கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியவை: காலம் கடந்து வெளியான தகவல்!
முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் மக்கள் வெளியேறும் போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் என்னிடம் கூறிய விடயங்கள் இவைதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் இன்று இல்லை ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று, அந்த ஒரு சொல்லுத்தான் எனது அடி நெஞ்சில் இப்பொழுதும் இருக்கின்றது. இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்
முள்ளியவளைப் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போதே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் பேசிய அவர்,
போராட்ட கால கட்டத்தில் என்னை மக்கள் ஆதரித்து எனக்காக வாக்களித்தார்கள். அன்று இருந்த சந்தர்ப்பத்தினை மறக்க முடியாது.
இதனை மனதில் வைத்துத் தான் அரசுடன் சேர்ந்தேன். அந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பாளராக பணி செய்தேன். அவர்கள் பாதுகாப்பில் இருந்து எல்லாம் செய்தார்கள். அந்த காலகட்டத்தில் தான் கொஞ்ச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுத்தோம்.
எங்கோ போன வேலைவாய்ப்பினை நான் தட்டிப்பறித்து எடுத்து கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்று அமைச்சராக றிஷாட் பதியூதீன் இருந்தார்.
அவர் அரசாங்கத்தின் அமைச்சர் நான் அரசாங்கத்தின் பிரதிநிதி நான் சண்டைபிடித்து தான் சமுர்த்தி,கிராமசேவை,பட்டதாரிகள் உத்தியோகங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் சிலருக்கு வேலைவாய்ப்பினை கொடுக்க முடியாமல் போனது. எங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பினை குறைத்து தங்கள் இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்க செயற்பட்டார்கள். இதனால் எங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பு குறைக்கப்பட்டது.
அன்று நான் முடிவெடுத்தேன் தனியாக நின்று அரசியலுக்குள் சென்றுதான் எங்கள் மக்களை காப்பாற்றவேண்டும் அது இன்று பலித்துள்ளது இதற்கு மக்கள் முழு ஆதரவு தரவேண்டும்.
வன்னி மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் அவர் அரசுடன் நிற்கும் தமிழராக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
போராட்டத்திற்கு பின்னர் வன்னி மக்கள் கடும் வறுமையில் இருக்கின்றார்கள். வறுமையினை போக்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி எடுத்து காட்டுங்கள்.
வன்னிமாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் காணிப்பிரசனை, வீட்டுப்பிரச்சனை, போரால் வலுஇழந்தவர்கள், முன்னால் போராளிகள் என்று வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்.
இறுதிவரையும் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்ளோடு வெளியேறி எட்டு மாதங்கள் சிறையில் இருந்தேன் நான் செய்த தவறு மக்களோடு மக்களாக நின்றது தான்.
கடந்த பத்து ஆண்டுகளாக எதுவும் செய்யாதவர்கள் மீண்டும் வந்து என்ன செய்வார்கள் என்று யார் நம்புவது. இருக்கின்ற அரசுடன் இணைந்து மக்களுக்கான அபிவிருத்தியினை செய்வதை தவிர வேறு யாருக்கும் சந்தர்பம் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அல்பிரட் துரையப்பா படு கொலை முதல் நடைபெற்ற பல ஆயிரம் தமிழ் இண அழிப்பு கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொண்ட தமிழ் இண அழிப்பே ஆகும்.
அல்பிரட் துரையப்பா-
https://jaffnaviews.blogspot.com/search?q=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
No comments:
Post a Comment