Tuesday, 14 July 2020

1983 கறுப்பு ஜூலை

1983 கறுப்பு ஜூலை என்பது கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட்  ஜெயவர்த்தனா வினால் திட்டம் தீட்டி நடாத்தி முடிக்கப்பட்ட தமிழ் இன அழிப்பு.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை இராணுவத் துப்பாக்கி முனையில் பயமுறுத்தி பணியவைக்க முடியாது போனதால் கதிகலங்கிப் போன  கிறிஸ்தவ ஐக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ தலைவர்கள், தென்மாகாணங்களில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களிடம் பழிவாங்கும் காட்டுமிராண்டி தயாரிப்புக்களில் இறங்கினர். ஜாதிக சேவக சங்கத்தில் சேர்ந்து கொண்டிருந்த காடையர்கள் உட்பட்ட குண்டர் கும்பல்கள்,கிறிஸ்வ ஐக்கிய தேசிய கட்சியினால் 1947 ம் ஆண்டு முதல் என்றுமே கொலைகள் செய்வதற்கு அஞ்சாத சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கினார்கள் அந்த  காடையர்கள் உட்பட்ட குண்டர் கும்பல்கள் சிறில் மத்யூவின் தலைமையில் இனவாதத் தூபம் போட்டுக்கொண்டு தென்மாகாணங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வீடுகளின் முகவரிகளை திரட்டிக்கொண்டு படு பயங்கரமான படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆயத்தமாகி வந்தார்கள்.

மனித இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப் பழக்கப்பட்ட இந்த கிறிஸ்வ இராட்சதப் படையணிகளுக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ-பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி கொலை செய்யப்பட்டவர்களை மரண விசாரணையோ அல்லது நீதி விசாரணையோ இல்லாமல் சுட்டெரிக்கப் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன.

இந்த இரத்தவெறி இனவாத தயாரிப்புகளுக்காக வீதியில் இறங்குவதற்கான உடனடி தருணத்தை, இராணுவப் படை அணிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதல் வழங்கியது. இதில் 13 படையினரும் ஒரு இரானுவ அதிகாரியும் ஜூலை 23ம் திகதி கொல்லப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை இரத்தக் களரி இயக்கம் தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார்செய்யப்பட்டது. இதற்கான குண்டர், ஆயுதந் தாங்கிய இராணுவ இயக்கத்துக்கு அங்கிகாரம் பெறும் பொருட்டு இறந்த இராணுவப் படையாட்களின் சகல சடலங்களும் கொழும்பு கனத்தையில் இடம்பெறும் தகனக் கிரியைகளுக்கு கொணரப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. அது இனவாதப் படுகொலையாளர்கள் அணிதிரள விடுக்கப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாக விளங்கியது.


1970-77 கூட்டரசாங்க காலத்தில் சட்ட ரீதியானதாக்கப்பட்ட கிறிஸ்வ சிங்கள இனவாதத்தின் கையாட்களான சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகளும், இக்கட்சிகளின் எடுபிடிகளான நவ சமசமாஜக் கட்சியினரும் யூ.என்.பி.யின் ''சட்டத்தையும் ஒழுங்கையும்'' பேணும் இயக்கத்துக்கு தோள் கொடுத்த ஜே.வி.பி,யும் இனவாதத்தை வெளிவெளியாக அரவணைத்துக் கொண்டனர். பொதுமக்களை குழப்பியடிக்கவும் இனவாத யூ.என்.பி. குண்டர் இயக்கத்தின் செல்வாக்குக்கு அதன் ஒரு பகுதியை பலியிட்டும் நடாத்திய அரசியல் இயக்கத்தில் சிங்கள இனவாத குண்டர்களும் இருந்தனர்.

ஜூலை 24ம் திகதி கொழும்பு கனத்தையில் கூடிய இரத்த வெறிக்குண்டர்களை நன்கு தூண்டி விடும் விதத்தில்  கிறிஸ்வ ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆத்திரமூட்டல்களில் இறங்கியது. இறுதிக் கட்டத்தில் இறந்த இராணுவப் படைகளின் சடலங்கள் கனத்தையில் தகனம் செய்யப்படாமல் அவரவர்களின் ஊர்களில் தகனம் செய்யப்படும் என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. கூடியிருந்த குண்டர்கள், கும்பல் கும்பலாக பிரிந்து இராணுவ பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பொரளை முச்சந்தியில் அன்று மாலை இரத்தக் களரிகளிலும் காட்டுமிராண்டி படுகொலைகளிலும் ஈடுபட்டனர். தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தத்தின் திருப்பு முனையாக 1983 ஜூலை கிறிஸ்வ முதலாளித்துவ அரச ஆதரவுடன் அந்த விதத்தில் ஆரம்பமாகியது.

"அன்று காலை முழுவதும் கலகக்காரர்கள் பஸ்கள், லொறிகள், புகையிரதங்கள் மற்றும் அரசாங்க வாகனங்களில் தமிழர்களின் வீடுகளைக் கண்டு பிடிப்பதற்காக  தேர்தல் இடாப்புகளுடன் கொழும்புக்கு பெருக்கெடுத்து வந்தனர்.

1977 தேர்தலில் வென்றவுடன் பொலிசாரை மூன்று நாட்கள் லீவில் அனுப்பி தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஜயவர்த்தனாவின் கீழ் யூ.என்.பி கட்டவிழ்த்து விட்ட பயங்கர இயக்கம் இதைக் காட்டிலும் பன்மடங்கு உக்கிரமாக்கப்பட்டு கொழும்பிலும் ஏனைய மாகாணங்களிலும் வசித்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டமை ஜனாதிபதி ஜயவர்தனவின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயங்கரத்தின் அளவாகும் என்பதில் எதுவிதமான சந்தேகமும் கிடையாது. இது ஜூலை 23ம், 24ம் திகதிகளில் அவர் செயற்பட்ட விதத்திலும் அவ்வாறே அதன் பின்னர் அவரின் நடைமுறையின் மூலமூம் நன்கு நிரூபணமாகியது.


ஜூலை 23ம் திகதியில் இருந்து கொலைகார காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து இரத்தக் களரிகளில் ஈடுபட்ட பொலிசாரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாக வீதிகளில் உலாவ இடமளித்ததன் பின்னர் ஜுலை 25 மாலை 2 மணிக்கே ஜனாதிபதி ஜயவர்த்தன கொழும்பில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தார். ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது மாலை 6 மணிக்கேயாகும்.


முதலில் கொழும்பிலும் பின்னர் மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், குண்டர்கள் ஏனைய மாகாணங்களுக்குள் ஊடுருவி தமது இரத்த களரியையும் படுகொலைகளையும் முன்னெடுக்க வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகியது. ஜூலை 26ம் திகதி இனவாதிகள் கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருணாகலை, இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத்தனங்களை நன்கு காட்சிப்படுத்தினர். திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் கடற்படையினர் முன்நிலை வகித்திருந்தனர். இனவாத காடைத்தன குண்டர் இயக்கத்துக்கும் முதலாளித்துவ சட்டத்துக்கும் அரச படைகளுக்கும் இடையே நிலவிய பிரிக்கமுடியாத பிணைப்பை இது வெளிக்காட்டியது.


ஜூலை 26ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் கிறிஸ்வ இனவாத குண்டர்களுக்கும் அரச நிறுவனத்துக்கும் இடையேயான உறவினை பலம்வாய்ந்த முறையில் அம்பலமாக்கியது. வெலிக்கடைச் சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்கள சிறைக் கைதிகள் தூண்டிவிடப்பட்டனர். தமிழ் சிறைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களுக்குள் நுழைந்த அவர்கள், அங்கு 35 தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்தனர். மறுநாள் ஜூலை 27ம் திகதியும் அதே விதத்தில் அதே இடத்தில் வைத்து மேலும் 17 தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் விவாதத்துக்கு இடமற்ற முறையில் கிறிஸ்தவ ஐக்கிய தேசிய கட்சியாலும், கிறிஸ்தவ அரசினாலும் மேற்கொள்ளப்பட்ட தமிழர் படுகொலை நிரூபணமாகியது.

1948 ம் ஆண்டு முதல் கிறிஸ்தவ நிறுவனங்களனால் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக இடம்பெற்ற இந்தக் கடைகெட்ட அநியாயங்கள்  தேசிய ஒடுக்குமுறையினதும் அடக்குமுறையினதும் உச்சக்கட்டமாகும்.
 "இந்த அநியாய நடவடிக்கைகளிலும் மக்கள் படுகொலைகளிலும் கிறிஸ்தவ முதலாளி வர்க்கத்தின் சகல பகுதியினரும், சகல கிறிஸ்தவ சிங்களத் தலைமைத்துவமாக கொண்ட கட்சிகளும் இராணுவமும் சிறைச்சாலை உட்பட கிறிஸ்தவ முதலாளித்துவ அரசின் அனைத்து நிறுவனங்களும், அனைத்து  கிறிஸ்தவ Church  களும்,  முழு கிறிஸ்வ முதலாளித்துவ பத்திரிகை குழுக்களும்,குட்டி முதலாளித்துவத்தின் கிறிஸ்தவ தலை குழம்பிய உயர்தட்டினரும் அவரவர்களின் விதிமுறைகளுக்கு இணங்க தொடர்புபட்டுள்ளனர் என இந்தக் படுகொலையின் உள்ளடக்கத்தை கவனமாக ஆராயும்போது நிருபணமாகும்.


கிறிஸ்தவ சிங்களத் லைவர்கள் திட்டம் தீட்டி கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது பெளத்த எழுச்சி ஏற்பட்டு கிறிஸ்தவம் அகப்பட்டு மரணிக்காமல் தடுப்பதற்காக  தமிழர்கள் மீது திசை திருப்பி பல இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்தனர்.


No comments:

Post a Comment