Wednesday, 22 July 2020

கிட்டு, கஜேந்திரகுமார் மோதல்

விடுதலைப் போராட்டம் புலிகள் பற்றி விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கேணல் கிட்டுவுக்கும்,  தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சி தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திக்கும்  இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள்.

இன்று போலித் தேசியம் பேசும் கஜேந்திரகுமார் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்திய ஒருவர். தனது வாக்குக்காக ஒவ்வொரு முறையும் மக்கள் அவரது உண்மைத் தன்மை கண்டு நிராகரிக்க நிராகரிக்க விடுதலைப் புலிகளின் பெயரை வைத்து, மக்களின் உள்ளுணர்வுகளைத் தட்டியெழுப்பி போலித் தேசியம் செய்துவருகின்றார் கஜேந்திரகுமார். 

முன்பு அரசியலுக்குள் வருமுன்னர் வெளிநாட்டில் அவர் வாழ்ந்த காலத்தில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் போராளிகளை பின்வருமாறு கேவலமாக வர்ணித்து இருந்தாா்.

யுத்த களத்தில் குடும்பங்களுக்கு பிள்ளைகளை வைத்து பராமரிப்பதற்கு ஒருகஷ்டமான நிலையில் போராட்டத்தில் பிள்ளைகள் இணைந்தார்கள். ௩- ௪ பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் அவர்களைப் பார்த்துக்கொள்வதற்குக் கஷ்டமான சூழ்நிலையிலேயே பிள்ளைகளைப் போராட்டத்துக்கு அனுப்பரினார்கள். கஷ்டத்தில் பிள்ளைகளுக்கு அடித்தார்கன். இதனால்தான் பிள்ளைகள் போராட்டத்தில் இணைந்தார்கள் என்று எமக்காகப் போராடி தன்னுயிர்களை எமக்காக மாய்த்த போராளிகளைக் கொச்சைப்படுத்தி பேசினாா்.இதுதான் கஜேந்திரகுமாரின் உண்மை முகம். 

அறிவுடைய பெரும்பாலான மக்கள் இந்த உண்மைத்தன்மையைப் புரிந்தமையால்தான் அவரைத் தொடர்ந்தும் நிராகரித்து வந்துள்ளார்கள். இன்று இவரையும், இவரது தலைமையினா அரசியலில் கட்சியையும் உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கத்தோலிக்க மதநிறுவனமே. இதன் காரணமாகவேதமிழர்களுக்கும், பெளத்த மத்திற்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கும் நோக்கத்தில் போராட்டங்களை உருவாக்கு வழிநடாத்தி இருந்தாா்கள்.




வீடியோ ஆதாரம் இனைப்பு.
https://drive.google.com/file/d/1VhNtX-Xopk1KmV60TBOzd4yymwjJuiij/view




No comments:

Post a Comment