Sunday, 30 May 2021

" எந்த எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்? .

விளக்கு தீபம் ஏற்றும்போதுநெற்றியில் திருநீறும்  பொட்டுடனும் பெண்களாயின் தலையில் பூமாலை சூடிக் கொண்டு மங்களகராமாக நின்று விளக்கில்  தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது அது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது.  அப்பொழுது ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந் தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

மெழுகுதிரியை கொழுத்தி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதும், சாப்பாத்து  அல்லது செருப்புடன் நின்று குத்து விளக்கு ஏற்றுவது தெய்வ குற்றம் ஆகும். அத்துடன் தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பும் ஆகும்.

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கின்றது. ஆகவே மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். குடும்பத்தில் செல்வம் பெருகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.

 எண்ணெயில் எரிகின்ற சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் சக்தி உண்டு. 

அவ்வாறு  ஈர்க்கும் போது நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள். இதுவே விளகேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடையும் அதேவேளை  நம்மையும் நம் குடும்பத்தையும் பிடித்த நோய்களை நீக்கும்  நவகிரகங்களின் பரிபூரண அருள் கிடைக்கும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது.

அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து  மோட்ச பெருவாழ்வை வழங்கும், நினைத்தது நடக்கும், கடன் அடையும், குடும்ப வருமானம் அதிகரிக்கும். அத்துடன் நற்பலனை அடைகின்றன.நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பெண் குழந்தைகள் நெய் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்

தேங்காய் எண்ணெய் – குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு ஏற்படும். விளக்கெண்ணெய்    - புகழ் உண்டாகும், குலதெய்வ ஆசி உண்டாகும். வேப்ப எண்ணெய் – கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.  இலுப்பை எண்ணெய் - உடல் வளம் பெரும். வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் - சகல ஐஸ்வர்யங்களும் ஏற்படும். நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் - செல்வம் சேரும். விளக்கெண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய் – அன்னை பராசக்தி அருள் உண்டாகும், கிரகதோஷம் நீங்கும்.  

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது.

"சந்திர நாடி, குளுமையைத் தருகிறது. சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது

கிறிஸ்தவ மெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும் . ஆஸ்துமா, மார்புபுத்துநோய்  போன்ற பல வியாதிகள் உருவாவதற்கு மெழுகுவத்திதான்  தாய் என்று விஞ்ஞான ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.







No comments:

Post a Comment