கடவுள் இருக்கிறனா என்ற உங்களின் கேள்வியானது கடந்த எழுபது வருடங்களாக தமிழகத்தில் தமிழர்களை நோக்கி அன்னிய ஆக்கிரமிப்பு வாதிகளான கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, லெனினிய, கம்யூனீச, சோசலீச, நாத்திகவாதிகள், திராவிடம் போலி தமிழ்த் தேசியவாதிகளின் தொடர்சியாக எழுப்பப்பட்ட கேள்வியாகும்.
சங்ககால தமிழனின் வாழ்வியல் நெறியை எதிர்பவன் பகுத்தறிவாதி ஆகமாட்டான். இயற்கையின் நியதியை, இயற்கையினொழுங்கமைப்பை உணர்ந்து, அவை அனைத்திற்கும் மூல ஆற்றலாக உள்ள கடவுளை ஏற்றுக்கொள்பவனே, உண்மையான பகுத்தறிவாதி.
கல்லை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால் நினைவு நாளின்போது மறைந்த தலைவர்களின் சமாதிக்கு மாலைகள் வணங்குவால் பகுத்தறிவு கண்டிரா?
வழிபடப்படும் விக்ரகங்கள் வெறும் கல் தானே என்பவர்களை ஒன்று கேட்கிறேன்.ஆத்திரத்தை அடக்கி அறிவுக்கு வேலை கொடுத்து ஆறஅமர பதில் அளியுங்கள்.
உங்கள் தாய் தந்தையரின் புகைப்படத்தை அது வெறும் பேப்பர்தானே என்று சொல்லிக் காலுக்கடியில்போட்டு மிதிக்கச் சொன்னால் செய்வீர்களா?
மறைந்த தலைவர்களின் நினைவு நாளின்போது சமாதியை காலுக்கடியில் போட்டு மிதிக்கச் சொன்னால் செய்வீர்களா?
பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் உங்கள் கையாள் காற்றைக் பிடித்து காட்ட முடியுமா? அத்துடன் உங்களது பகுத்தறிவு பகலவன் காற்றைக் பிடித்து கண்ணால் கண்டவரா?
நீங்கள் காணுகின்ற கனவைக் கையிலே பிடித்து காட்டமுடியுமா?
உங்களின் பகுத்தறிவு அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டமுடியுமா?
உங்களாள் முடியாத ஒன்றை அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா?
உணர்ந்து அறிய வேண்டியதை உணர்ந்துதான் அறிய வேண்டும். பார்த்து அறிய வேண்டியதைப் பார்த்துத்தான் அறிய வேண்டும். நக்கி அறிய வேண்டியதை நக்கித் தான் அறிய வேண்டும். எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் அறிய வேண்டும். திராவிடபகுத்தறிவு‘நான் ஒரு நாத்திகன்’ என்று சொல்லிக் கொள்வது சமூக அந்தஸ்து ஆகிவிட்டது.
https://jaffnaviews.blogspot.com/2020/07/blog-post_1.html
அருளகம்
No comments:
Post a Comment