Tuesday, 18 May 2021

மெழுகுதிாி திணிப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பு.

  ஒரு இனத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழிப்பதன் ஊடாக அந்த இனத்தை அழிக்க முடியும் என்று இனவழிப்பு கோட்பாட்டின் ஒருபிாிவு தெளிவாக குறிப்பிடுக்கின்றது.

இனவழிப்பு கோட்பாட்டிற்கு இணங்க தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளுடன் எந்தவிதமான தொடர்புகளும் அற்ற கிறிஸ்தவதேசிய பண்பாட்டின் அடையாளமான மெழுகுதிரியை  திணிப்பதன் ஊடாக தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழிப்பதன் ஊடாக தமிழினத்தை அழிக்க முடியும் என்பதற்காகவே போலி தமிழ் பெயர்களுடன் தமிழர் அமைப்புகளாக இயங்குகின்ற   கிறிஸ்தவ நிறுவனங்கள் செயல்படுகின்றன.

பல இலட்சம் தமிழர்களை கொலை செய்து, பலகோடி பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தும், பலகோடி பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்தும்  தமிழர்களின் அரசை வீழ்த்தியும்  தமிழர்களை அடிமைப்படுத்தியும் போர்த்துக்கீச கத்தோலிக்கம் தமிழர்கள் மீது திணித்ததே கத்தோலிக்க கிறிஸ்தவ பண்பாட்டின் அடையாளமான மெழுகுதிரி கலாச்சார பண்பாடு ஆகும்.

.தமிழ் கலாச்சார பண்பாடுகளுடன் வாழ்ந்து  இறந்தவர்களுக்கு  தமிழ் கலாச்சார பண்பாடுகளுடனும் தொடர்பற்ற முறையில் மெழுகுதிரியை கொழுத்தி   ஏந்தி  அஞ்சலி செய்வது இறந்தவரின்ஆன்மாவை அவமதிக்கும் செயல் ஆகும்.

சிங்கள பேரினவாதம் தமிழர்களை அழிக்கின்றது என்று கூக்கிரல் போடுபவர்கள் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளுடன் எந்தவிதமான தொடர்புகளும் அற்ற கிறிஸ்தவதேசிய பண்பாட்டின் அடையாளமான மெழுகுதிரியை  திணித்து கலாச்சார பண்பாட்டின் ஊடாக தமிழின அழிப்புகளை மேற்கொள்ளுகின்றனர்.

தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அடையாளக் கூறுகளையும் தமிழின் கலாச்சார பண்பாட்டின் அடையாளக் கூறுகளையும் தெரியாத மூடர்கூட்டங்கள் இன்று தமிழின அழிப்புகளை செய்கின்றனர்.





No comments:

Post a Comment