சங்கமமைத்து தமிழையும், சைவத்தையும் வளர்த்த எம் முப்பாட்டன் சிவன் பேணிப்பாதுகாத்த சைவக்குடிகள் நாம்.ஆனால் இன்று எமது கண்முன்னே எம் தமிழினம் சிதைந்து போவதை கண்டும் எதுவும் செய்வதற்கு திராணியற்றவர்களாய் நிற்கின்றோம்.ஏன் எம் தமிழினத்திற்கு இத்தகைய இன்னல்கள் என்று என்றேனும் சிந்தித்ததுண்டா?
வேற்று மதத்தவர்கள் தங்களது மதத்தை துரிதகதியில் பரப்புவதற்கு அரசியல் வாக்குரிமையை கேடயமாய் பயன்படுத்திக் கொண்டிருக்க மறுபக்கம் எம் தமிழினமோ அறியாமையும், அசமந்த போக்குடனும் இருப்பதே இதற்கு காரணம்.
போலி அரசியல்வாதிகளையும், போலித் தமிழ்த் தேசிய கட்சிகளையும் உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் ஆகும். இதை அறிந்தும் அதற்கான நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே சைவ சமய அழிப்பாளர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களின் ஆலோசனைகளை கேட்டு செயல் செயல்படுகின்றனர். இதன் காரணமாகவே தமிழர்களுக்கும் தமிழ் கலாச்சார பண்பாடுகளுக்கும் சைவ ஆலயங்களுக்கும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை கிறிஸ்தவ இஸ்லாமிய அட்டூளியங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன.
எமது நாட்டைப் பொறுத்த வரையில் பாராளுமன்ற தேர்தல், மாகாணசபை தேர்தல், உள்ளூராட்சி சபைத்தேர்தல், சர்வஜன வாக்குரிமை என 04 விதமான தேர்தல் முறைமை இருந்தும் நாம் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதே உண்மை.
அரசியல் தேர்தல் களத்தில் வடகிழக்கு தமிழரின் வாக்கு வீதமென்பது வெறும் 65% மே என்பது வேதனைக்குரிய விடயமென்பதோடு வாக்குரிமை ரீதியாக தமிழ் மக்களின் அறிவாற்றல் எந்தளவிற்கு வளர்க்கப்பட வேண்டுமென்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.
கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் எடுத்துக்கொள்வோமேயானால் அவர்கள் தங்கள் வாக்குகளில் 95%ற்கும் அதிகமான வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் வழங்குகின்றார்கள். காரணம் தங்களது மதத்தை அரசியல் ரீதியாக ஸ்திரம் பெற வைக்க சிறந்த கருவியாக தேர்தல் உள்ளது என்பதை அறிந்தமையினாலேயே ஆகும்.
வாக்களிப்பு மூலம் தங்களது பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக அவர்களது மத ஸ்தலங்களூடான அறிவுரைகளை கேட்டும், பின்பற்றியும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.
மேலும், அவர்கள் பாராளுமன்றத்தினூடே கிடைக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள தங்கள் மதம் சார்ந்து எத்தனை உறுப்பினர்களை அனுப்பமுடியுமோ அதை சிதறடிக்கப்பட்ட தமிழர்கள் வாக்குகளூடாகவும் சாதித்து விடுகிறார்கள்.
ஆனால், எம் தமிழினமோ வாக்கு சிதறலினாலும், அசமந்த போக்கினாலும் தங்களது வாக்குரிமைகளை சரியாக பயன்படுத்தாமல் அழிவின் விளிம்பிற்கே வந்து விட்டார்கள்.
மேலும் மதம் மாற்றிகளான கிறிஸ்த, இஸ்லாமிய ர்கள் சைவத்தை அழிக்க இந்து ஆலயங்களை குறிவைத்து தாக்குவதும், சைவ சின்னங்களை அழிப்பதும்,தமிழர்களான் சொத்துக்களை நாசம் செய்து சைவதமிழ் பிள்ளைகளை காதல் எனும் பெயரில் ஏமாற்றி அவர்களையும் மதம் மாற வைத்து சொல்லொண்ணா கீழ்த்தரமான காரியங்களை செய்கின்றார்கள்.
இவை அனைத்தும் தடுக்கபட வேண்டுமெனில் இனி நாம் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்கும் சைவ தமிழ் பிரதிநிதிகளுக்கே அளிக்கப்பட வேண்டும் அப்போதுதான் எம்மோடு சேர்த்து எம் சைவமும் பாதுகாக்கப்படும்.
கிறிஸ்தவ இஸ்லாமிய அட்டூளிய அழிவுகளில் இருந்து தமிழர்களை காப்பதற்காக ஆலயங்களில் தொண்டுகள் செய்கின்றவர்கள், ஆலயங்களின் திருப்பணிகளுக்கு உதவி செய்பவர்களுக்கே நீங்கள் உங்களின் வாக்குகளை வழங்க வேண்டும்.இதற்காக சைவ வாக்கு பலத்தை அதிகரிப்போம்.
தமிழர்களை காப்பதற்காகவும் உங்களின் ஆலயங்களை காப்பதற்காகவும் சைவ ஆலய குருமாா்களும் நிா்வாக சபையினரும் தொண்டர்சபையினரும் உங்கள் ஊரில் உள்ள மக்களை தலைமையேற்று வழிநடாத்தும் அதேவேளை சகல தேர்தல்களிலும் உங்களின் ஆலய தொண்டர்களை நிறுத்தி வெற்றியடைய செய்யுங்கள் இதற்காக சகல ஆலயங்களையும் உள்ளடக்கிய ஆலய ஒன்றியம் ஒன்றை உருவாக்க வேண்டியது உங்களின் திருப்பணி தொண்டின் இதுவும் ஒன்றாகும்.
வாக்காளப் பெருமக்களே! எங்கள் தேசம் விடியவேண்டும் எழுந்து வாருங்கள்!! ஏமாற்று அரசியல் வாதிகளையும், அவர்களையும் உருவாக்கி வழிநடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களையும் விரட்ட வேண்டும். துணிந்து வாருங்கள்! விடியலுக்காக அணிதிரள்வோம்!! தமிழர்களே நீங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் ஆனால் சைவ வேட்பாளர்களுக்கே வாக்களிப்போம்.
No comments:
Post a Comment