இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் சிறிலங்காப் படையினரால் மாத்திரமே இடம்பெறவில்லையென்று தெரிவித்த சுமந்திரன், இதனுடன் தமிழ் ஆயுதக் குழுக்களும் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது தமிழ் மக்களுக்கும் தெரியும் எனத் தெரிவித்தார்.
புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலை புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான உண்மைகளைத் தெரிவித்தால் தம்மை தேசத் துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தா லேயே தமிழீழ விடுதலை புலிகளின் தவறுகள் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் வாய்த்திறக்காமல் மௌனிகளாக இருப்பதாகவும் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகச் சட்டத் திருத்தம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
அங்கு மேலும் உரையாற்றிய சுமந்திரன், யுத்தகாலப்பகுதியில் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான ஆட்சேர்ப்பு குறித்தும் கண்டறியப்பட வேண்டும்.
தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தால் சிலர் அதனைக் கூறாமல் இருக்கலாம். எனினும் இது அனைத்தும் உண்மை. அது எமது மக்களுக்கு தெரியும். யாராலும் இதனை மறைக்க முடியாது. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுவது மிகவும் முக்கியம்.
உண்மை வெளிக்கொண்டுவரப்படும் போது உண்மையான நல்லிணக்கம் ஏற்படும். இந்த அலுவலகத்தை செயற்படுத்துவதில் அச்சமில்லாமல் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை நான் வலியுறுத்துகின் றேன். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும். யார் என்ன செய்தது என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். ஆகவே நல்லிணக்கத்தை நோக்கி ஏனைய செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்.
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இராணுவம் உட்பட அரச படையினரால் மாத்திரம் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்த சுமந்திரன் இதற்கு தமிழ் ஆயுதக் குழு க்களுக்கும் தொடர்பிருப்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், காணாமல்போனவர்கள் தடுப்புக் காவலில் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாது அல்லது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் அல்லது அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள் என அறிக்கை விடுவது மாத்திரம் போதுமானது அல்ல. மிகவும் முக்கியமான இந்த விடயத்தை கையாளும் அரசாங்கத்தினது வழி முறையாக இது அமையாது.
கட்டாயம் நடை முறையொன்று இருக்க வேண்டும். இந்த விடயத்தில் பாதுகாப்பு துறைசார்ந்த அச்சம் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு தரப்பினால் மாத்திரம் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை. பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளனர் என்பது உண்மையான விடயம். அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த விடயத்தில் கட்டாயம் பொறுப்புகூற வேண்டும். அது தொடர்பான விடயங்கள் வெளிவரும் என நம்புகின்றேன்.
நீண்டகாலம் நீடித்த மோதல்களின் போது காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களுக்கு ஏனையவர்களும் பொறுப்புகூற வேண்டும். பரணகம ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது எனது மகன் காணாமல் போயுள்ளார். நான் ஆயுதக்குழுவுடன் அலுவலகத்திற்கு சென்று ஏன் எனது மகனை பிடித்துவைத்திருக்கிறீர்கள் என கேட்டேன்.
அவரை விரைவில் விடுதலை செய்வோம் என அவர்கள் உறுதி அளித்தார்கள் என பல பெற்றோர் சாட் சியம் அளித்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆகவே தமிழ் ஆயுதக்குழுக்களினால் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியும் உள்ளன.
ஏனைய ஆயுதக் குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட காலப் பகுதியும் உள்ளன. வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குறிப்பிட்ட காலத்தில் இந்த காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களை யார் முன்னெடுத்தார்கள் என்பது எமது மக்களுக்குத் தெரியும்.
இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பான உண்மை கட்டாயம் கண்டறியப்பட வேண்டும். வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment