1983 கறுப்பு ஜூலை என்பது கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜெயவர்த்தனாவினால் திட்டம் தீட்டி நடாத்தி முடிக்கப்பட்ட தமிழ் இன அழிப்பு.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை இராணுவத் துப்பாக்கி முனையில் பயமுறுத்தி பணியவைக்க முடியாது போனதால் கதிகலங்கிப் போன கிறிஸ்தவ ஐக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ தலைவர்கள், தென்மாகாணங்களில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களிடம் பழிவாங்கும் காட்டுமிராண்டி தயாரிப்புக்களில் இறங்கினர். ஜாதிக சேவக சங்கத்தில் சேர்ந்து கொண்டிருந்த காடையர்கள் உட்பட்ட குண்டர் கும்பல்கள்,
கிறிஸ்வ ஐக்கிய தேசிய கட்சியினால் 1947 ம் ஆண்டு முதல் என்றுமே கொலைகள் செய்வதற்கு அஞ்சாத சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கினார்கள் அந்த காடையர்கள் உட்பட்ட குண்டர் கும்பல்கள் சிறில் மத்யூவின் தலைமையில் இனவாதத் தூபம் போட்டுக்கொண்டு தென்மாகாணங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வீடுகளின் முகவரிகளை திரட்டிக்கொண்டு படு பயங்கரமான படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆயத்தமாகி வந்தார்கள்.
மனித இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப் பழக்கப்பட்ட இந்த கிறிஸ்வ இராட்சதப் படையணிகளுக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ-பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி கொலை செய்யப்பட்டவர்களை மரண விசாரணையோ அல்லது நீதி விசாரணையோ இல்லாமல் சுட்டெரிக்கப் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன.
இந்த இரத்தவெறி இனவாத தயாரிப்புகளுக்காக வீதியில் இறங்குவதற்கான உடனடி தருணத்தை, இராணுவப் படை அணிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதல் வழங்கியது. இதில் 13 படையினரும் ஒரு இரானுவ அதிகாரியும் ஜூலை 23ம் திகதி கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment