளி   மகான்களே!   சிவபெருமான் பேசியதே   தமிழ்மொழி மட்டுமே  சமஸ்கிருதம்  வடக்கேயுள்ள மொழி என்றெல்லாம் பிதற்றி திரிய வேண்டாம்.
  
ஷ,  ஸ, ஜ,  ஹ. க்ஷ   என்ற எழுத்துக்கள் எல்லாம்    சமஸ்கிருத எழுத்துக்களின் தமிழ் வரிவடிவங்களே.  சமஸ்கிருதத்தில் இவ்வறின் வரிவடிவம்  வேறு.   அந்தணர்களும் தமிழர்களே.  தமிழை வளர்ந்தவர்களில்  அந்தணர்களின்  பங்கு  மிகப் பெரிது.  தமிழை  முறையாக, அக்கறையாகக் கற்றவர்களுக்கு இந்த உண்மை   தெரியும்.

உ.வே. சாமிநாத ஐயர்  அவர்கள்  இல்லையென்றால்   தமிழில்  இன்றிருக்கும் பெரும்பாலான  அரிய பொக்கிஷங்கள்   இல்லாமலேயே போயிருக்கும்.   பாரதியாரை விடச்  சிறந்தத்  தமிழரும் உண்டோ?   தமிழ்ப்  பற்றை காட்டுகிறேன்  பேர்வழி என  "விஷயம்"    என்ற  சொல்லை  "விடயம்" என எழுதுவது  ஒரு  மொழியைக்  கொடுமைப்படுத்துவதாகும்.  சைவர்களாக இருப்போா் இருப்போர்    அவசியம்  சமஸ்கிருதத்தைப் படிக்கவேண்டும்.

அரிய பல விஞ்ஞானகருத்துக்கள் அடங்கிய  பொக்கிஷங்கள் மற்றும்  நான் மறைகள்  அதிலேயே உள்ளன.     நாற்பது விதமான விமானங்களை வடிவமைப்பதைப் பற்றி  "வைமானிக   சாஸ்திரா"  என்ற நூலைப்  பரத்வாஜ முனிவர்    சமஸ்கிருதத்தில் இயற்றியுள்ளார். நமது சமஸ்கிருத  வெறுப்பால்  நம் முன்னோர்களின்அரிய பொக்கிஷங்களை நாம் இழந்துவருகிறோம்.
முதல்  விமான   கண்பிடிப்பு:

 ரைட் சகோதரருக்கு ஐந்து வருடம் முன்னால் அதாவது 1898 ஆம் வருடம் ஆகாய விமானத்தை உருவாக்கிப் பறக்க விட்டவர் நம் பாரத நாட்டவரே.
மும்பை மாநகரில் ஷிவ்கர் பாபுஜி தல்பாடே SHIVKAR BAABUJI THALPADE என்கிற ஒரு மராட்டியப் பிராமணர். சம்ஸ்கிருத அறிஞர். மும்பைப் பல்கலையில் சமஸ்கிருதப் பேராசிரியராக பணியாற்றியவர். சமஸ்கிருத மொழியில் இருந்த விஞ்ஞானப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்வதில் தணியாத ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடன் பணியாற்றிய ஒரு நண்பர் படம் வரைவாளர் DRAUGHTSMAN உதவியுடன் மஹரிஷி பாரத்வாஜ முனிவரின் VAIMAANIKA SASTRA வைமானிக சாஸ்திரா என்னும் நூலை ஆராய்ச்சி செய்தார். அதில் விமானங்கள் வடிவமைப்பு, கட்டுமானம், பறக்க வைப்பது, எரிபொருள், விமானங்களின் விசைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற எல்லா விஷயங்களும் உள்ளன. அதன் மூலம் விமானம் தயாரிக்க மிகுந்த ஆர்வம் கொண்ட தல்பாடே அதற்கு பரோடா மன்னரின் ஆதரவும் நிதி உதவியும் பெற்றார். பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் அவர் ஒரு விமானத்தை வடிவமைத்தார்.

   1898 ஆம் ஆண்டு அதாவது ரைட் சகோதர்களுக்கு ஐந்தாண்டு முன்னரே தல்பாடே மும்பை சவுபாத்தி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தன விமானத்தின் சோதனை ஓட்டத்தை நிகழ்த்தினார். அது பிரபல சுதந்திர போராட்ட வீரர் கோவிந்த ரானடே, பரோடா அரசர் மற்றும் பல பிரபல மனிதர்களின் முன்னிலையில். அது  நிகழ்ந்தது.
  
🙏சிவபெருமான்  ஒரே நேரத்தில்  உருவாக்கியதே   தமிழும்,   சமஸ்கிருதமும்.   இல்விரண்டு  மொழிகளுக்கிடையேயும்      சிவபெருமானே  வேறுபாடு  காட்டாதப்போது,   சமஸ்கிருதத்தைப் பழிக்க நாம் யார்?

சிவபெருமான்   உருவாக்கிய   சமஸ்கிருதத்தைப் பழிப்பது   அவரையே பழிப்பதற்கு ஒப்பாகும். வடவாலிருந்து மறையோதும்  எங்கள் பரமன்  புகழ் ஓங்குக.🙏🙏🙏

No comments:

Post a Comment