Wednesday, 1 July 2020

கர்மவினை.

ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே சைவ நெறியில் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் தமிழர்களினால் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர்.

 கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது அறம்  பேசிய தமிழர்களின் சைவ நெறி.

"வினை விதைத்தவன் வினை அறுப்பான்,
தினை வினைத்தவன் தினை அறுப்பான்.""

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் நமது பண்டைய பெரியோர்களின் அனுபவ மொழி இது. ஒருவன் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப்பதிலாக சோளம் விளையாது. அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும்.

இந்த வினை பயன் உடனே இல்லாமல் எப்போதாவது கூட கிடைக்கலாம். மறுபிறவியில் நம்பிக்கை உள்ள நம்மவர்கள் ஒரு பிறவியில் நாம் செய்யும் செயலுக்கான பலன் (கர்மபலன்) நிச்சயம் அடுத்தப்பிறவியில் கிடைக்கும் என்பதை கூறிச்சென்றுள்ளார்கள். இது நமது எல்லா இதிகாசங்களிலும் இலக்கியங்களிலும் காணக்கிடைக்கிறது. முக்கியமாக சிலப்பதிகாரத்தைச் சொல்லலாம்.

கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, லெனினிய, கம்யூனீச, சோசலீச, நாத்திகவாதிகள், திராவிடம் போலி தமிழ்த் தேசியவாதிகளின் புனை கதைகளை தவிர்த்து சங்க இலக்கியங்களை படியுங்கள்.

https://jaffnaviews.blogspot.com/2020/07/blog-post.html
அருளகம்

No comments:

Post a Comment